Tue ,Mar 05, 2024

சென்செக்ஸ் 73,872.29
66.14sensex(0.09%)
நிஃப்டி22,405.60
27.20sensex(0.12%)
USD
81.57
Exclusive

கொடூரத்தின் உச்சம்! கணவன், மாமியாரை வெட்டி துண்டு துண்டாக்கி ஃபிரிட்ஜில் வைத்த பெண்.. பகீர் காரணம்.. | Assam Murder News

Nandhinipriya Ganeshan Updated:
கொடூரத்தின் உச்சம்! கணவன், மாமியாரை வெட்டி துண்டு துண்டாக்கி ஃபிரிட்ஜில் வைத்த பெண்.. பகீர் காரணம்.. | Assam Murder NewsRepresentative Image.

மாநிலங்களை கடந்து நாட்டையே உலுக்கிய சம்பவம் தான் டெல்லி ஷ்ரதா படுகொலை. தன்னுடன் லிவிங் டுகெதர் உறவில் இருந்த காதலியை (ஷ்ரதா) கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி, அதை பிரத்யேகமாக வாங்கிய ஃபிரிட்ஜில் 18 நாட்கள் சேமித்து வைத்து தினமும் நாய்களுக்கு வீசி வந்த காதலன் (அஃப்தாப் அமீன்). இந்த கொலை தான் ஆரம்ப புள்ளியாக அமைந்திருக்கிறது. ஆம், இந்த கொடூர கொலைச் சம்பவத்தை தொடர்ந்து எத்தனையோ கொலைகள் அடுத்தடுத்து அறங்கேறிய வண்ணம் இருக்கிறது. தற்போது இதேபோல், ஒரு கொடூர சம்பவம் அசாம் மாநிலத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் தனது கணவரையும், மாமியாரையும் மனைவி கொலை செய்துள்ளார்.

கொடூரத்தின் உச்சம்! கணவன், மாமியாரை வெட்டி துண்டு துண்டாக்கி ஃபிரிட்ஜில் வைத்த பெண்.. பகீர் காரணம்.. | Assam Murder NewsRepresentative Image

அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்தவர் பந்தனா கலிதா. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அமர்ஜோதி டே என்பவருக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடந்துள்ளது. வழக்கம்போல், திருமணமான கொஞ்சம் நாட்கள் வரை வாழ்க்கையை சந்தோசமாக தான் கழித்துள்ளனர் தம்பதியினர். அதன்பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனை வெடிக்க ஆரம்பித்துள்ளது. ஒருகட்டத்தில் தினமும் வீட்டில் பிரச்சனை மட்டுமே இருந்துவந்துள்ளது. எனவே, மனம் வெறுத்துப்போய் கவலையில் இருந்துள்ளார் பந்தனா கலிதா.

கொடூரத்தின் உச்சம்! கணவன், மாமியாரை வெட்டி துண்டு துண்டாக்கி ஃபிரிட்ஜில் வைத்த பெண்.. பகீர் காரணம்.. | Assam Murder NewsRepresentative Image

அப்போதுதான், இவருக்கு அருப் தேகா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வீட்டுப்பிரச்சனையால் வருத்தத்தில் இருந்ததால் அரூப் தேகாவுடன் அடிக்கடி பேசி வந்த பந்தனா ஒரு கட்டத்தில் அவர்மீது காதல் கொண்டிருக்கிறார். இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்துவந்துள்ளனர். மருமகளின் நடத்தையில் சந்தேகித்த மாமியார் பந்தனாவை கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரை தொந்தரவு செய்துள்ளார். இவரின் தொல்லை தாங்கமுடியாத பந்தனா இனி இந்த வீட்டில் வாழமுடியாது என்ற முடிவை எடுத்து, வீட்டிலிருந்து வெளியேறி தனியாக தனது காதலனுடன் வாழ்ந்து வந்துள்ளார். மறுபுறம் கணவன் அமர்ஜோதி டேயின் உறவினர்கள் அவரை காணவில்லை என்று போலீஸில் புகார் அளித்துள்ளனர். 

கொடூரத்தின் உச்சம்! கணவன், மாமியாரை வெட்டி துண்டு துண்டாக்கி ஃபிரிட்ஜில் வைத்த பெண்.. பகீர் காரணம்.. | Assam Murder NewsRepresentative Image

புகாரின் பேரில் விசாரணையில் ஈடுபட்ட போலீஸாருக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. இதையடுத்து மனைவி பந்தனாவிடம் தீவிர விசாரணை மேற்கொள்கையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது, ஆகஸ்ட் 17 ஆம் தேதி வீட்டில் பெரிய சண்டை வெடித்தநிலையில், கணவன் வேலைக்கு சென்ற நேரத்தில் மாமியார் சங்கரியை பந்தனா கொலை செய்துள்ளார். பின்னர் அவர் மீண்டும் வீட்டுக்கு வருவதற்கு முன்னர் மாமியாரின் உடலை துண்டு துண்டாக்கி பிளாஸ்டிக் பையில் போட்டு வைத்திருக்கிறார். அதேபோல், கணவன் அமர்ஜோதியையும் காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெறித்து கொன்று இவரது, உடலையும் வெட்டி பிளாஸ்டிக் பையில் போட்டி பிரிட்ஜில் வைத்திருக்கிறார்.

கொடூரத்தின் உச்சம்! கணவன், மாமியாரை வெட்டி துண்டு துண்டாக்கி ஃபிரிட்ஜில் வைத்த பெண்.. பகீர் காரணம்.. | Assam Murder NewsRepresentative Image

பின்னர் பந்தனாவும் அருப்பும் சேர்ந்து இந்த உடல்களை மேகாலயா காட்டுப்பகுதிக்குள் எடுத்துச் சென்று வீசியுள்ளனர். கணவனும் மாமியாரும் ஒரே நேரத்தில் காணாமல் போனதால் சந்தேகம் தன்மீது திரும்பாமல் இருக்க நூன்மதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு அப்போது எதுவும் கிடைக்கவில்லை. கொஞ்ச நாட்கள் இப்படியே சென்றுக்கொண்டிருந்த நிலையில், மாமியாரின் வங்கி கணக்கிலிருந்து 5 லட்ச ரூபாய் பணத்தை முறைக்கேடாக எடுத்து செலவு செய்துள்ளார் பந்தனா. அப்போது தான் சிக்கியுள்ளார். மேலும், கொலை சம்பந்தமான ஆதாரங்களை திரட்டி கடைசியாக பந்தனாவை கைது செய்யப்பட்டுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்