Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பலரும் அறியாத நம் அஞ்சறையில் இருக்கும் அமைதியான பாதுகாவலன்.. பல உபாதைகளின் எதிரி..

Manoj Krishnamoorthi Updated:
பலரும் அறியாத நம் அஞ்சறையில் இருக்கும் அமைதியான பாதுகாவலன்.. பல உபாதைகளின் எதிரி.. Representative Image.

மஞ்சள் நம் உணவு முறையில் ஒரு மருத்துவ அங்கம் ஆகும். ஆம்.., மஞ்சளின் மகிமை என்று இதுவரை பல கேள்விப்பட்டு இருப்போம். அதுவும் கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் தான் நமக்கு இயற்கை உணவின் மகத்துவம் புரிந்தது. உணவில் தினமும் மஞ்சள் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்பது நமக்கு தெரியும். ஆனால், நமக்கு தெரியாத பல மகத்துவம் மஞ்சளில் மறைந்து உள்ளது. இன்னும் சொல்லப்போனால், நாம் முடியாத பல அசாத்திய விஷயங்கள் மஞ்சளில் உள்ளது. அப்படி என்ன மஞ்சளில் உள்ளது என்பதை கீழே காண்போம். 

பலரும் அறியாத நம் அஞ்சறையில் இருக்கும் அமைதியான பாதுகாவலன்.. பல உபாதைகளின் எதிரி.. Representative Image

மஞ்சள் (Unknown Facts About Turmeric In Tamil)

உணவே மருந்து என்பது நம் பாரம்பரியம். இன்று இருக்கும் அவசர உலகில் நம் பாரம்பரிய உணவை கைவிட்டு சுவைக்கு அடிமையாகி பல இன்னலை தேடி கொள்கிறோம். இன்றைய சூழலில் நாம் சாப்பிடும் உணவு பொருட்களால் தான் நமக்கு நோயே வருகிறது என்றால் நம்ப முடியுமா.

ஆம், அது உண்மை தான் சுவைக்காக நாம் உட்கொள்ளும் உணவு மட்டுமின்றி சில ரசன கலவையால் உணவு பொருட்களும் கூட விஷமாக மாறியுள்ளது. ஆனால், மஞ்சள் நம் உணவு பொருளில் ஒரு வரப்பிரதாசம் என்றே சொல்லலாம். 

பொதுவாக நாம் தினமும் மஞ்சள் இல்லாமல் உணவு உட்கொள்வதில்லை,  அதன் பயன் பற்றி கேட்டால் நாம் சொல்வது அதிக எதிர்ப்பு சக்தி கொண்டது என்பதாக தான் இருக்கும். ஆனால் இன்னும் பல நன்மைகள் மஞ்சளில் கிடைக்கும், அவை யாதென்ன என்பதை ஒவ்வொன்றாக தரப்பட்டுள்ளது. 

பலரும் அறியாத நம் அஞ்சறையில் இருக்கும் அமைதியான பாதுகாவலன்.. பல உபாதைகளின் எதிரி.. Representative Image

1. உடல் உறுப்புகளின் சீரான செயல்பாடு

நாம் சுவைக்காக சேர்க்கும் மஞ்சள் உடலில் சிறந்த செரிமானத்தை ஊக்குவித்து, உடலில் இருக்கும் நச்சுகளை நீக்குகிறது. இதனாலே மஞ்சள் சிறந்த ஆக்ஸிஜனேற்றி என ஏற்றுக்கொள்ளப்பட்டது.  உடலில் உள்ள நச்சுகள் வெளியேறுவதால் பளபளப்பான சருமம், மூக்கடைப்பு, சீரான கல்லீரல் செயல்பாடு போன்றவை உண்டாகும்.  

பலரும் அறியாத நம் அஞ்சறையில் இருக்கும் அமைதியான பாதுகாவலன்.. பல உபாதைகளின் எதிரி.. Representative Image

2. குளிர்கால உணவு

மஞ்சள் பொதுவாக குளிர்காலத்திற்கு உகந்த உணவாகும்.  இந்த காலகட்டத்தில் தான் நமக்கு எதிர்ப்பு சக்தி அதிகம் தேவைப்படும். சூரிய கதிர்வீச்சில் இருந்து கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலுக்கு குறைவாக கிடைக்கும். அதை சரிக்கட்டும் காரணியே மஞ்சள் ஆகும். மஞ்சளில் இருக்கும் குர்குமின், பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு போன்ற பண்புகள் நம் உடலில் எதிர்ப்பை அதிகப்படுத்தும். 

உலகில் மாபெரும் நோயாக பல வருடங்களாக பல்லாயிரம் உயிரை கொன்ற நோய் புற்றுநோய் ஆகும். உங்களுக்கு ஒன்று தெரியுமா..? மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் புற்றுநோயை தடுக்கும். மஞ்சளில் இருக்கும் குர்குமின் புற்றுநோய் கட்டி ஏற்படாமல் தடுக்கும். 

பலரும் அறியாத நம் அஞ்சறையில் இருக்கும் அமைதியான பாதுகாவலன்.. பல உபாதைகளின் எதிரி.. Representative Image

3. பருவ நோயின் எதிரி

மஞ்சளின் முக்கியமான மகிமை என்றால் அது அளிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியாகும். இயல்பாக குழந்தை முதல் பெரியவர் வரை உள்ள ஒரு பொதுவான பிரச்சனை பருவகால மாற்றத்தினால் ஏற்படும் காய்ச்சல், சளி ஆகும். தினமும் பாலில் மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை கலந்து குடித்து வந்தால்  நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். 

மஞ்சளை வெந்நீரில் கலந்து வாய் கொப்பளிப்பதால் தொண்டைப்புண்  ஆறுவதோடு, நெஞ்சு சளிபோன்ற தொல்லையும் நீக்கும். அத்துடன் இன்று பலருக்கு ஏற்படும் அல்சைமர் நோயும் வராமல் தடுக்கும். 

பலரும் அறியாத நம் அஞ்சறையில் இருக்கும் அமைதியான பாதுகாவலன்.. பல உபாதைகளின் எதிரி.. Representative Image

4. ஆரோக்கியமான இதயம்

நம் உணவில் தினமும் மஞ்சள் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று தான் அனைவரும் சொல்லுவர். இதில் இன்னொரு மகத்துவம் மறைந்து உள்ளது தினமும் மஞ்சளை உடலில் எதாவது ஒருவகையில் எடுத்து கொண்டால் இருதயம்  ஆரோக்கியமாக இருக்கும் என்று ஏற்றுகொள்ளப்பட்டு இருக்கிறது. மேலும், இது இரத்த குழாயில் ஏற்படும் அடைப்புகளை முற்றிலுமாக தடுக்கும். 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்