Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பீரங்கியில் பயணம் செய்த முதல் பெண்மணியும், எண்ணிலடங்கா சாதனைகளும்! | Pratibha Patil History in Tamil

Gowthami Subramani Updated:
பீரங்கியில் பயணம் செய்த முதல் பெண்மணியும், எண்ணிலடங்கா சாதனைகளும்! | Pratibha Patil History in TamilRepresentative Image.

ஆரம்ப காலத்தில் பெண்களுக்கான சுதந்திரங்கள் பறிக்கப்பட்டு, அவர்களுக்குத் தனி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுப் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்தனர். ஆனால், நாளடைவில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு பெண்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டின் அவர்களது பங்களிப்பும் பெருகியது. ஒவ்வொரு துறையிலும், பெண்கள் தங்களுக்கான பணிகளை ஆற்றி சுதந்திரப் பெண்மணிகளாகத் திகழ்கின்றனர். அந்த வகையிலேயே, இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவி வகித்த முதல் பெண் பிரதீபா சிங் பாட்டில் ஆவார். இவரைப் பற்றிய விவரங்களை இதில் காணலாம்.

பீரங்கியில் பயணம் செய்த முதல் பெண்மணியும், எண்ணிலடங்கா சாதனைகளும்! | Pratibha Patil History in TamilRepresentative Image

பிறப்பு

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவரான பிரதீபா பாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜல்கோன் மாவட்டத்தில் இருக்கும் நத்கோன் கிராமத்தில் 1934 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பிறந்தார். இவரது த்னஹ்திய பெயர் ஸ்ரீ நாராயண ராவ் ஆவார். பிரதீபா பாட்டில் அவர்கள், ஜூலை 07, 1065 ஆம் நாள் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராஜேந்திர சிங் என்ற மகனும், ஜோதி ரத்தோர் என்ற மகளும் உள்ளனர்.

பீரங்கியில் பயணம் செய்த முதல் பெண்மணியும், எண்ணிலடங்கா சாதனைகளும்! | Pratibha Patil History in TamilRepresentative Image

கல்வி

பிரதீபா பாட்டில் அவர்களது கல்வியைக் குறித்துப் பார்க்கலாம். இவர், ஜல்கானில் உள்ள எம்.ஜே.கல்லூரியில் முதுகலைமானி (எம்.ஏ) பட்டம் பெற்றார். அதன் பிறகு, மும்பையில் உள்ள அரசு சட்ட கல்லூரியில் எல்.எல்.பி பட்டம் பெற்று வக்கீலாகவும் பயிற்சி பெற்றார்.

பீரங்கியில் பயணம் செய்த முதல் பெண்மணியும், எண்ணிலடங்கா சாதனைகளும்! | Pratibha Patil History in TamilRepresentative Image

பணி

இவர், 1962 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை மகாராஷ்டிரா மாநில அவையில் உறுப்பினராக விளங்கினார். அதன் பின், 1991 முதல் 1996 வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். அதன் பிறகு, 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் நாள் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். இந்தப் பதவியில் 2007 ஜூன் 23 ஆம் நாள் வரை இருந்தார்.

பீரங்கியில் பயணம் செய்த முதல் பெண்மணியும், எண்ணிலடங்கா சாதனைகளும்! | Pratibha Patil History in TamilRepresentative Image

முதல் பெண் குடியரசுத் தலைவர்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவின் முதல் குடிமகளாக, நாட்டைக் காக்கும் குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்தவர் என்ற பெருமையைக் கொண்டுள்ளார். அதன் படி, 2007 ஜூலை 25 ஆம் நாள் இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து, இவர் 2012 ஜூலை 25 ஆம் தேதி வரை குடியரசுத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.

பீரங்கியில் பயணம் செய்த முதல் பெண்மணியும், எண்ணிலடங்கா சாதனைகளும்! | Pratibha Patil History in TamilRepresentative Image

பாட்டில் புகழ்

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற இவர், இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார். அது மட்டுமில்லாமல், பெண்கள், குழந்தைகள் நலன் மற்றும் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டோர்களின் நலனுக்காகவும் போராடினார். மக்களின் நலனுக்காக, இது போல பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அதில் வெற்றி பெற்றார்.

பீரங்கியில் பயணம் செய்த முதல் பெண்மணியும், எண்ணிலடங்கா சாதனைகளும்! | Pratibha Patil History in TamilRepresentative Image

பெண்களின் நலனுக்காக

மேலும், பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் இவர் இயற்றிய “ஷ்ரம் சாதனா டிரஸ்ட்” என்ற அமைப்பும் ஒன்று. இந்த அமைப்பானது பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலன்களை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்பு ஆகும்.

மேலும், இவர் ஏழை குழந்தைகள், பின்தங்கிய வகுப்பு குழந்தைகள் பள்ளி பயில்வதற்காக, தொழில்துறைப் பயிற்சிப் பள்ளிகள் அமைத்துக் கொடுத்தார். பெண்கள் யாரையும் சார்ந்திருக்கக்கூடாது என்ற நோக்கத்தில், ஏழை எளிய பெண்களுக்காக கணினி, இசை, மற்றும் தையல் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்தார்.

பீரங்கியில் பயணம் செய்த முதல் பெண்மணியும், எண்ணிலடங்கா சாதனைகளும்! | Pratibha Patil History in TamilRepresentative Image

சாதனைகள்

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் கிருஷி விக்யான் கேந்திரா என்ற விவசாயிகளுக்காக பயிற்சி மையத்தை உருவாக்கினார். தனது சொந்த மாவட்டமான ஜல்கான் மாவட்டத்தில் கிராமப்புற இளைஞர்களுக்காக பொறியியல் கல்லூரி ஒன்றை நிறுவினார். இது போல, பல்வேறு நிறுவனங்கள் அமைத்து, மக்களின் நலனுக்காக சிறப்பான சேவைகளைச் செய்து வருகிறார்.

பீரங்கியில் பயணம் செய்த முதல் பெண்மணியும், எண்ணிலடங்கா சாதனைகளும்! | Pratibha Patil History in TamilRepresentative Image

பீரங்கி பயணம்

பிரதீபா தேவிசிங் பாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் சுதர்ஸ்ன் சக்தி என்ற ராணுவப் பயிற்சியில் நடந்தது. இதனை, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், ஏ.கே.அந்தோணி போன்றோர் பார்வையிட்டனர். இந்தப் பயிற்சியில் டி-90 மற்றும் டி-72 ரக பீரங்கிகள் களமிறங்கின. இதனைப் பார்வையிடச் சென்ற பிரதீபா பாட்டில் போர்கால உடை அணிந்திருந்தார். மேலும், டி-90 ரக பீரங்கியை ராணுவத் தளபதியான வி.கே.சிங்குடன் சேர்ந்து பயணித்தார். இது, பீரங்கியில் பயணித்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையும் கிடைக்கப் பெற்றது.

இது போல, பற்பல சாதனைகளைப் புரிந்தவரான பிரதீபா தேவிசிங் பாட்டில், இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். இது பெண்களுக்கிடையே உள்ள தைரியத்தை தூண்டுவதுடன், அவர்களின் முன்னேற்றத்தைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்