Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

அளவுக்கு அதிகமா சாப்பிடுறீங்களா...இது தான் காரணம்...இதனால் என்னென்ன கோளாறு ஏற்படும் தெரியுமா?

Priyanka Hochumin Updated:
அளவுக்கு அதிகமா சாப்பிடுறீங்களா...இது தான் காரணம்...இதனால் என்னென்ன கோளாறு ஏற்படும் தெரியுமா?Representative Image.

நம்முடைய வாழ்விற்கு ஆதாயமாக இருப்பது உணவு. நமக்கு பசிக்கும் போது உணவு எடுத்துக்கொள்ளவில்லை என்றால் பல பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் இங்க சாப்பிட்டு கொண்டே இருப்பதால் ஏற்படும் பிரச்சனை தான் Binge-eating disorder (BED). அதாவது ஒருவர் நிறுத்தாமல் அளவுக்கு மீறி சாப்பிட்டு கொண்டே இருந்தால் இந்த உணவு குறைபாடு ஏற்பாடு. எதனால் இது ஏற்படுகிறது, இதனின் அறிகுறிகள் என்ன, இதனை கட்டுக்குள் கொண்டு வர என்ன செய்ய வேண்டும் போன்ற பல விஷயங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

அளவுக்கு அதிகமா சாப்பிடுறீங்களா...இது தான் காரணம்...இதனால் என்னென்ன கோளாறு ஏற்படும் தெரியுமா?Representative Image

அறிகுறிகள் என்ன?

இந்த குறைபாட்டின் மூல காரணம் - குறைந்த இடைவேளைக்கு சாப்பிட்டுக் கொண்டே இருப்பது. அதாவது சாப்பிட்டு முடித்து விட்டு அடுத்த 2 மணி நேரத்திற்குள் சாப்பிடுவார்கள்.

நன்கு சாப்பிட்டு முடித்த பிறகு அல்லது பசியே எடுக்காத பொழுதும் சாப்பிடுவது.

இந்த உணவு குறைபாடு இருப்பவர்கள் தனிமையில் யாருக்கும் தெரியாமல் மறைந்து சாப்பிடும் பழக்கத்திற்கு தள்ளப்படுவார்கள்.

இந்த பழக்கத்தை கட்டுப்படுத்த நினைத்து, முயற்சி செய்து, ஆனால் அதற்கான பலன் கிடைக்காமல் விரக்தியில் இருப்பார்கள்.

அளவுக்கு அதிகமா சாப்பிடுறீங்களா...இது தான் காரணம்...இதனால் என்னென்ன கோளாறு ஏற்படும் தெரியுமா?Representative Image

இந்த கோளாறு யாருக்கு ஏற்படும்?

BED என்னும் இந்த உணவு குறைபாடு ஆண்களை விட பெண்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது. மேலும் உடல் எடை அதிகம் இருபவர்கள் அல்லது உடல் பருமன் கொண்டவர்களைக் காட்டிலும், சரியான உடல் எடை மற்றும் கம்மியான உணவு எடுத்துக்கொள்ளும் நபர்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது.

எதனால் ஏற்படுகிறது?

இந்த கோளாறு எதனால் ஏற்படுகிறது என்று நடத்திய ஆய்வுகளின் முடிவில் கிடைத்த தகவல், BED பிரச்சனைக்கு முக்கிய காரணம் குடும்ப பின்னணி தான். மேலும் தங்களின் உடலின் மீது அக்கறை எடுத்துக்கொள்கிறேன் என்ற பெயரில் டயட்டிங் மேற்கொள்ளும் நபர்கள் மற்றும் மன அழுத்தம் அதிகம் இருப்பவர்களுக்கே இந்த குறைபாடு இருக்கிறது.

அளவுக்கு அதிகமா சாப்பிடுறீங்களா...இது தான் காரணம்...இதனால் என்னென்ன கோளாறு ஏற்படும் தெரியுமா?Representative Image

இதனால் என்ன நடக்கும்?

இந்த கோளாறால் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ன தெரியுமா?

உடல் எடை அதிகரிப்பது

மோசமான வாழ்க்கை முறை

சமூகத்தில் இருந்து தனிமை படுத்திக்கொள்வது

இரத்த அழுத்தத்தால் மாரடைப்பு

தூக்கமின்மை

இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்

சுவாசப் பிரச்சனை மற்றும் மூட்டு வலி ஆகியவற்றால் நாம் அவதிப்பட வாய்ப்புகள் உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்