Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாங்களும் போஸ்டர் அடித்து ஒட்டுவோம்..! - அதிரடி போஸ்டர் மூலம் திமுகவிற்கு பதிலளித்த பாஜக!

Baskaran Updated:
நாங்களும் போஸ்டர் அடித்து ஒட்டுவோம்..! - அதிரடி போஸ்டர் மூலம் திமுகவிற்கு பதிலளித்த பாஜக!Representative Image.

மதுரையில் பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி திமுகவினருக்கு எதிராக பாஜக மாமன்ற உறுப்பினர் ஒட்டியுள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாங்களும் போஸ்டர் அடித்து ஒட்டுவோம்..! - அதிரடி போஸ்டர் மூலம் திமுகவிற்கு பதிலளித்த பாஜக!Representative Image

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது நடவடிக்கையால், தமிழகத்தில் அரசியல் களம் சூடிபிடித்துள்ளது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் திமுககாரனை சீண்டிப் பார்க்க வேண்டாம் என்றும் பாஜகவினரை எச்சரித்து வீடியோ வெளியிட்டார். இதைத் தொடர்ந்து அந்த வீடியோவை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் வீடியோக்களை வெளியிட்டனர்.

நாங்களும் போஸ்டர் அடித்து ஒட்டுவோம்..! - அதிரடி போஸ்டர் மூலம் திமுகவிற்கு பதிலளித்த பாஜக!Representative Image

இது ஒருபுறமிருக்க பாஜகவினரை சரமாரியாக கண்டித்தும், எச்சரித்தும் தமிழகம் முழுவதும் திமுகவினர் போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர். போஸ்டர் கலாச்சாரத்துக்கு பெயர் போன மதுரையிலும் போஸ்டர் ஒட்டப்பட்டன. திமுகவினருக்கு போட்டியாக பாஜகவினரும், தற்போது போஸ்டர்களை ஒட்டி டப் கொடுத்து வருகின்றனர்.

நாங்களும் போஸ்டர் அடித்து ஒட்டுவோம்..! - அதிரடி போஸ்டர் மூலம் திமுகவிற்கு பதிலளித்த பாஜக!Representative Image

மதுரை மாநகர் பகுதியில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சார்பில் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டு உள்ளது. அதில் பாரதியார் கவிதை "அக்கினி குஞ்சொன்று கண்டேன்" என ஆளுநர் ரவியையும் அதை அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்! (தமிழகம்) வெந்து தனிந்தது காடு( திராவிடம்) தழல் வீரத்தில் குஞ்சென்று முன்பென்றும் உண்டோ? தத்தரிகெட தத்தரிகிடதித்தோம் என குறிப்பிட்டு ஒரு பக்கம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி புகைப்படமும் மற்றொரு பக்கம் பிரதமர் மோடி, அண்ணாமலை புகைப்படத்தை அச்சடித்துள்ளனர்.

நாங்களும் போஸ்டர் அடித்து ஒட்டுவோம்..! - அதிரடி போஸ்டர் மூலம் திமுகவிற்கு பதிலளித்த பாஜக!Representative Image

இந்த போஸ்டர் அனைவரின் கவனம் பெற்று வருவதோடு, இணையத்திலும் வேகமாக பரவி வருகிறது.திமுக அமைச்சரை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில், இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக அனைவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்