Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,188.62
-300.37sensex(-0.41%)
நிஃப்டி21,888.80
-107.05sensex(-0.49%)
USD
81.57
Exclusive

"ஆல் இண்டியன்ஸ் ஆர் மை பிரத்தர்ஸ் ஆண்ட் சிஸ்டர்ஸ்" என்பதை உரைக்கும் காமெடி கலாட்டா பிரின்ஸ் படம் எப்படி இருக்கு…?

Manoj Krishnamoorthi October 21, 2022 & 11:30 [IST]
Representative Image.

சுதந்திரத்திற்கு மின் இந்தியாவிலே சில பிரட்டிகாரர்கள் மற்றும் பிரெஞ்சுகாரர்கள் தங்கிவிடுகின்றனர். சுந்தர இந்தியாவில்  ஒரு வெளிநாட்டு வாழ் குடும்ப பெண் ஜெஸிகாவை தேவக்கோட்டை இளைஞனுக்கு ஏற்படும் காதல் தான் பிரின்ஸ் திரைப்படமாகும்.  "ஆல் இண்டியன்ஸ் ஆர் மை பிரத்தர்ஸ் ஆண்ட் சிஸ்டர்ஸ்" என்ற டேக்கை முன்நிறுத்திய காமெடி கலாட்டா பிரின்ஸ் திரைப்படத்தின் சுவாரஸ்ய மற்றும் நிறை குறைகளை இந்த பதிவு எடுத்துரைக்கும். 

Representative Image

கதைக்களம் (Prince Movie Review Tamil)

தன் வாரிசுகள் காதல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் தந்தையின் மகனுக்கு வரும் காதல் என்ற மையக்கருவை கொண்டதாகும். இதில் உருவாகும் காதல் தான் ஹைலைட், இந்திய இளைஞனுக்கு பிரிட்டிஷ்கார பெண்ணுக்கும் உருவாகும் காதல் மற்றும் அதன் காமெடி கலாட்டா தான் 'பிரின்ஸ் கதை' கதை ஆகும்.  

Representative Image

திரை பார்வை (Prince Movie Review Tamil)

சமூக அறிவியல் வாத்தியாரான அன்பு (சிவகார்த்திகேயன்) அவர்களுக்கு ஆங்கில ஆசிரியை ஜெஸிகா (மரியா) மீது காதல் ஏற்படுகிறது. தன் வாரிசுகளின் காதல் தா எப்போதும் பச்சைக் கொடிதான் காட்டுவேன் என்ற குறிக்கொள் கொண்ட தந்தை (சத்யராஜ்) என காமெடி கலாட்டாவாக திரைப்படம் இருப்பது நம்மை சிரிப்பில் ஆழ்ந்துகிறது.

ஜாலியான வாத்தியார் என்ற கதாபாத்திரத்திற்கு சிவகார்த்திகேயன் தான் சரி என்பதை தன் கலகலப்பான நடிப்பில் உணர்த்தியுள்ளார். இவரின் நடிப்பு ரசிக்க வைத்தாலும் வழக்கமான  சிவா படம் போல தான் உள்ளது. பிரெஞ்சுக்கார பெண் என்றால் ஓகே பிரிட்டிஷ்காரி நோ என்ற காமெடி வில்லனாக சத்யராஜ் தன் நையாண்டி நடிப்பில் அனைவரையும் ஈர்த்துள்ளார்.

கதாநாயகனுக்கு ஏற்படும் காதல் தான் படத்தின் மையக்கரு என்பதை மிகவும் துல்லியமாக தமன் தன் இசையால் வெளிப்படுத்தியுள்ளார். முக்கியமாக லவ் பிஜிம் மற்றும் காமெடி டிராக்கில் ரசிகரை தன் இசையால் கட்டிப்போட்டுவிட்டார். 

படத்தில் காமெடி இருக்க வேண்டும் என்பதால் இயக்குநர் அனுதீப் முயன்று வெற்றி கொண்டாலும் கதையில் ஆழமான அழுத்தமான சீன்ஸ் இதுவும் இல்லாதது பிரின்ஸ் திரைப்படத்தை சாதாரண காமெடி படமாகவெ காட்சிப்படுத்தியுள்ளது. ஒரு சில இடத்தில் காமெடி தொய்வு அளித்தாலும் லல இடங்களில் வேறு சிந்தனையே இல்லாமல் சிரிக்க வைக்கும் அளவு கடகடவென ஓடுகிறது. 

கதை- 3/5

திரைக்கதை- 3.5/5

காமெடி- 4/5

இசை- 4/5

ஒளிப்பதிவு- 3.75/5

இயக்கம்- 3.5/5

தேசப்பற்று தந்தை பிரட்டிஷ்காரியை காதலிக்கும் மகன் எனக் காமெடி கலாட்டாவான பிரின்ஸ் திரைப்படம் குடும்பத்துடன் குதுக்கலமாக கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.

Also Read:-  Sardar Movie Review : சைலண்டாக சம்பவம் செய்யும் 'சர்தார்' ..... திரை விமர்சனம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்