Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 90% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜுனே…

Gowthami Subramani October 19, 2022 & 16:10 [IST]
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 90% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜுனே… Representative Image.

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அதற்கான வாக்குகள் எண்ணப்பட்டு, தற்போது காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூனே வெற்றி பெற்றுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 90% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜுனே… Representative Image

காங்கிரஸ் கட்சி தலைவர்

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு கடந்த 17 ஆம் நாள் தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவரான மல்லிகார்ஜூனே கார்கேவும், திருவனந்தபுரம் எம்.பியான சசிதரூரும் போட்டியிட்டனர். இந்த காங்கிரஸ் தேர்தல் நாடு முழுவதும் 65 இடங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோரும் வாக்களித்தனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சுமார் 9,000-க்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அதன் படி, இதில், மொத்தம் 96% சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. இந்த வாக்குப் பதிவுகள் முடிந்த பின், வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பதுடன் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 90% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜுனே… Representative Image

வாக்கு எண்ணிக்கை

அதனைத் தொடர்ந்து, இன்று தேர்தல் வாக்குகள் எண்ணப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், காலை 10 மணிக்கு டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் வைத்து தொடங்கியது. மேலும், மதியம் 1 மணியளவில் வாக்குகள் எண்ணிக்கை நிறைவடைந்தது. இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில், சசிதரூர் 1,072 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். இவருடன் போட்டியிட்ட மல்லிகார்ஜூனே இவரை விட பல மடங்கு வாக்குகளில் அதாவது 7,897 வாக்குகள் பெற்றார்.

இதையும் படிக்க: ஜெயலலிதா மரணம் தேதி மாற்றம்.. திட்டமிட்டே சிகிச்சை அளிக்காமல் இருந்தது அம்பலம்..! வெளியான திடுக்கிடும் தகவல்கள்…

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 90% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜுனே… Representative Image

ட்விட்டரில் வாழ்த்து

காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கார்கேவுக்கு, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசிதரூர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் குறிப்பிட்டதாவது,”அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தலைவராய் இருப்பது சிறந்த பொறுப்பு மற்றும் சிறந்த பெருமை. இந்த பொறுப்பில் வெற்றி பெற வேண்டும் என்று கார்கே ஜியை நான் வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 90% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜுனே… Representative Image

மூன்றாவது நபராக

முன்னதாக, காங்கிரஸ் கட்சி தேர்தலில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக சசிதரூர் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதனை அடுத்து தேர்தல் அறிவித்த பின், தேர்தலில் போட்டியிட விரும்புவதாக சசி தரூர் விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதற்கு, இவர் காங்கிரஸ் கட்சியில் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தியை சந்தித்துள்ளார்.

இவரை எதிர்த்து, ராஜஸ்தான் மாநில முதல்வர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். ஆனால், கட்சியின் ஒரு தலைவர் ஒரு பதவி என்ற கொள்கைப் படி, அவர் போட்டியில் விலகினார். இவரைத் தொடர்ந்து திக்விஜய் சிங் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால், கடைசி நேரத்தில் இவரும் விலகி விட்டார். இதனை அடுத்தே, இறுதியில் மல்லிகார்ஜுனே போட்டியில் நின்று 90% வாக்குகளில் வெற்றிபெற்று தற்போது காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவரது வெற்றிக்கு, பலரும் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்