Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முதல் முறை உடலுறவின் போது இந்த 4 விஷயத்தை மறந்திட கூடாது..

Nandhinipriya Ganeshan November 15, 2022 & 18:00 [IST]
முதல் முறை உடலுறவின் போது இந்த 4 விஷயத்தை மறந்திட கூடாது..Representative Image.

பொதுவாக, ஆணோ பெண்ணொ முதல் முறையாக உடலுறவு வைத்துக்கொள்ளும் போது, அது கொஞ்சம் சிக்கலாகவே முடிந்துவிடுகிறது. இதற்கு காரணம் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருப்பதும், அதிகமாக தெரிந்திருப்பதும் தான். இதனால், அடுத்த முறை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விடுகிறது. எனவே, முதல் முறை உடலுறவில் என்ன செய்ய வேண்டும் என்று முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு, பெட்ரூம் பக்கம் செல்லுங்கள். 

முதல் முறையாக உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் வலியை குறைக்க டிப்ஸ்…

முதல் முறை உடலுறவின் போது இந்த 4 விஷயத்தை மறந்திட கூடாது..Representative Image

அதுவேற இதுவேற..

பலருக்கு பார்க்கும் படங்கள், ஆபாச விடியோக்கள், கேட்கும் கதைகள், நண்பர்களின் அனுபவங்கள் போன்றவற்றின் மூலம் உடலுறவு குறித்த பல விஷயங்கள் தெரிந்திருந்தாலும், முதல் உடலுறவு என்றால் ஒரு விதமான பதற்றம் தொற்றிக்கொள்ளும். அது ஒருபுறம் இருந்தாலும் கண்டதையும் பார்த்துவிட்டு, மனதில் பல எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டு, ஓ இது தானா? இப்படி தானா? என்று ஒரு வெறியுடனும் பார்ட்னரிடம் நடந்துக்கொள்ள கூடாது. அப்புறம் முதல் உறவே, முடிந்த போன உறவாக மாறிவிடும்.  

நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட்டால் ஆபத்தா?

முதல் முறை உடலுறவின் போது இந்த 4 விஷயத்தை மறந்திட கூடாது..Representative Image

வெளிப்படையான பேச்சி அவசியம்..

நீங்கள் முதல் முறை உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்றால், முதலில் உங்கள் பார்ட்னரிடம் வெளிப்படையாக பேசுங்கள். உங்களுக்கு என்ன தேவை என்பதை முன்னறே முடிவு செய்துக் கொள்ளுங்கள். அதேபோல், மற்றொருவர் சுகத்திற்காக உங்களை வறுத்துக்கொள்ள வேண்டாம். உங்களின் உடல் பற்றியும் கொஞ்சம் புரிந்துக்கொள்வது நல்லது. முடியவில்லை என்றால், சொல்லிவிடுவது நல்லது. 

சாப்பிட்டதும் இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க.. ஆபத்து உங்களுக்கே..

முதல் முறை உடலுறவின் போது இந்த 4 விஷயத்தை மறந்திட கூடாது..Representative Image

சுகமான நினைவு..

முதல் உடலுறவு என்பது ஒரு அழகான தருணம் அல்லவா? இது வாழ்நாளுக்கும் மறக்காது. எனவே, அதை சுகமான நினைவாக மாற்றிக்கொள்ளுங்கள். அதாவது, இருவருக்கும் பிடித்த விஷயங்களை செய்யுங்கள். பாடுவது, மனதில் இருப்பதை பேசுவது, ஆடுவது, முடிந்தால்  உங்க பார்ட்னருக்கு ஒரு கவிதை கூட சொல்லலாம். இது எத்தனை வருடம் கழித்து நினைத்தாலும் உங்களின் முகத்தில் புன்னகை வரவழைக்கும். 

கர்ப்பம் தரிக்க தம்பதிகள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்...

முதல் முறை உடலுறவின் போது இந்த 4 விஷயத்தை மறந்திட கூடாது..Representative Image

உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கணும்..

உடலுறவில் ஈடுபடும்போது எவ்வளவு உச்சத்தில் இருந்தாலும் சுயகட்டுப்பாட்டை இழந்துவிடக் கூடாது. அதேபோல், உங்கள் பார்ட்னர் நிறுத்துங்கள் அல்லது போதும் என்று சொல்லி விட்டால் உடனே நிறுத்திவிட வேண்டும். அவர்களை வற்புறுத்துதல், புரிய வைக்கிறேன் என்ற பெயரில் தொந்தரவு செய்தல் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்