Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ராபர்ட் மாஸ்டரின் செயலால் ரச்சிதா கணவர் குமுறல்…! கடைசியில் ராபர்ட்க்கு கிடைத்த ஆப்பு.. பிக் பாஸ் வீட்டை விட்டே வெளியேற்றம்..?

Editorial Desk Updated:
ராபர்ட் மாஸ்டரின் செயலால் ரச்சிதா கணவர் குமுறல்…! கடைசியில் ராபர்ட்க்கு கிடைத்த ஆப்பு.. பிக் பாஸ் வீட்டை விட்டே வெளியேற்றம்..?Representative Image.

பிக்பாஸ் சீசன்-6  ஆரம்பித்ததிலிருந்தே அதன் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான், ஒவ்வொரு வாரமும்  புதிய  பிரச்சினைகள் வந்த வண்ணமே உள்ளன, அந்த வரிசையில் கடந்த சில தினங்களாக ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரச்சித்தாவின் பிரச்சனை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. இந்த வாரம் அந்த பிரச்சனை முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராபர்ட் மாஸ்டரின் செயலால் ரச்சிதா கணவர் குமுறல்…! கடைசியில் ராபர்ட்க்கு கிடைத்த ஆப்பு.. பிக் பாஸ் வீட்டை விட்டே வெளியேற்றம்..?Representative Image

ராபர்ட் மாஸ்டரின் காதலி இல்லை கிரஷ்

ராபர்ட் மாஸ்டர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த உடனே நான் இந்த நிகழ்ச்சியில் மற்றவர்களைப் போல் புகழையோ வாய்ப்பையோ தேடி வரவில்லை நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்த காரணமே வேறு என்று கூறி வந்தார். பிறகு பிக்பாஸ் வீட்டில் சகப்போட்டியாளரான சரவணன் மீனாட்சி தொடர் புகழ் ரச்சித்தாவை  தனது கிரஷ் என்றும் அவர்களைப் பிடிக்கும் என்றும் பிக்பாஸ்  வீட்டில் இருக்கும் அனைவரிடமும் கூறினார்.இப்பொழுது பிக்பாஸ் வீட்டில்   ரச்சித்தாவிற்கு  காதல் தொல்லை கொடுப்பதையே தனது முழுநேர வேலையாக வைத்துள்ளார். இதை அந்த வீட்டில் உள்ள அனைவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், சமூகவலைத்தளங்களில் பிக்பாஸ் ரசிகர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

ராபர்ட் மாஸ்டரின் செயலால் ரச்சிதா கணவர் குமுறல்…! கடைசியில் ராபர்ட்க்கு கிடைத்த ஆப்பு.. பிக் பாஸ் வீட்டை விட்டே வெளியேற்றம்..?Representative Image

ரச்சித்தாவின் கணவர் தினேஷின் கோபம்

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ரச்சித்தா ராபர்ட் மாஸ்டர் செயலை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தார்,பிறகுச் சாகப்போட்டியாளர்கள்  ரச்சித்தாவிடம் இதைப் பற்றிக்  கேட்டபொழுது எனக்கும் எனது கணவருக்கும் சிறிய பிரச்சனை  அதனால் பிரிந்து இருக்கிறோம் எனக்கு மனதில் இந்த போட்டியை வெல்வது தவிர எந்த எண்ணமும் இல்லை என்றார். இதற்கு அடுத்து ரச்சித்தாவின் கணவர் தினேஷ் அவரது கருத்தைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தார், அதில் அவர் ராபர்ட் மாஸ்டரின் செயல் மிகவும் தவறானது என்றும் அவரது செயலால் தனது மனைவி ரச்சித்தாவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுவதாகக் கூறியுள்ளார்.இதனால் அவரை பிக்பாஸிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கூறி வந்தார், ஆனால் ராபர்ட் மாஸ்டர் நாமினேஷனில் வராமலே இருந்தார் ,கடந்த வாரம் தான் முதல்முறை நாமினேட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ராபர்ட் மாஸ்டரின் செயலால் ரச்சிதா கணவர் குமுறல்…! கடைசியில் ராபர்ட்க்கு கிடைத்த ஆப்பு.. பிக் பாஸ் வீட்டை விட்டே வெளியேற்றம்..?Representative Image

ராபர்ட் மாஸ்டரை எலிமினேஷன் செய்ய தினேஷ் செய்த காரியம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வார எலிமினேஷனில் இருந்து தப்பித்த ராபர்ட் மாஸ்டரை இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள்  ரச்சித்தா உட்பட அனைவரும் நாமினேட் செய்தார்கள். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட  ரச்சித்தாவின் கணவர் தினேஷ் தனது சமூகவலைத்தள பக்கத்தில் ஒரு பதிவின் மூலம் பிக்பாஸ் ரசிகர்களிடையே ஒரு வேண்டுகோளை வைத்தார். அதில் ராபர்ட் மாஸ்டரின் இந்த மோசமான செயலுக்காக  அவரை எலிமினேட் செய்யுங்கள் என்று கூறினார் அதற்குப் பல பிக்பாஸ் ரசிகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ராபர்ட் மாஸ்டரின் செயலால் ரச்சிதா கணவர் குமுறல்…! கடைசியில் ராபர்ட்க்கு கிடைத்த ஆப்பு.. பிக் பாஸ் வீட்டை விட்டே வெளியேற்றம்..?Representative Image

ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினாரா..??

இந்த வார பிக்பாஸ் ஓட்டிங் அடிப்படையில் ராபர்ட் மாஸ்டர் கடைசி இடத்தில் இருப்பதாகத் தெரியவருகிறது.ராபர்ட் மாஸ்டருக்கு ரசிகர்கள் யாரும் ஓட்டுப் போடாமல் விட்டதற்கு ரச்சித்தாவின் கணவர் தினேஷின் பதிவு ஒரு காரணமா என்று கேள்வி எழுந்துள்ளது.மேலும் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினாரா  இல்லையா என்பதை வரும் ஞாயிற்றுக்கிழமை தொடரைப் பார்த்து தெரிந்துகொள்ளுவோம், அதற்கு முன்பே சமூக வலைத்தளங்களில் அது குறித்த தகவல் வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்