Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆண்ட்ரியாவின் குரலில் சிறந்த 5 பாடல்கள்! | Andrea jeremiah best songs

UDHAYA KUMAR Updated:
ஆண்ட்ரியாவின் குரலில் சிறந்த 5 பாடல்கள்! | Andrea jeremiah best songsRepresentative Image.

அழகான முகமும் அட்டகாசமான உடலமைப்பும், இனிமையான குரலும், நல்ல குணமும் ஒரே நபரிடம் இருக்க முடியுமா? ஆண்ட்ரியா அதற்கு உதாரணம். பார்க்க அழகாக  இருக்கிறார். நல்ல அழகான முகம், இனிமையான குரலும், வேற லெவலில் இறங்கிப் பாடும் திறனும் கூடவே நல்ல குணமும் கொண்ட ஒரு நடிகை, பாடகி. அவருக்கு இன்று பிறந்தநாள். 

கடந்த 1985ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி சென்னை அரக்கோணத்தில் பிறந்தவர்தான் ஆண்ட்ரியா ஜெர்மையா.  நடிகையாகவும், பின்னணி பாடகியாகவும் மிகவும் பிரபலமானவர் இவர். 

அன்னயும் ரசூலும்,  விஸ்வரூபம், தடக்கா, என்றென்றும் புன்னகை,  அரண்மனை,  லோகம், தோப்பில் ஜோபான், அவள், வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் ஆண்ட்ரியா.  இவரின் குரல் வளத்தால் ஹிட் ஆன டாப் 5 பாடல்களை இந்த பதிவில் காணவிருக்கிறோம். 

ஆண்ட்ரியாவின் குரலில் சிறந்த 5 பாடல்கள்! | Andrea jeremiah best songsRepresentative Image

துப்பாக்கி

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி படத்தில் வரும்  கூகுள் கூகுள் பண்ணிப் பாத்தேன் பாடல்தான் பெரும்பாலும் ஆண்ட்ரியா ஒரு பின்னணி பாடகி என பலர் மனதிலும் பதிந்த ஒரு நிகழ்வாக இருக்ககூடும். காரணம் அப்போதுதான் பொதுவெளியிலேயே இவர் பாடகியாக முன்னிறுத்தப்பட்டார். அதிலும் விஜய் பாடல், மிகப் பெரிய ஹிட் ஆனதால் இவரை பலரும் அடையாளம் கண்டுகொண்டனர். 

ஆண்ட்ரியாவின் குரலில் சிறந்த 5 பாடல்கள்! | Andrea jeremiah best songsRepresentative Image

வெடி

விஷால், சமீரா நடிப்பில் வெளிவந்த படமான வெடி திரைப்படத்தில் வரும் காதலிக்க பெண் ஒருத்தி பார்த்துவிட்டேனே பாடல், ஆண்ட்ரியாவின் குரல் வேற லெவலுக்கு பாராட்டப்பட்டது. அப்படி இறங்கி பாடியிருப்பார். மீசை இல்லா மின்மினி நான் என அவர் பாடும்போது அவர் குரல் மட்டுமல்ல நாமும் உருகிவிடுவோம் 

ஆண்ட்ரியாவின் குரலில் சிறந்த 5 பாடல்கள்! | Andrea jeremiah best songsRepresentative Image

ஆயிரத்தில் ஒருவன்

ஆண்ட்ரியா, ரீமாசென், கார்த்தி நடித்துள்ள ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வரும் 
உம் மேல ஆசத்தான் பாடலை, தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் இணைந்து பாடியிருப்பார் ஆண்ட்ரியா. அவரின் குரலில் ஆங்கில வார்த்தைகளைக் கேட்பதற்கே அலாதியானதாக இருக்கும். 
 

ஆண்ட்ரியாவின் குரலில் சிறந்த 5 பாடல்கள்! | Andrea jeremiah best songsRepresentative Image

கோவா

கோவா படத்தில் வரும் இதுவரை இல்லாத உணர்விது பாடலில் ஆண்ட்ரியா அழகாக கவனம் ஈர்த்திருப்பார். மெலோடி போலத் தெரிந்தாலும் பாடுவதற்கு கொஞ்சம் கடினமான பாடலாகத்தான் இது அமைந்திருக்கும். 

ஆண்ட்ரியாவின் குரலில் சிறந்த 5 பாடல்கள்! | Andrea jeremiah best songsRepresentative Image

மதராசப்பட்டினம்

மதராசப்பட்டினம் படத்தில் வரும்  பூக்கள் பூக்கும் தருணம் பாடலில் ரூப் குமார், ஹரிணி ஆகியோருடன் சேர்ந்து ஆண்ட்ரியாவும் பாடியிருப்பார். பாடலைக் கேட்டால் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல தோன்றும். ஹரிணிக்கு பெரும்பகுதி என்றாலும் ஆண்ட்ரியாவும் அசத்தியிருப்பார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்