Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How To: சேலம் தட்டு வடை செட் வீட்டிலேயே செய்வது எப்படி?

Nandhinipriya Ganeshan Updated:
How To: சேலம் தட்டு வடை செட் வீட்டிலேயே செய்வது எப்படி?Representative Image.

ரோட்டு கடையில கிடைக்கும் தட்டு வடை செட்டிற்கு அப்படி ஒரு தனி சுவை. இந்த தட்டு வடை செட் சேலத்தில் ரொம்ப ஃபேமஸ். இரண்டு தட்டு வடைக்கு நடுவில் கேரட், பீட்ரூட், வெங்காயம், கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் பேஸ்ட், சிவப்பு மிளகாய் பேஸ்ட் வைத்து அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தூவி ஒரு தட்டில் வைத்து கொடுப்பார்கள். மலிவான விலையில் அற்புதமான ருசியில் ஒரு சூப்பரான டிஷ். சாப்பிடாதவர்களே இருக்க முடியாது. இதை பிடிக்காதவர்களும் இருக்க முடியாது. 

பச்சை சட்னி:

பச்சை மிளகாய் - 4

கொத்தமல்லி இலைகள் - 1/4 கப்

இஞ்சி - சிறிய துண்டு

தேங்காய் - சிறிய துண்டு

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய், மற்றும் உப்பு தேவையான அளவு எல்லாவற்றையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சை சட்னி ரெடி.

மொறு மொறு வெண்ணெய் முறுக்கு செய்வது எப்படி?

How To: சேலம் தட்டு வடை செட் வீட்டிலேயே செய்வது எப்படி?Representative Image

சிவப்பு சட்னி:

தக்காளி - 1

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

புளி - சிறிதளவு

பூண்டு - 4 பல்லு

சிவப்பு மிளகாய் - 4

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: ஒரு வாணலியில் எண்ணெய் சிறிதளவு சேர்த்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய், புளியை போட்டு, 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கி, ஆற வைத்துக் கொள்ளவும். பின்னர், இதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.  

மொறு மொறு பெப்பர் தட்டுவடை செய்வது எப்படி?

How To: சேலம் தட்டு வடை செட் வீட்டிலேயே செய்வது எப்படி?Representative Image

தட்டு வடை செட்டிற்கு தேவையான பொருட்கள்:

தட்டு வடை - 10

பீட்ரூட் துருவியது - 1/4 கப்

கேரட் துருவியது - 1/4 கப்

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லி இலை - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு தட்டில் துருவிய கேரட், பீட்ரூட், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, வெங்காயஹ்தை சேர்த்து கலக்கி கொள்ளவும். இப்போது மற்றொரு தட்டில் தட்டு வடையை வைத்து அதன்மீது பச்சை சட்னியை தடவவும். இதன் மேல் பீட்ரூட், கேரட் கலவையை வைக்கவும். இன்னொரு தட்டுவடையில், சிவப்பு சட்னியிய தடவி, சாண்ட்விச் போல மூடினால், சுவையான தட்டுவடை செட் ரெடி.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்