Sat ,Apr 13, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

Kudal Pulu Symptoms in Tamil: உடலில் புழுக்கள் அதிகமாக இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்…!!

Nandhinipriya Ganeshan August 02, 2022 & 14:45 [IST]
Kudal Pulu Symptoms in Tamil: உடலில் புழுக்கள் அதிகமாக இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்…!!Representative Image.

Kudal Pulu Symptoms in Tamil: குழந்தைகளை பாதிக்கிற முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று குடற்புழு. சில சமயங்களில் பெரியவர்களையும் அதிகமாகவே பாதிக்கிறது. ஆனால், பலருக்கும் உடலில் புழுக்கள் அதிகம் இருப்பது தெரிவதில்லை. நன்றாக சமைக்கப்படாத உணவுகள், அசுத்தமான நீரை அருந்துவது, அசுத்தமான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது போன்றவற்றால் எளிதில் மனித உடலுக்குள் நுழைந்து பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

 முட்டையின் வெள்ளைக்கரு அல்லது மஞ்சள் கரு – எது சிறந்தது?

நம் உடலைத் தாக்கும் ஒட்டுண்ணிகளில் நாக்குப்பூச்சி அல்லது உருளைப்புழு, கொக்கிப்புழு, இதயப்புழு, நாடாப்புழு எனப் பல வகைகள் உள்ளன. இந்த புழுக்களை அவ்வப்போது உடலில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால், அவை நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க ஆரம்பித்துவிடும். உங்களுடைய உடலில் இந்த எட்டு அறிகுறிகள் இருந்தால், வயிற்றில் அதிகமாக புழுக்கள் இருக்கின்றது என்று அர்த்தம்.

அதிக புழுக்கள் உள்ளதை உணர்த்தும் அறிகுறிகள்!

செரிமான பிரச்சனைகள்:

வயிற்றில் புழுக்கள் அதிகம் இருந்தால், அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படும். மேலும், குமட்டல், மலச்சிக்கல், வயிறு உப்பசம், வயிற்றில் ஒருவிதமான எரிச்சல் போன்றவை இருக்கும். ஒருவேளை நீங்க தினமும் நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தும், இந்த பிரச்சனைகள் நீடித்தால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

உங்களுக்கு பீட்ரூட் பிடிக்காதா? அப்போ இத்தன நன்மைகளை மிஸ் பண்ணிட்டு இருக்கிங்க...!

சரும பிரச்சனைகள்:

உடலில் புழுக்கள் அதிகமாக இருப்பதை உணர்த்தும் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று இதுவாகும். சருமத்தில் அடிக்கடி அரிப்புகள், எரிச்சல், மற்றும் பல வகையான அலர்ஜிகளை ஏற்படுத்தும். எனவே, இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும் இயற்கை உணவுகள்….

அடிவயிற்று வலி:

இந்த புழுக்கள் சிறு குடலின் மேல் உட்கார்ந்துக் கொண்டு அழற்சி, எரிச்சல், வலி போன்றவற்றை உண்டாக்கும். அதோடு, கழிவுகளை வெளியேறுவதை தடுத்து, அடிவயிற்றில் அதீத வலியை ஏற்படுத்தும். அந்த மாதிரியான சமயத்தில் சற்றும் தாமத்திக்காமல் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.

மலப்புழை அரிப்பு:

பொதுவாக, கீரிப்பூச்சி கடிக்கிறது என்று சொல்வோம். அதாவது, வயிற்றில் பூச்சி இருந்தால், ஏற்படும் முதல் அறிகுறி தான் இது. இவை மலப்புழையில் குடைச்சல், அரிப்பு, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். அதிகமாக இரவு நேரங்களில் தான் ஏற்படும். இதனால், ஒருமாதிரியான அசௌகரியத்தை ஏற்படுத்திவிடும்.

பற்களை கொறிப்பது:

உடலில் புழுக்கள் அதிகமாக இருக்கும் நேரத்தில் பற்களை கொறிப்போம். ஏனெனில், உடலில் அதிகரித்த புழுக்களின் பெருக்கத்தால் தேங்கும் கழுவுகளால் சோர்வும், மன வேதனையும் அதிகமாக இருக்கும். இதனால், நம்பலையே அரியாமல் இரவில் பற்களை கொறிப்போம்.

உங்க உதடு கருப்பா இருக்கா..? சிகப்பா மாற்ற இதோ வீட்டு வைத்தியம்...

எடை இழப்பு:

வயிற்றில் புழுக்கள் அதிகமாக இருந்தால், பசி எடுக்காது. இதனால், எடையும் குறைய தொடங்கும்.  எனவே, இம்மாதிரியான சூழ்நிலையில் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மேலும், இந்த புழுக்கள் உடலின் சத்துக்களை உறிஞ்சி, ஊட்டச்சத்து குறைப்பாட்டை ஏற்படுத்து, உடலை பலவீனமாக்கும். அதனால், சோர்வு அதிகரித்து, நினைத்த வேலையை கூட செய்ய முடியாமல் எரிச்சலை ஏற்படுத்தும்.

Tags:

Symptoms of intestional parasites in tamil, how to remove parasites in your body in tamil, Kudal pulu symptoms in tamil, Stomach pulu in tamil, Stomach worms symptoms in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்