Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

DSP Movie Review : திரைகதையில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு இப்படியா.... DSP திரைவிமர்சனம்!

Manoj Krishnamoorthi Updated:
DSP Movie Review : திரைகதையில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு இப்படியா.... DSP திரைவிமர்சனம்!Representative Image.

ஒரு நடிகனை வில்லன் மற்றும் கதாநாயகன் என்ற இரு பரிமாணத்திலும் ரசிகர்கள் கவரும் நடிகர்கள் குறைவு. அந்த வரிசையில் நிச்சியம் விஜய் சேதுபதி இடமுண்டு. தன் யதார்த்த வில்லத்தனத்தில் ஹீரோயிஸம் காட்டும் மாஸான நடிகன் விஜய் சேதுபதி ஆவார். பெரும்பாலும் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களில் சாமானியனாக திரையில் இருக்கும் சேதுபதி  மீண்டும் போலிஸ் அவதாரம் எடுத்த திரைப்படம் 'DSP' ஆகும். இவர் போலிஸ் கெட்டப்பில் இதற்கு முன் சேதுபதி என்னும் படத்தின் மூலம் திரையில் தோன்றினாலும், மீண்டும் காக்கி சட்டையில் காவல்துறை அதிகாரியாக வரும் இந்த திரைப்பட எப்படி இருக்கும்..? படத்தின் நிறை குறைகளை பார்க்கலாமா...!  வாருங்கள் செல்வோம் நம் 'DSP' ஒரு திரை பார்வை. 

DSP Movie Review : திரைகதையில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு இப்படியா.... DSP திரைவிமர்சனம்!Representative Image

கதைக்களம் (DSP Story In Tamil)

திண்டுக்கல் மாவட்டத்தில் பல அராஜகங்கள் செய்து பல ஆண்டுகளாக ஊரை தன் கட்டுப்பாட்டில் வந்திருக்கும் வில்லன். வில்லனை அழித்து நியாயத்தை காக்கும் ஹீரோ என்ற வழக்கமான ஆக்ஸன் ஃபார்முலா தான்.

DSP Movie Review : திரைகதையில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு இப்படியா.... DSP திரைவிமர்சனம்!Representative Image

திரை பார்வை (DSP Movie Review Tamil)

கமர்ச்சியல் கதை என்றால் ஹீரோ வில்லனை வெல்வது தான் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. ஆனால் இதற்கு விதிவிலக்காக சில கமர்சியல் மூவிகள் வித்தியாசமான கதையுடன் வந்தும் மாபெரும் வெற்றி பெற்றதும் உண்டு. 

வழக்கமான கதை திரைக்கதையாக கொண்டாலும் தன் கண்கவரும் நடிப்பால் ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. குறிப்பாக வில்லன்  (பிரபாகர்)கதாபாத்திரத்தின் அழுத்தம் ஹீரோவின் (வாஸ்கோடகாமா) மாஸுக்கு இணையாக இருப்பது கவர்ந்துள்ளது. போலீஸ் அதிகாரியாக நடிக்கும் விஜய்சேதுபதி மற்றும் சிங்கம்புலியின் காமினேஷன் திரையில் நன்றாக ஒர்கவுட் ஆகியுள்ளது. 

மிரட்டலான சண்டை காட்சிகள் மற்றும் வழக்கமான செண்டிமெண்ட் ஃபார்முலமும் இந்த படத்திற்கு கை கொடுத்துள்ளது. ஆனால் திரைக்கதையில் ஆரம்பத்தில் இருக்கும் வேகம் இரண்டாம் பகுதியில் குறைவு சற்று சலிப்பை உருவாக்கிவிடுகிறது. இருப்பினும் செண்டிமெண்ட், காமெடி போன்றவை ஓரளவு திரைக்கதையை நகர்த்துகிறது. 

திரைப்படத்தின் முக்கியமான பாடிட்வாக காமெடி உள்ளது.  பல இடங்களில் புகழ், சிங்கம்புலி போன்றவர்களின் நகைச்சுவை கதைக்கு கை கொடுத்துள்ளது. படத்தில் அனைவரையும் கவரும் ஒரு விஷயமாக இருப்பது விஜய் சேதுபதியின் பெயர் "வாஸ்கோடகாமா" ஆகும்.  இமானின் இசை திரைப்படத்தை வேறு பரிமாணத்தில் காட்டுகிறது. 

திரைக்கதை- 2.75/5

ஒளிப்பதிவு- 3.5/5

இசை- 3.5/5

ஆக்‌ஷன்- 3.75/5 

இயக்கம்- 3/5

மொத்தத்தில், ஒரு ராவான ஹீரோ வில்லன் மோதலை பிரிதிபளிக்கும் கமர்சியல் ஃபார்முலாவில் பாஸான திரைப்படம் DSP ஆகும். - DSP Movie Review

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்