Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெண்கள் குளிப்பதை எட்டிப்பார்த்த அமுதவாணன்..? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு… ரெட்கார்டு வழங்க வாய்ப்பு..?

Editorial Desk Updated:
பெண்கள் குளிப்பதை எட்டிப்பார்த்த அமுதவாணன்..? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு… ரெட்கார்டு வழங்க வாய்ப்பு..? Representative Image.

விஜய் தொலைக்காட்சியில் முக்கியமான நிகழ்ச்சிகளில் "பிக்பாஸ்" நிகழ்ச்சியும் ஒன்று, பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை அந்த அளவுக்கு "பிக்பாஸ்" நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி, இப்பொழுது பிக்பாஸ்  சீசன்-6 ஒளிபரப்பாகி வருகிறது கடந்த பிக்பாஸ் சீசன்களை போல் இந்த சீசனும்  மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது, ஆனால் மற்ற சீசன்களை விட இந்த சீசனில் சண்டைகளும் புதிய பிரச்சனைகளும் வந்து கொண்டே தான் இருக்கிறது, ஒவ்வொரு  வார இறுதியிலும் அந்த பஞ்சாயத்துகளைத் தீர்த்துவைப்பது தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் அவர்களின் வேலை என்றே சொல்லலாம்.

பெண்கள் குளிப்பதை எட்டிப்பார்த்த அமுதவாணன்..? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு… ரெட்கார்டு வழங்க வாய்ப்பு..? Representative Image

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமானவர்

இந்த வாரம் அதே வரிசையில் புதிய சர்ச்சைக்குரிய பிரச்சனையாக மக்களால் குற்றம் சாற்றப்படுபவர் விஜய் தொலைக்காட்சியின் பலநிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள நகைச்சுவை நடிகர் "அமுதவாணன்", இவர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமானவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே, இயக்குநர் பாலா அவர்களின் தாரைதப்பட்டை  படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதன் பிறகு இவர்க்கு வாய்ப்பு ஏதும் கிடைக்காத நிலையில் இந்த பிக்பாஸ் சீசன்-6 கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் குளிப்பதை எட்டிப்பார்த்த அமுதவாணன்..? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு… ரெட்கார்டு வழங்க வாய்ப்பு..? Representative Image

அமைதியிலிருந்து அதிரடியான அமுதவாணன் :

இந்த பிக்பாஸில் ஆரம்பத்தில் தனக்கு இயல்பாக வரும் நகைச்சுவையின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வந்து அமுத வாணன் திடீரென அதிரடியாகத் தனது விளையாட்டை மாற்றி போட்டியாளர்கள் அனைவரையும் வியப்பிலாற்றினார், மேலும் கடந்த வாரங்களில்   பல சண்டைகளில்  முக்கியமாகக் கலந்துள்ளார். அதிகப்படியாக பிக்பாஸ்  வீட்டில் இருக்கும் விக்கிரமனுக்கும் அமுத வாணனுக்கும் சண்டைகள் வந்துள்ளன.

பெண்கள் குளிப்பதை எட்டிப்பார்த்த அமுதவாணன்..? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு… ரெட்கார்டு வழங்க வாய்ப்பு..? Representative Image

பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய பிரச்சனை

இவர் மீது புதிய குற்றச்சாட்டாக பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்கள் குளிப்பதை எட்டிப்பார்த்ததாக ஒரு வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. இதைப் பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் இவரைக் கண்டித்துவருகிறார்கள், மேலும் இவர் செய்தாக கூறப்படும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு "ரெட்கார்ட் " கொடுத்து போட்டியிலிருந்து உடனடியாக வெளியேற்ற  வேண்டும் என்று பலரும் தங்கள் கருத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் விதிகளை மீறிச் செயல்படும் போட்டியாளர்களை  ரெட்கார்ட் மூலம்  வெளியேற்றலாம்.

இந்த வார இறுதில் அமுத வாணன் மீது செலுத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை கமல்ஹாசன் அவர்கள் விசாரித்துத்  தெளிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அப்படி அமுத வாணன் செய்த தவறு நிரூபிக்கப்பட்டால்  இந்த சீசனில் ரெட்கார்ட் மூலம் வெளியேற்றப்படும் முதல் நபர் அவர் என்பது குறிப்பிடதக்கது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்