Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் ஐபோன் உதிரிபாக ஆலை.. டாடா வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. 45,000 பெண் பணியாளர்களைச் சேர்க்கும் டாடா…

Gowthami Subramani November 08, 2022 & 17:10 [IST]
தமிழகத்தில் ஐபோன் உதிரிபாக ஆலை.. டாடா வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. 45,000 பெண் பணியாளர்களைச் சேர்க்கும் டாடா…Representative Image.

டாடா குழுமமானது 18 முதல் 24 மாதங்களுக்குள் 45,000 பெண் தொழிலாளர்கள் அமர்த்தப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் ஐபோன் உதிரிபாக ஆலை.. டாடா வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. 45,000 பெண் பணியாளர்களைச் சேர்க்கும் டாடா…Representative Image

பெண்களுக்கான சூப்பர் அறிவிப்பு

டாடா குழுமம், தென்னிந்தியாவில் ஐபோன் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் தனது தொழிற்சாலையில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. டாடா நிறுவனம், Apple Inc-ல் இருந்து அதிக வணிகத்தை ஈட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக அதன் தொழிற்சாலையை விரிவுபடுத்த உள்ளது. அதன் படி, டாடா நிறுவனம் தனது புதிய உற்பத்திக் கோடுகளின் படி, தமிழகத்தில் தொழில் நகரமான ஒசூரில் உள்ள ஆலையில் 18 முதல் 24 மாதங்களுக்குள் 45,000 பெண் தொழிலாளர்களை பணியமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஐபோன் உதிரிபாக ஆலை.. டாடா வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. 45,000 பெண் பணியாளர்களைச் சேர்க்கும் டாடா…Representative Image

கேஸ், உதிரிபாகங்கள் தயாரிக்க

ஒசூர் தொழிற்சாலையில் ஐபோன் ஹவுசிங் . அஸ்ஸெம்பெல் செய்யக் கூடிய கேஸ்கள், உதிரிபாகங்கள் போன்றவை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அதன் படி, தற்போது சுமார் 10,000 தொழிலாளர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. இவற்றில் பெரும்பாலானோர் பெண் தொழிலாளர்கள் ஆவர். ஒசூர் ஆலையானது, கடந்த செப்டம்பர் மாதத்தில் 5000 பெண்களை பணியமர்த்தியுள்ளது. இந்த ஊழியர்களில் வட மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

தமிழகத்தில் ஐபோன் உதிரிபாக ஆலை.. டாடா வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. 45,000 பெண் பணியாளர்களைச் சேர்க்கும் டாடா…Representative Image

ஊதியத் தொகை

ஒசூர் தொழிற்சாலையில் தற்போது பெண்களுக்கான ஊதியம் என ரூ.16,000 வழங்கப்படுகிறது. இது இந்திய தொழில்துறை தொழிற்சாலைகளில் வழங்கக் கூடிய ஊதியத்தின் சராசரியை விட கிட்டத்தட்ட 40% அதிகம் ஆகும். அது மட்டுமல்லாமல், தொழிலாளர்களுக்கு வளாகத்தினுள் இலவசமாக தங்குமிடம் மற்றும் ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும், ஊழியர்களுக்கு டாடா குழுமம் தொழில்துறை சார்ந்த மேம்பட்ட கல்வி மற்றும் பயிற்சியை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி பங்குதாரராக இருப்பது ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி ஆகும். இது தனது முக்கிய சீன ஆலை கோவிட்-ஆல் பாதிக்கப்பட்டதில் இருந்து ய்ன்றும் முழுமையாக மீளாத நிலையில் உற்பத்தி தடைபட வாய்ப்பிருக்கிறது. இதனால், விழாக்கால விற்பனையில் குறைபாடு வர வாய்ப்பிருப்பதால் கவலையில் உள்ளது.

தமிழகத்தில் ஐபோன் உதிரிபாக ஆலை.. டாடா வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. 45,000 பெண் பணியாளர்களைச் சேர்க்கும் டாடா…Representative Image

ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி பங்குதாரராக இருப்பது ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி ஆகும். இது தனது முக்கிய சீன ஆலை கோவிட்-ஆல் பாதிக்கப்பட்டதில் இருந்து ய்ன்றும் முழுமையாக மீளாத நிலையில் உற்பத்தி தடைபட வாய்ப்பிருக்கிறது. இதனால், விழாக்கால விற்பனையில் குறைபாடு வர வாய்ப்பிருப்பதால் கவலையில் உள்ளது.

இதன் காரணமாக, சீனாவைத் தாண்டி இந்தியாவில் ஐபோன் பாகங்கள் தயாரிப்பது அதிகரித்துள்ளது. மேலும், இது பிரதமர் மோடியின் ஊக்கத் தொகை திட்டத்தால் உந்தப்படுகிறது. இது தெற்காசிய நாட்டிலிருந்து ஐபோன் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு உதவியாகவும் உள்ளது.

தமிழகத்தில் ஐபோன் உதிரிபாக ஆலை.. டாடா வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. 45,000 பெண் பணியாளர்களைச் சேர்க்கும் டாடா…Representative Image

மேலும், டாடா நிறுவனமானது தனித்தனியாக இந்தியாவில் ஐபோன்களை அசெம்பிள் செய்ய விரும்பும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியின் கூட்டு முயற்சியை நிறுவுவதற்கு விஸ்ட்ரானுடன் டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதைப் பயன்படுத்தி, தமிழக தொழிற்சாலையில், உதிரி பாகங்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்