Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

இந்த கஷாயத்த குடித்தால் எப்படியாபட்ட சளி, இருமலும் ஒரே நாளில் பறந்துப்போய்விடும்.. வெறும் நாலே பொருள் தான்..

Nandhinipriya Ganeshan October 30, 2022 & 10:00 [IST]
இந்த கஷாயத்த குடித்தால் எப்படியாபட்ட சளி, இருமலும் ஒரே நாளில் பறந்துப்போய்விடும்.. வெறும் நாலே பொருள் தான்..Representative Image.

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் கருப்பு மிளகுக்கு "Black Gold" என்ற செல்ல பெயரும் உண்டு. அதனால் தான் அதன் விலையும் அந்த ரேஞ்சில் இருக்கிறது. காரணம் இதில் இருக்கும் ஏராளமான மருத்துவ குணங்கள். அதிலும், நம் வீட்டில் யாருக்காவது சளி, இருமல் இருந்தால் நம்ம அம்மாக்கள் மிளகு ரசம் வைத்துக்கொடுப்பார்கள். ஏனென்றால், இதன் மருத்துவ குணங்களில் பிரதானமான பலனே சளி மற்றும் இருமலை போக்குவதே. எனவே, மழை மற்றும் குளிர் என இரண்டுமே மாறி மாறி இருப்பதால் நம்மில் பலருக்கும் எதிர்ப்பு சத்து என்பது குறைவாகவே இருக்கும். இதை சமாளிக்க இனி மிளகு ரசத்திற்கு பதிலாக இந்த மிளகு கஷாயத்தை செய்து குடித்து பாருங்கள், எப்படியாப்பட்ட சளியும் சட்டென்று குணமாகிவிடும். மிளகு கஷாயம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சானிட்டரி நாப்கின்களில் மறைந்திருக்கும் ஆபத்து.. தப்பிப்பது எப்படி? 

இந்த கஷாயத்த குடித்தால் எப்படியாபட்ட சளி, இருமலும் ஒரே நாளில் பறந்துப்போய்விடும்.. வெறும் நாலே பொருள் தான்..Representative Image

தேவையான பொருட்கள்:

1/4 கப் அளவிற்கு கருப்பு மிளகு 

துளசி 10 இலைகள்

2 டீஸ்பூன் அளவிற்கு பனை வெல்லம்

2 கப் தண்ணீர்

தலைவலிக்கு சூப்பரான டீ ரெசிபி.. இத குடிச்சி பாருங்க எப்படியாபட்ட தலைவலியும் காணாமல் போய்விடும்...

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து மிளகை கொட்டி வெடிக்கும் அளவிற்கு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

வறுத்த மிளகை ஆறவைத்து, மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். பின்பு, ஒரு பாத்திரத்தில் 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் நாம் அரைத்து வைத்திருந்த மிளகு, துளசி, பனை வெல்லம் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும். 

பின்னர், கொதி வந்தவுடன் ஒரு தட்டுபோட்டு மூடி 15 நிமிடங்கள் அதே மிதமான தீயில் கொதிக்க விடுங்கள். கடைசியாக, அதை வடிக்கட்டி வெதுவெதுப்பாக குடித்தால் இருமல், சளி, தொண்டைவலி, தொண்டை கரகரப்பு எல்லாம் நொடியில் குணமாகிவிடும். 

இனி வீட்டில் யாருக்காவது சளி, இருமல் இருந்தால் சிறிதும் யோசிக்காமல், இந்த மிளகு கஷாயத்தை போட்டுக் கொடுங்கள். இது சளியை போக்குவதோடு உடலுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது. மேலும், உடலில் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. 

குதிகால் வெடிப்பிற்கு சிம்பிளான வீட்டுவைத்தியம்.. இத மட்டும் செய்தால் போதும்.. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்