Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Parole Movie Review Tamil : ரத்தம் தெறிக்கும் களத்தில் தாய்ப்பாசம்.... ப்ரோல் திரை விமர்சனம்..!

Manoj Krishnamoorthi November 12, 2022 & 12:40 [IST]
Parole Movie Review Tamil : ரத்தம் தெறிக்கும் களத்தில் தாய்ப்பாசம்.... ப்ரோல் திரை விமர்சனம்..!Representative Image.

நம் ஆழ் மனதில் சில கருத்துகள் தவறாக பதியும் என்பது மறுக்கத்தக்கது இல்லை. அதுபோல வடசென்னை என்றாலே ரவுடிஸம் என்று சினிமா காட்டியது, இந்த கருத்துக்கு எதிராக பல எதிர்க்கருத்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் தமிழ் சினிமாவில் சென்னையை மையமாக கொண்டு வெளியாகும் ரவுடிஸம் படத்தில் வடசென்னை கொண்டு வருவது வழக்கமாக மாறியுள்ளது. மீண்டும் வடசென்னை என்றாலே ரவுடிஸமா..? என்ற கேள்வியை உருவாக்கி வெளிவந்த 'பரோல்' திரைப்படத்தின் விமர்சனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பரோல் திரை விமர்சனம் (Parole Movie Review Tamil)  

Parole Movie Review Tamil : ரத்தம் தெறிக்கும் களத்தில் தாய்ப்பாசம்.... ப்ரோல் திரை விமர்சனம்..!Representative Image

கதைக்களம் (Parole Story In Tamil)

இறந்த தாயின் விருப்பமான மகன் லிங்காவை (அண்ணனை) சிறையிலிருந்து பரோலில் எடுக்க தம்பி கார்த்திக்கேயன் போராடுகிறார். இந்த போராட்டமும் இதில் இருக்கும் பகைமையின் பின்னணியே 'பரோல்' படத்தின் கதை ஆகும். 

Parole Movie Review Tamil : ரத்தம் தெறிக்கும் களத்தில் தாய்ப்பாசம்.... ப்ரோல் திரை விமர்சனம்..!Representative Image

திரை பார்வை (Parole Movie Review Tamil)  

வடசென்னை என்றாலே ரவுடிஸம் மற்றும் கெட்ட வார்த்தை என்ற கருத்தில் படம் முழுவதுமாக வடசென்னையில் நகர்கிறது. சிறு வயதிலே சீர்திருத்தப் பள்ளியில் இருக்கும் லிங்கா எப்படி வெறிபிடித்த கொலை குற்றவாளியாக மாறுகிறான் என்பது அப்பாவி சிறுவர்களின் யதார்த்தமாகும். ஆனால் அதை காட்சிப்படுத்த அதீத ஆபாசம் புகுத்தியது படத்திற்கு தொய்வாக அமைந்தது. 

Parole Movie Review Tamil : ரத்தம் தெறிக்கும் களத்தில் தாய்ப்பாசம்.... ப்ரோல் திரை விமர்சனம்..!Representative Image

இறந்த தாயின் இறுதி சடங்கை நிறைவேற்ற அண்ணனை பரோல் எடுக்க தம்பி போராடுவது கதைக்குள் நம்மை இழுத்து செல்கிறது. அம்மா, மகன் செண்டிமெண்ட் மற்றும் அண்ணன் தம்பி உறவு படத்திற்கு மிகப்பெரிய பலமாகும்.   

Parole Movie Review Tamil : ரத்தம் தெறிக்கும் களத்தில் தாய்ப்பாசம்.... ப்ரோல் திரை விமர்சனம்..!Representative Image

தான் சொல்ல வந்த கருத்தை இயக்குநர் கிளைமேக்ஸில் சொல்லிய விதம் டைரக்டர் ட்ச் ஆகும். படத்தில் கதாநாயகிகளுக்கு சிறிய பங்கு மட்டுமே இருந்தாலும், ரசிக்கும் படியான நடிப்பில் கல்பிகா மற்றும் மோனிஷா வெளிப்படுத்தியுள்ளனர். திரைக்கதைக்கு முக்கியமான பலம் என்றால் இசை, எடிட்டிங் ஆகும். 

திரைக்கதை- 3/5

இசை- 3.5/5

ஒளிப்பதிவு- 3.5/5

இயக்கம்-3.5/5

நல்ல கருத்தை சொல்ல எடுத்த முயற்சி பாராட்டுவதற்கு உரியதாக இருந்தாலும் அதை சொல்ல முன் வைத்த ஆபாசம் சற்று முகம் சுழிக்க வைக்கிறது. ஒரு ராவான கேங்ஸட்ர் படம் "பரோல்" ஆகும்.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்