Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நான் பயங்கரமா சரக்கடிப்பேன் ஆனா தனுஷ்ட்ட அது இல்ல..! - சீக்ரெட் சொன்ன ரோபோ ஷங்கர்

Aruvi Updated:
நான் பயங்கரமா சரக்கடிப்பேன் ஆனா தனுஷ்ட்ட அது இல்ல..! - சீக்ரெட் சொன்ன ரோபோ ஷங்கர்Representative Image.

சென்னை: நான் பயங்கரமாக சரக்கடித்துக்கொண்டிருந்தேன். ஆனால் தனுஷ் அதை நிறுத்திவிட்டார் என்று நடிகர் ரோபோ ஷங்கர் தெரிவித்திருக்கிறார்.

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவையால் பலரையும் கவர்ந்தவர் ரோபோ ஷங்கர். விஜயகாந்த் போல் அச்சு அசலாக உடல்மொழியையும், மிமிக்ரியையும் கொடுத்து அதகளமும் செய்தார்.

நான் பயங்கரமா சரக்கடிப்பேன் ஆனா தனுஷ்ட்ட அது இல்ல..! - சீக்ரெட் சொன்ன ரோபோ ஷங்கர்Representative Image

சின்னத்திரையில் ஜொலித்தால் வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கேற்ப திரைப்படங்களிலும் அறிமுகமானார் ரோபோ ஷங்கர். அதன்படி தனுஷுடன் மாரி, எழில் இயக்கத்தில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், பாலாஜி மோகன் இயக்கத்தில் வாயை மூடி பேசவும் தொடர்ந்து பல படங்களில் நடித்த ரோபோ ஷங்கர் அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் நடித்தார்.

நான் பயங்கரமா சரக்கடிப்பேன் ஆனா தனுஷ்ட்ட அது இல்ல..! - சீக்ரெட் சொன்ன ரோபோ ஷங்கர்Representative Image

சின்னத்திரை போலவே வெள்ளித்திரையிலும் ரோபோ ஷங்கர் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். ரோபோ ஷங்கர் நிறைய படங்களில் கமிட்டாகிவந்த சூழலில் திடீரென அவரது உடல் எடை ரொம்பவே சரிந்தது. ஆஜானுபாகுவாக இருந்த ரோபோ ஷங்கர் உடல் மெலிந்து பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சியளித்தார். அவரை பார்த்த பலரும் ரோபோ ஷங்கருக்கு என்னாச்சு என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப தொடங்கினார்.

மேலும் ரோபோ ஷங்கரின் உடல்நிலை மோசமானதற்கு குடிதான் காரணம் என்று பலர் பேசினர். உடல்நலம் தேறிய ரோபோ ஷங்கர் தனக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டது. இது எல்லோருக்கும் வரக்கூடியதுதான் என ஓபனாக பேசினார் ரோபோ.

நான் பயங்கரமா சரக்கடிப்பேன் ஆனா தனுஷ்ட்ட அது இல்ல..! - சீக்ரெட் சொன்ன ரோபோ ஷங்கர்Representative Image

இந்நிலையில் ரோபோ ஷங்கர் அளித்த பேட்டி ஒன்றில் தனுஷ் குறித்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “தனுஷ் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. வாழ்க்கை கொடுத்தார். அப்படித்தான் நான் சொல்வேன். மாரி ஷூட்டிங் ஸ்பாட்டில் பல விஷயங்களை நான் சேர்த்தேன். முக்கியமாக படத்தில் அவர் போட்டிருக்கும் கண்ணாடியை நான் தேர்வு செய்தேன். என்னிடம் முன்னாடி ஒரு பழக்கம் இருந்தது. அது என்னவென்றால் நான் நிறைய சரக்கு அடிப்பேன்.

நான் பயங்கரமா சரக்கடிப்பேன் ஆனா தனுஷ்ட்ட அது இல்ல..! - சீக்ரெட் சொன்ன ரோபோ ஷங்கர்Representative Image

ஆனால் தனுஷ் அதை மொத்தமாகவே நிறுத்திவிட்டார். எல்லோரும் ரிலாக்ஸுக்காக பார்ட்டி போன்ற சமயங்களில் குடிப்பார்கள். ஆனால் தனுஷ் அதையும் அவர் நிறுத்திவிட்டார்என்றார். அவரது பேட்டி இப்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

முன்னதாக அவர் அளித்திருந்த மற்றொரு பேட்டியில், எல்லோருக்கும் வரும் நோய்தான் எனக்கும் வந்தது. ஆனால் எனது கதை முடிந்துவிட்டதாகவே பலரும் கூறினார்கள் என உருக்கத்தோடு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்