Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஓணம் பண்டிகை கொண்டாட இதுதான் காரணமா.. அதுவும் இந்த வருசம் ரொம்ப ஸ்பெஷல்..

Gowthami Subramani August 26, 2022 & 13:40 [IST]
ஓணம் பண்டிகை கொண்டாட இதுதான் காரணமா.. அதுவும் இந்த வருசம் ரொம்ப ஸ்பெஷல்..Representative Image.

ஓணம் பண்டிகை என்றாலே கேரள மக்களுக்கு உற்சாகம் தான். ஒவ்வொரு மாநிலத்திலும், பழங்கால நிகழ்வுகளின் அடிப்படையில் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கேரள மாநிலத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகை ஆகும். இது மலையாள நாட்காட்டியின் முதல் மாதமான சிங்கத்தின் தொடக்கத்தைக் குறிப்பிடுவதாக அமைகிறது.

ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதற்குக் காரணம்

புராணங்களில் குறிப்பிடுள்ளபடி, புகழ்பெற்ற மன்னரான மகாபலி தேவர்களை வென்று மூன்று உலகங்களையும் ஆளத் தொடங்கினான். இவரின் ஆட்சிக் காலத்தில், மக்கள் வளமும், நலமும் பெற்று சிறப்பாக வாழ்ந்து வந்தனர். அசுர கோத்திரத்தைச் சேர்ந்த அசுர ராஜாவாக, மகாபலி இருந்த போதிலும், மக்கள் அரசானாக இவரை நேசித்தனர். ஒரு பக்கம் இவரது புகழ் பெருகி வந்தாலும், தேவர்களுக்கு இது பாதுகாப்பு அற்றதாய் திகழ்ந்தது. மகாபலியின் செல்வாக்கைக் குறைப்பதற்குத் தேவர்கள், விஷ்ணு பகவானின் முன் வந்தனர்.

Most Read: ஓணம் ஸ்பெஷல்.. லேட்டஸ்ட் அத்தப்பூ கோலங்கள்... 

வாமனாக அவதாரம் எடுத்த விஷ்ணு பகவான்

இதனால், விஷ்ணு வாமனாக அவதாரம் எடுத்து, மகாபலி மன்னனை ஏமாற்றி, பூமியில் தனக்கென இருக்கும் நிலத்தைச் சமர்ப்பிக்க சொன்னார். இவ்வாறு அனைத்தையும் இழந்த மகாபலி, திரும்பவும் கீழ் உலகம் செல்ல வேண்டியதாயிற்று. இருந்தபோதிலும், விஷ்ணு பகவான் அவர் பூமியில் உள்ள நிலத்திற்கு வருவதற்கு ஆண்டுக்கு ஒரு முறை அனுமதி அளித்தார். அரக்கனாக இருந்தாலும், அன்பான மன்னனாக திகழ்ந்த மகாபலியின் இல்லறத்தைக் கொண்டாடும் இந்த நிகழ்வே ஓணம் பண்டிகை ஆகும்.

Most Read: திருவோணம் பண்டிகை ஸ்பெஷல்... ட்ரெண்டிங் ஓணம் புடவை கலெக்ஷன்ஸ்..

ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் தேதி

இந்த 2022 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகை வரும் ஆகஸ்ட் 30 ஆம் நாள் முதல் செப்டம்பர் 8 ஆம் நாள் வரை கொண்டாடப்படுகிறது.

முக்கியத்துவம்

ஆண்டுக்கு ஒரு முறை கேரள மக்களால், வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை 10 நாள்கள் கொண்டாடப்படும்…

Most Read: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிரசாதங்கள்..

ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது எப்படி?

10 நாள்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழாவில், பாரம்பரிய உடைகளை அணிந்து மக்கள் பிரார்த்தனை செய்வார்கள்.

விழாக்களில் நடன நிகழ்ச்சிகள் மற்றும் பூக்களம் எனப்படும் ரங்கோலிகள் வரைதல் போன்றவை அடங்கும்.

மேலும், இந்த விழாவில் சத்யா எனப்படும் 26 உணவுகள் அடங்கிய 9 வகை உணவுகள் சமைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.

10 நாள்கள் நடைபெறும் ஓணம் திருவிழாவில், வல்லம் காளி என்படும் படகுப்போட்டி, புலி நடனம், பெண்களின் நடனம், முகமூடி நடனம், ஓண தல்லு அல்லது தற்காப்புக் கலைகள் போன்றவை நடத்தப்படும்.

கேரள மாநில மக்களால் இந்த நிகழ்ச்சி வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக, கொரோனா சூழ்நிலை காரணமாக ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படவில்லை. அதனால், இந்த ஆண்டு வெகு விமர்சையாகவும், பிரம்மாண்டமாகவும் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்