Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஓ., பி., ஏ., பிஏ இரத்த வகைகளைக் கேள்விப்பட்டிருப்போம்.. அதென்ன பாம்பே குரூப்..! இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..?

Gowthami Subramani Updated:
ஓ., பி., ஏ., பிஏ இரத்த வகைகளைக் கேள்விப்பட்டிருப்போம்.. அதென்ன பாம்பே குரூப்..! இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..?Representative Image.

நம் எல்லோரும் ஓ வகை, பி வகை, ஏ வகை என இரத்த வகைகளைக் கேள்விப்பட்டிருப்போம். இந்த வரிசையில், பாம்பே குரூப் என அபூர்வ இரத்த வகையும் உள்ளது. இது குறித்து அனைவருமே கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பதிவில், HH என்ற பாம்பே இரத்த வகையைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

ஓ., பி., ஏ., பிஏ இரத்த வகைகளைக் கேள்விப்பட்டிருப்போம்.. அதென்ன பாம்பே குரூப்..! இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..?Representative Image

இரத்த வகைகள்

பொதுவாக, “ஓ” பிரிவு இரத்த வகையைக் கொண்டிருப்பவர்களை “யுனிவர்சல் டோனர்” என அழைப்பர். ஏனெனில், இந்தப் பிரிவு இரத்தம் கொண்டிருப்பவர்கள், A, B, மற்றும் AB என அனைத்து இரத்தப் பிரிவினருக்குமே இரத்தத்தை வழங்க முடியும். அதாவது இந்த மூன்று பிரிவுகளுமே O வகை இரத்தத்தை ஏற்றுக் கொள்ளும். ஆனால், இந்த பாம்பே குரூப் என அழைக்கப்படும் இந்த HH வகை இரத்தப்பிரிவு உள்ளவர்கள் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆரம்ப காலத்தில், இரத்த வகை கண்டறியப்படாமல் யார் வேண்டுமானாலும் இரத்தம் வழங்கவும், பெறவும் மருத்துவத் துறையில் அனுமதிக்கப்பட்டது. இதனால், அவர்கள் பாதிக்குப் பாதி உயிர் பிழைப்பதும், பெரும்பாலானோர்க்கு இரத்த மாற்று சிகிச்சைகள் தோல்வியில் தான் முடிவடைந்துள்ளது. இதற்கான காரணம், இரத்தத்தில் உள்ள பிரிவுகள் கண்டறியப்படாமல் இருந்ததே எனக் கூறப்படுகிறது.

ஓ., பி., ஏ., பிஏ இரத்த வகைகளைக் கேள்விப்பட்டிருப்போம்.. அதென்ன பாம்பே குரூப்..! இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..?Representative Image

இரத்தவகைகள் கண்டுபிடிப்பு

1900 ஆம் ஆண்டில், டாக்டர். கார்ல் லாண்ட்ஸ்டீனர் என்பவரே, முதன்முதலில் இரத்தத்தின் பிரிவுகளைக் கண்டறிந்து, அதற்கு A, B, AB, மற்றும் O எனப் பெயரிட்டார். இதில் A பிரிவானது A1, B2 என இரண்டு துணை வகைகளாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு இரத்த பிரிவுகளைக் கண்டறிந்த பிறகும், இரத்த மாற்று சிகிச்சையின் போது உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகே, இரத்தத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, குரங்கிலிருந்து ஒரு புதிய வகை இரத்தப் பிரிவு கண்டறியப்பட்டது. அந்தப் பிரிவுக்கு Rh எனப் பெயர் சூட்டப்பட்டது. மேலும், இது Positive, Negative என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.

அதன் பிறகே, பாசிட்டிவ் பிரிவு இரத்தம் கொண்டவர்களுக்கு நெகட்டிவ் பிரிவு இரத்தம் செலுத்துவதும், நெகட்டிவ் பிரிவு இரத்தம் கொண்டவர்களுக்கு பாசிட்டிவ் பிரிவு இரத்தம் செலுத்தும் பழக்கமும் நிறுத்தப்பட்டது. இந்த வகையான ஆராய்ச்சிகளின் விளைவாக, பெரிய முன்னேற்றங்கள் இருந்திருந்தாலும், இதில் சவாலாக இருந்தது பாம்பே குரூப் தான். இதனை HH இரத்த பிரிவு என்றே அழைப்பார்கள். இந்த அபூர்வ இரத்த வகையானது, முதன் முதலில் பாம்பேயில் கண்டறியப்பட்டதால், பாம்பே குரூப் என அழைக்கப்பட்டு வருகிறது. 10 லட்சம் பேர்களில் 4 பேர் என்ற விகிதத்திலேயே இந்த ரத்த வகை இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஓ., பி., ஏ., பிஏ இரத்த வகைகளைக் கேள்விப்பட்டிருப்போம்.. அதென்ன பாம்பே குரூப்..! இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..?Representative Image

வேறு எந்த பிரிவையும் ஏற்காது

இந்த பாம்பே இரத்தப் பிரிவை, கடந்த 1952-ல் பம்பாயில் டாக்டர் பெண்டே என்பவர் முதன் முதலாக கண்டறிந்தார். இதனாலேயே இது பாம்பே குரூப் என அழைக்கப்படுகிறது. இரத்தப் பிரிவானது மரபணுக்களின் மூலமாகவே தீர்மானிக்கப்படுகிறது. அதன் படி, ஒரு குறிப்பிட்ட மரபணு இருப்பவர்களிடம் மட்டுமே இந்த வகை இரத்தம் இருக்கும் எனவும், இது ஆரம்ப காலத்தில் பம்பாயில் உள்ள சில குறிப்பிட்ட மக்களிடம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, தற்போது பெரும்பாலான இடங்களில் இந்தப் பிரிவு இரத்தம் உள்ளவர்கள் இருக்கின்றனர். O, A, B, AB உள்ளிட்ட இரத்த வகைகளைக் கொண்டவர்கள், தவிர்க்க முடியாத சமயத்தில் இரத்தத்தை மாற்றி ஏற்றிக் கொள்ளலாம். ஆனால், இந்த HH வகை இரத்தம் உள்ளவர்களுக்கு அதே பிரிவு கொண்ட நபரால் மட்டுமே இரத்தம் கொடுக்கவும் முடியும், வாங்கவும் முடியும். எனவே, இது மற்ற எந்தவகைப் பிரிவு இரத்தத்தையும் ஏற்றுக் கொள்ளாது.

இத்தகைய HH பிரிவு இரத்த வகையைக் கொண்டிருப்பவர்கள், குறைந்த அளவிலான நபர்களே இருப்பதால், இந்த வகை இரத்தத்தை எளிதில் கண்டறிவது இயலாது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்