Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த டிகிரி முடிச்சிருக்கிங்களா.? உங்களுக்கு அரசு வேலை கிடையாது.. வெளியான அதிர்ச்சி தகவல்! | Which Degree is Best for Government Jobs

Gowthami Subramani Updated:
இந்த டிகிரி முடிச்சிருக்கிங்களா.? உங்களுக்கு அரசு வேலை கிடையாது.. வெளியான அதிர்ச்சி தகவல்! | Which Degree is Best for Government JobsRepresentative Image.

அரசு வேலை என்பது பலருக்குக் கனவாகவே  இருந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் கீழ் இயங்கும் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கென அறிவிப்புகள் வெளியிடப்படும். இந்த அறிவிப்புகளின் கீழ், அந்தந்த பதவிகளுக்கான தகுதியும் நிர்ணயிக்கப்படும். அதன் படியே, அரசு வேலைகளில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், 21 கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் சில பட்டப்படிப்புகள் அரசு வேலைக்கு உகந்தவை அல்ல என தமிழ்நாடு அரசு உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இந்தப் பட்டப்படிப்புகளை முடித்தவர்கள் தனியார் வேலையில் மட்டுமே பணி பெற முடியும்.
 

இந்த டிகிரி முடிச்சிருக்கிங்களா.? உங்களுக்கு அரசு வேலை கிடையாது.. வெளியான அதிர்ச்சி தகவல்! | Which Degree is Best for Government JobsRepresentative Image

தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு பல்வேறு புதிய படிப்புகள் பல்கலைக்கழகங்களால் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்தப் படிப்புகளில் பட்டம் பெறுபவர்கள் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் போது, சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் போது சிக்கல்கள் ஏற்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதனை நீக்க, எந்தெந்த படிப்புகள் ஏற்கனவே உள்ள பட்டப்படிப்புகளுக்கு இணையானவை இல்லை என பட்டியலை வெளியிட்டுள்ளது.
 

இந்த டிகிரி முடிச்சிருக்கிங்களா.? உங்களுக்கு அரசு வேலை கிடையாது.. வெளியான அதிர்ச்சி தகவல்! | Which Degree is Best for Government JobsRepresentative Image

எம்.எஸ்.சி வேதியியலுக்கு இணையில்லாத படிப்புகள்

கோவை தொழில்நுட்பக் கல்லூரி - எம்.எஸ்.சி. பயன்முறை வேதியியல்
திருச்சி நேஷ்னல் கல்லூரி - எம்.எஸ்.சி பகுப்பாய்வு வேதியியல்
பாரதியார் பல்கலைக்கழகம் - ஆர்கானிக் வேதியியல்
திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் - ஆர்கானிக் வேதியியல்
பனாரஸ் ஐஐடி - எம்.டெக்.தொழில்துறை வேதியியல்
வாரணாசி இந்து பல்கலைக்கழகம். - எம்.டெக்.தொழில்துறை வேதியியல்
பாரதிதாசன் பல்கலைக்கழகம் - எம்.எஸ்.சி. வாழ்க்கை அறிவியல்

பி.ஏ. எம்.ஏ. ஆங்கிலத்திற்கு இணையில்லாத படிப்புகள்

அண்ணாமலை பல்கலைக்கழகம் - எம்.ஏ.மொழியியல்
கோவா பல்கலைக்கழகம் - பி.ஏ.ஆங்கிலம்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் - பி.ஏ.ஆங்கிலம்
பெங்களூரு பல்கலைக்கழகம் - பி.ஏ.ஆங்கிலம்

பி.காம்., எம்.காம்.-க்கு இணையில்லாத படிப்புகள்

சென்னை பல்கலைக்கழகம் - பி.காம். கார்ப்பரேட் செக்ரட்டர்ஷிப்
அழகப்பா பல்கலைக்கழகம் - எம்.காம். கார்ப்பரேட் செக்ரட்டர்ஷிப்

இந்த டிகிரி முடிச்சிருக்கிங்களா.? உங்களுக்கு அரசு வேலை கிடையாது.. வெளியான அதிர்ச்சி தகவல்! | Which Degree is Best for Government JobsRepresentative Image

எம்.எஸ்.சி. கணினி அறிவியலுக்கு இணையில்லாத படிப்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் - எம்.எஸ். தகவலமைப்பு மற்றும் பயன்பாடு

எம்.எஸ்.சி இயற்பியலுக்கு இணையில்லாத படிப்பு

விஐடி பல்கலைக்கழகம் - எம்.எஸ்.சி. மின்னணுவியல்

பி.எஸ்.சி இயற்பியலுக்கு இணையில்லாத படிப்பு

அழகப்பா பல்கலைக்கழகம் - பி.எஸ்.சி மின்னணுவியல்

இ.எம்.ஜி.யாதவா மகளிர் கல்லூரி - பி.எஸ்.சி.இயற்பியல், தகவல் தொழில்நுட்பம்

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் - பி.எஸ்.சி.அறிவியல்

புதிதாக அறிமுகம் செய்யப்படும் பட்டப்படிப்புகள், அதன் மூலப்படிப்புகளின் பாடத்திட்டத்தில் 70% பாடங்களைக் கொண்டிருந்தால் மட்டுமே அரசுப் பணியின் கல்வித்தகுதியின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும். அனைத்து மாணவர்களும் தாங்கள் படிக்கும் புதிய படிப்புக்கான முழுத் தகவல்களையும் தெரிந்து கொள்ளும் வகையில், அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் அறிவிப்புப் பலகையில் தகவலை வெளியிடவும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்