Tue ,May 28, 2024

சென்செக்ஸ் 75,170.45
-220.05sensex(-0.29%)
நிஃப்டி22,888.15
-44.30sensex(-0.19%)
USD
81.57
Exclusive

ஜனனி ரிட்டர்ன்ஸ்...அப்பத்தாவின் கேம் ஆரம்பம்...தவிக்கும் குணசேகரன்! செம்ம பிளாட் ட்விஸ்ட்

Priyanka Hochumin November 21, 2022 & 17:00 [IST]
ஜனனி ரிட்டர்ன்ஸ்...அப்பத்தாவின் கேம் ஆரம்பம்...தவிக்கும் குணசேகரன்! செம்ம பிளாட் ட்விஸ்ட்  Representative Image.

தினமும் பரபரப்பான திருப்பங்களுடன் சூடுபிடிக்கும் எதிர்நீச்சல் சீரியல் மகளின் பேராதரவை பெற்று வருகிறது. படிக்காத நான்கு அண்ணன் தம்பிகளை திருமணம் செய்து கொண்டு தங்களின் கனவுகளை அளித்து விட்டு சமயலறையில் முடங்கி கிடைக்கும் மருமகள்கள். அதில் மூன்று பேர் தங்களின் வாழ்க்கை இப்படி தான் என்று பழகி வாழ்ந்துகொண்டிருக்கும் போது கடைசி மருமகளான ஜனனி தன்னுடைய கனவு லட்சியம் தான் முக்கியம் என்று போராடும் கதை பல பெண்களின் கனவுகளின் பிரதிபலிப்பாகும்.

ஜனனி ரிட்டர்ன்ஸ்...அப்பத்தாவின் கேம் ஆரம்பம்...தவிக்கும் குணசேகரன்! செம்ம பிளாட் ட்விஸ்ட்  Representative Image

சக்தியின் சந்தேகத்தால் அவனை விட்டு பிரிந்து தன்னுடைய கனவை நிறைவேற்ற புறப்படும் ஜனனி. தன்னுடைய வீட்டில் இருக்கும் மற்ற மருமகள்கள் வாழ்வில் வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்று ஜனனியிடம் பேசி வீட்டுக்கு கூட்டிட்டு வரும் அப்பத்தா. வந்த உடனே எனக்கு இந்த சொத்துல 40% பங்கு இருக்கு அதுனால நான் என்ன வேணாலும் செய்வேன் என்று செம்ம ட்விஸ்ட் அரங்கேறியுள்ளது. இத்தனை நாட்களாக பேசாத அப்பத்தா இப்போது குணசேகரன் குடும்பத்தினரை லெஃப்ட் ரைட்டு வாங்குகிறார். மிரண்டு போன நான்கு அண்ணன் தம்பியும் ஆடி போய் நிற்கின்றனர்.

ஜனனி ரிட்டர்ன்ஸ்...அப்பத்தாவின் கேம் ஆரம்பம்...தவிக்கும் குணசேகரன்! செம்ம பிளாட் ட்விஸ்ட்  Representative Image

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சக்தியை தூண்டி விட்டு ஜனனியை வீட்டை விட்டு வெளியேற்ற பிளான் பண்றாங்க. ஆனால் அந்த பிளான் ஃபிளாப் ஆகிடுச்சு. ஜனனி சக்தியிடம் நான் இன்னும் 6 மாசம் இங்க இருந்து எனக்கு வேண்டியதை செஞ்சிக்க போறேன். இது நீங்க என்னோட வாழ்க்கைய நாசமாக்குணத்துக்கான நஷ்ட ஈடா நினைச்சுக்கோங்கன்னு சொல்லிட்டாங்க. அதுக்கு அப்புறம் உங்களுக்கு விவாகரத்து கொடுத்துட்டு நான் இங்க இருந்து போய்டுவேன்னு சொல்லிட்டாங்க.

ஜனனி ரிட்டர்ன்ஸ்...அப்பத்தாவின் கேம் ஆரம்பம்...தவிக்கும் குணசேகரன்! செம்ம பிளாட் ட்விஸ்ட்  Representative Image

இப்ப அப்பத்தாவோட பிளான் என்னென்னா ஜனனி மூலமா வீட்ல இருக்குற மத்த மூன்று மருமகளுக்கும் தெயிரியத்தை கொண்டு வந்து அவங்க கனவுகளை நிறைவேத்த வைக்குறது தான். அதுக்கு ஏத்த மாறி புருஷன்களை தாண்டி ஜனனி கிட்ட பேச முயற்சிக்கிறாங்க. காலைல வேலை தேடி கிளம்புற ஜனனி, எனக்காக இந்த வீட்ல யாரும் எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டு போறாங்க. தன்னுடைய மாமியார் நம்ப வீட்ல சாப்பாடு சாப்டுட்டு எவளோ ஒருத்திக்காக சொத்தை பேசுறதெல்லாம் நல்லாவா இருக்குன்னு சொல்ல. உடனே நம்ப அப்பத்தா நீ மட்டும் என்ன ஒழுங்கா, என்னோட பிச்சைல சாப்பிட்டு கொழுத்து போய் இருக்க நீ எல்லாம் பேசாதன்னு சொல்றாங்க. அடுத்து அப்பத்தாவை காலி பண்ண என்ன பண்லாம்னு யோசிச்சிட்டு இருப்பாங்களா படிக்காத பிரதர்ஸ் பாக்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்