Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தொடரப்படும்..! - ஆர்.எஸ் பாரதி எச்சரிக்கை

Baskaran Updated:
எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தொடரப்படும்..! - ஆர்.எஸ் பாரதி எச்சரிக்கைRepresentative Image.

சென்னை: அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் பொய்யான தகவல்களை சொன்ன அண்ணாமலை மீது எப்படி வழக்கு தொடரப்பட்டதோ, அதேபோல எடப்பாடி மீதும் அவதூறு வழக்கு தொடரப்படும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது:

தமிழக முதல்வர் கட்சித் தொண்டர்களுக்கு எல்லாம் விளக்கம் அளிக்கும் வகையில் திமுக வரலாறு அந்த இயக்கம் எப்படிப்பட்ட சோதனை எல்லாம் சந்தித்தது எப்படி வெற்றி கொண்டுள்ளது என்பதை எல்லாம் தொண்டர்களுக்கு தெரிவிக்கும் வகையில் தலைவர் உரிய நேரத்தில் அறிக்கை வெளியிட்டார்.

ஒரு மனிதனை கைது செய்து 18 மணி நேரத்துக்கு மேலாக வைத்துள்ளார்கள். அதன் காரணமாக இதயத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது அவருக்கு மூன்று அடைப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் காலதாதம் ஆகி இருந்தால் என்ன ஆயிருக்கும். எடப்பாடி பழனிச்சாமி அமலாக்கத்துறை பற்றி பேசுவதற்கு யோகிதை இல்லை, எடப்பாடி அமலக்த்துறைக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

அமலாக்கத்துறை அதிகாரி போல எடப்பாடி அறிக்கை கொடுத்துள்ளார். ரெய்டு பற்றி எந்த காலத்திலும் திமுக கவலைப்படவில்லை. எங்களுடைய தலைவரும் திட்டவட்டமாக சொல்லியுள்ளார். எந்த வித விசாரணையும் யார் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம். எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் மனித நேயத்துடன் நடத்த வேண்டும். மாரடைப்பு என்னவென்று தெரியாதவராக எடப்பாடி பேசுகிறார். 

எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தொடரப்படும்..! - ஆர்.எஸ் பாரதி எச்சரிக்கைRepresentative Image

இந்த நாட்டின் முதல்வராக எப்படி இருந்தார் என்று தெரியவில்லை. இ.எஸ்.ஐ மருத்துவமனையின் அறிக்கையை எடப்பாடி கொச்சைப்படுத்தியுள்ளார். வேலுமணி, தங்கமணி ரெய்டு வீட்டில் நடத்திய அமித்ஷா  காலில் விழுந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அதற்கு பரிகாரமாக ராஜ்யசபா எம்பி சீட்டை ஒன்றும் இல்லாத ஜி.கே வாசன் வழங்கினார் எடப்பாடி.  எடப்பாடி பழனிச்சாமி செந்தில் பாலாஜி நாடக நடத்துகிறார் என தெரிவித்துள்ளனர்.

அவருக்கு என்ன தெரியும்..நேற்று வந்தவர். அதிமுகவிற்கு கொடுக்கப்பட வேண்டிய எம்.பி பதவியினை மிரட்டி ஜி.கே.வாசனுக்கு வாங்கினார்கள் இதையெல்லாம் எடப்பாடி ஏன் கொடுத்தார். பல்வேறு மாநிலங்களில் திமுகவின் வாக்குறுதிகளை கொடுத்து வெல்கிறார்கள். ஒரு தலைவி மருத்துவமனையில் இருக்கும் போது ஒரு கோடி, ஒன்றரை கோடிக்கு இட்லி சாப்பிடும் கூட்டமல்ல திமுக. எடப்பாடி மீது 4000கோடி நெடுஞ்சாலை துறையில் ஊழல் செய்தார் அதை விசாரிக்க நீதிமன்றம் தலையிடவேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்தேன்.

நெடுஞ்சாலை ஊழலை குறித்தும் என் மீது எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார், முதன் முதலில் டான்சி ஊழல் வழக்கை நான் தான் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன்.  ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சிறப்பு நீதிமன்றம் அமைத்து வழக்கு நடைபெற்றது. டான்சி வழக்கில் தண்டனை பெற்றார் ஜெயலலிதா. அப்போது பன்னீர் செல்வம் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அந்த நிலத்தை ஜெயலலிதா திருப்பி கொடுத்தார், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள டான்சி நிலத்தை பெறப்பட்டது. அது நான் போட்ட வழக்கு தான்.

உடனே உச்சநீதிமன்றம் சென்று தடை பெற்றார். இவரே முதல்வர் காவல் துறையை கையில் வைத்திருந்தார் அதனால் விசாரிக்ககூடாது என்றோம். பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் மாநில காவல்துறையே விசாரிக்கட்டும் என நீதிமன்றத்தில் தெரிவித்தேன். 2016-2017ல் நடு ரோட்டில் 570கோடி கண்டெய்னரில் பிடித்து விசாரித்த போது என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தொடரப்படும்..! - ஆர்.எஸ் பாரதி எச்சரிக்கைRepresentative Image

உங்கள் மீது நாங்கள் கொடுத்த புகாரில் உங்கள் தலைவியிலிருந்து அனைவரும் தண்டனை கிடைத்துள்ளது. அவருக்கு ஏற்பட்ட நிலைமை உங்களுக்கும் ஏற்படும்.  செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது ஜெயலலிதா முதல்வராக இருந்த போது செய்த தவறுக்கு தான். இதற்கு முன் தான் குற்றம்சாட்டிய நபருக்கே பதவி கொடுத்தவர் எம்ஜி.ஆர். அதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

திமுக சார்பில் கட்சிக்காக உழைத்தவர் செந்தில் பாலாஜி. எடப்பாடி பொய் சொன்னதற்காக அவதூறு வழக்கு உடனடியாக போடப்படும். மேலும் 2011ஜீன் 27 ல் மு.க.ஸ்டாலின் , டி.ஆர்.பாலு, அப்போதைய எம்.பி விஜயன் உள்ளிட்டோர் திகார் சிறைக்கு சென்று கனிமொழி ஆ.ராசா உள்ளிட்டோரை சந்தித்தார்கள் என்பதை மறந்து விட்டார்கள். சிறை ஆவணத்தை பாருங்கள்.

இதில் எடப்பாடி பச்சை பொய் சொல்கிறார். காலையில் தெய்வ தாய் ,மதியம் பேய் என்பார்கள் இரவில் வேறு மாதிரியாக பேசுவார்கள் அதிமுகவினர். என்னை அடிமை என்கிற எடப்பாடி  டேபிளுக்கு அடியில் விழுந்து தான் பதவி பெற்றார். எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பத்திலிருந்து எங்கள் மீது அவர்கள் குற்றம்சாட்டியதை அவர்களால் நிரூபிக்க முடிந்ததா?.

திமுக ஆட்சி மீது எடப்பாடிக்கு வயிற்து எரிச்சல், முதல்வர் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த நினைக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. தமிழ்நாடு மக்கள் வரிப்பணத்தில் ஆளுநருக்கு ஏன் இவ்வளவு 150 ஏக்கரில் பெரிய மாளிகை? அதில் தலைமைச்செயலகம் கட்டி விட்டு அவரை விருந்தினர் மாளிகைக்கு மாற்ற வேண்டும்.

ஆட்டுக்கு எதுக்கு தாடி நாட்டிற்கு எதுக்கு ஆளுநர் திமுக பொறுத்தமட்டில் ஒரு தொண்டனை காப்பாற்றுவது கடமை, குற்றம் நிரூபிக்கப்பட்டால் தான் குற்றவாளி. தமிழ்நாட்டிற்கு புதிய தலைமைச் செயலகம் வேண்டும் என்ற நிலை உள்ளது. ஏற்கனவே திமுகவினால் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை ஜெயலலிதா மருத்துவமனையாக மாற்றி விட்டார்.

150 ஏக்கரில் ஆளுநருக்கு எதற்கு மாளிகை அதை தலைமைச் செயலமாக மாற்ற வேண்டுமென முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன் இதை தான் கட்சி தொண்டர்கள் பேசிவருகிறார்கள்.  அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் பொய்யான தகவல்களை சொன்ன அண்ணாமலை மீது எப்படி வழக்கு தொடரப்பட்டதோ அதேபோல எடப்பாடி மீதும் அவதூறு வழக்கு தொடரப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்