Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகம் வரும் பிரதமர் மோடி… என்ன காரணம் தெரியுமா…?

Gowthami Subramani November 10, 2022 & 12:05 [IST]
தமிழகம் வரும் பிரதமர் மோடி… என்ன காரணம் தெரியுமா…?Representative Image.

பிரதமர் மோடி தமிழகம் உள்ளிட்ட நான்கு தென் மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், பல்வேறு பலத்த பாதுகாப்புகள் குவிக்கப்பட்டு வருகின்றன. அதன் படி, தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பயணிக்க உள்ள பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தின் விவரங்களைப் பற்றி காண்போம்.

தமிழகம் வரும் பிரதமர் மோடி… என்ன காரணம் தெரியுமா…?Representative Image

தமிழகம் பயணம் புரியும் மோடி

தமிழகத்திற்கு கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி வருகை தந்து செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைத்தார். அதன் பின், கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி பிரதமர் தமிழகம் வருகை தருவார் எனக் கூறப்பட்ட நிலையில், அது பொய்யான தகவலாக பரவியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரதமர் மோடி வரும் நவம்பர் 11 ஆம் நாளான நாளை தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்பட்டது.

தமிழகம் வரும் பிரதமர் மோடி… என்ன காரணம் தெரியுமா…?Representative Image

வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

அதன் படி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் 2 நாள் பயணமாக சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். அதன் படி, நாளை காலை பெங்களூரு – சென்னை இடையே புதிதாக அமல்படுத்தப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பெங்களூரில் தொடங்கி வைக்கிறார்.

தமிழகம் வரும் பிரதமர் மோடி… என்ன காரணம் தெரியுமா…?Representative Image

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு

பின்னர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தையும், கெம்பேகவுடாவின் 108 அடி உயர சிலையையும் திறந்து வைக்கிறார். பின், மாலையில் மதுரை விமான நிலையம் சென்று, திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.

தமிழகம் வரும் பிரதமர் மோடி… என்ன காரணம் தெரியுமா…?Representative Image

நாட்டுக்காக அர்ப்பணிப்பு

பின் நவம்பர் 12 ஆம் நாள் ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து, தெலுங்கானா மாநிலம் ராமகுண்டத்திலும் பல்வேறு சிறப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மொத்தமாக 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி அவர்கள், நிறைவடைந்த திட்டங்களை நாட்டிற்காக அர்ப்பணிக்க உள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்