Mon ,Apr 22, 2024

சென்செக்ஸ் 73,694.27
605.94sensex(0.83%)
நிஃப்டி22,362.00
215.00sensex(0.97%)
USD
81.57
Exclusive

Erode Day 2022: ஈரோடு மக்களே.. மஞ்சள் மாநகரம் ஈரோடு பிறந்த கதை தெரியுமா உங்களுக்கு?

Nandhinipriya Ganeshan September 15, 2022 & 18:30 [IST]
Erode Day 2022: ஈரோடு மக்களே.. மஞ்சள் மாநகரம் ஈரோடு பிறந்த கதை தெரியுமா உங்களுக்கு?Representative Image.

ஈரோடு மாநகராட்சி:

110 கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்த நம் ஈரோடு நகரம் இப்போது மாநகராட்சி என்று கம்பீரமாக காட்சியளிக்க காரணமாக இருந்தவர் பெரியார். 1917 ஆம் ஆண்டு முதல் 1920 ஆம் ஆண்டு வரை ஈரோடு நகர்மன்ற தலைவராக பெரியார் பொறுவகித்தார். அப்போது ஈரோடு நகரத்தை மாநகரமாக்கவேண்டும் என்பதற்காக ஈரோட்டையும், வீரப்பன்சத்திரத்தையும் இணைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முதன் முதலில் கொண்டு வந்தார். 

அதன்பின்னர் 90 வருடங்கள் கழித்து முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களால், வீரப்பன்சத்திரம், ஈரோடு, காசிபாளையம், பெரிய சேமூர், பி.பி.அக்ரஹாரம், சூரம்பட்டி, திண்டல், சூரியம்பாளையம் பேரூராட்சிகள், வில்லரசம்பட்டி உள்ளிட்ட கிராம ஊராட்சிகளை ஒன்றிணைத்து ஈரோடு மாநகரமாக உருவெடுத்தது. 

கொடிவேரி அணையின் சிறப்பு, வரலாறு..

ஈரோடு பெயர் காரணம்:

பிச்சைக்காரன் பள்ளம் ஓடை மற்றும் பெரும்பள்ளம் ஓடை என்ற இரண்டு ஓடைகளின் நடுவே அமைந்துள்ளதால் இந்த ஊருக்கு "ஈரோடை" என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், ஈரோடை "ஈரோடு" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

அதுமட்டுமல்லாமல், பிரம்மாவின் தலையை காளி உடைத்தபோது ஈர ஓடு விழுந்த இடம் ஈரோடு என்பதாலும், ஆருத்ர கபாலீசுவரர் கோவில் கொண்டு இருப்பதாலும் இது ஈரோடு என்று சொல்லப்படுவதாக புராணக்கதைகள் தெரிவிக்கின்றன. 

ஈரோட்டில் சிறப்பு வாய்ந்த பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில்! சக்தி வாய்ந்த காளி!

வரலாறு:

ஈரோடு மாநகரத்தை பொறுத்தவரை 1000 ஆண்டுகளுக்கும் மேலாக வரலாறு கொண்டது. கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்,கி.பி.1799 ல் நொய்யல் வடக்கு மாவட்டம் பவானியை தலைநகராக கொண்டு கோவை, அவிநாசி, திருப்பூர், சத்தியமங்கலம் பகுதிகளை ஆங்கிலேயர்களால் நிர்வகிக்கப்பட்டபோது ஒரு கிராமமாகவும், பின்னர் கி.பி.1804 ல் ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக கோவையை தலைநகராக கொண்டு மாவட்டம் உருவாக்கினர். 

அப்போது டணாய்க்கன்கோட்டை, சத்தியமங்கலம், காங்கேயம், பவானி, கொள்ளேகால், சேவூர், பல்லடம், தாராபுரம், நீலகிரி ஆகிய வருவாய் வட்டங்கள் உருவான போது, ஈரோடும் ஒரு தாலூகாவாக அமைந்தது. பின்னர் பெருந்துறை தாலூகாவுடன் இணைக்கப்பட்டது.

இந்த நிலைகள் எல்லாம் கடந்து கி.பி.1871-ம் ஆண்டு ஈரோடு நகரம் தனித்துவம் பெற்றது. ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு ஈரோடு நகர பரிபாலன சபை கடந்த 16-09-1871 அன்று அமைக்கப்பட்டது. ஈரோடு நகர பரிபாலன சபையின் முதல் தலைவராக ஏ.எம்.மெக்ரிக்கர் என்பவர் நியமிக்கப்பட்டார். அவருடன் 7 நியமன உறுப்பினர்களும் பதவி ஏற்றனர். 

ஈரோடு தினம்:

இவ்வாறு ஈரோடு நகர சபை உருவாகி 150 ஆண்டுகள் நிறைவடைந்து நாளை (வெள்ளிக்கிழமை) 151-வது ஆண்டு தொடங்குகிறது. அந்த நாளை தான் நாம் ஒவ்வொரு ஆண்டு "ஈரோடு தினம்" ஆக கொண்டாடி வருகிறோம். அரசு சார்பில் ஈரோடு தினம் கடைபிடிக்க எந்த அறிவிப்பும் இல்லை என்றாலும், ஈரோடு மக்கள் செப்டம்பர் 16 ஆம் தேதி ஈரோடு தினமாக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். 

அண்ணா பிறந்த செப்டம்பர் 15 ஆம் தேதி, பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி ஆகிய இரண்டு தேதிகளுக்கு நடுவில் வருவது இந்த தினத்தை மேலும் சிறப்பாக்குகிறது. 

ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பிரமிக்க வைக்கும் வரலாற்று கதை..

சிறப்பு: 

ஈரோட்டில் பெயர் பெற்ற காங்கேயம் காளையின் சிறப்பையும், ஜல்லிக்கட்டில் ஏறு தழுவலை போற்றும் வகையில் ரயில் நிலையம் அருகே காளை தழுவும் வீரன் சிலையும் அமைந்துள்ளது. ஜல்லிக்கட்டு பிரபலமாக நடக்கும் மதுரை, புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட இப்படி ஒரு சிலை எங்கும் இல்லை என்பதும் சிறப்பாகும்.

அரசியலிலும்,பொருளாதாரத்திலும் திருப்புமுனையை ஏற்படுத்தும் நகரமாக ஈரோடு உள்ளது. தற்போது ஜவுளிக்கு பெயர் பெற்ற கனி மார்க்கெட்டும், மஞ்சளுக்காக இந்திய அளவில் பெயர் பெற்ற மாவட்டமாகும் உருவெடுத்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்