Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மீண்டும் பரவும் ஜிகா வைரஸ்…! அறிகுறிகள், பரவும் முறை, எப்படி தடுப்பது? | How To Prevent Zika Virus

Gowthami Subramani Updated:
மீண்டும் பரவும் ஜிகா வைரஸ்…! அறிகுறிகள், பரவும் முறை, எப்படி தடுப்பது? | How To Prevent Zika VirusRepresentative Image.

மழைக்காலம் என்றாலே, உடல் சருமத்தைப் பராமரிப்பதுடன் பல்வேறு தொற்றுக்கள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டியதும் முக்கியமானதாகும். மழை வரும் காலத்தில் பெரும்பாலும், தண்ணீர் தேங்கி நிற்பதாலும், முறையான காரணிகள் இல்லாமையாலும் பல்வேறு தொற்றுக்கள் பரவி ஆரோக்கியத்தைப் பாதிக்கும் வகையில் அமைகிறது. 

மீண்டும் பரவும் ஜிகா வைரஸ்…! அறிகுறிகள், பரவும் முறை, எப்படி தடுப்பது? | How To Prevent Zika VirusRepresentative Image

ஜிகா வைரஸ்

மழைக்காலங்களில் பரவும் நோய்களாக அமைவது டெங்கு, மலேரியா காய்ச்சல் போன்றவையாகும். இத்துடன், ஜிகா வைரஸ் பாதிப்பும் அடங்கும். இந்த ஜிகா வைரஸானது, பரவக்கூடிய மற்ற வைரஸ் காய்ச்சல்களைப் போன்றதாகும். டெங்கு, சிக்கன்குனியா போன்ற தொற்று நோய்களைப் பரப்பக் கூடிய ஏடிஎஸ் வகையைச் சேர்ந்த கொசுக்கள் மூலமாகவே, இந்த ஜிகா வைரஸும் பரவுகிறது. இது பெரும்பாலும் இந்தியாவைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் பரவக் கூடிய இந்த வகை வைரஸை பரவால் தடுப்பதும், நாம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் மிக முக்கியமானதாகும்.

மீண்டும் பரவும் ஜிகா வைரஸ்…! அறிகுறிகள், பரவும் முறை, எப்படி தடுப்பது? | How To Prevent Zika VirusRepresentative Image

ஜிகா வைரஸ் கண்டுபிடிப்பு

மனிதர்களைத் தாக்கக் கூடிய இந்த ஜிகா வைரஸானது, முதன் முதலில் 1947 ஆம் ஆண்டு உகாண்டா நாட்டில் குரங்குகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

பின், 1954-ல் முதன் முதலாக நைஜீரியாவில் இந்த வைரஸானது மனிதர்களிடத்தில் கண்டறியப்பட்டது. பிறகு ஆப்பிரிக்கா, பசிபிக் தீவுகள், தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவியது.

இவ்வாறு மனிதர்களுக்குப் பரவி இருப்பினும், சிறிய அளவில் பரவுதலே காணப்பட்டது. இந்த வைரஸ் 2015 ஆம் ஆண்டில் பிரேசிலில் பரவிய பின், வேகமாகப் பரவி வருகிறது.

மீண்டும் பரவும் ஜிகா வைரஸ்…! அறிகுறிகள், பரவும் முறை, எப்படி தடுப்பது? | How To Prevent Zika VirusRepresentative Image

ஜிகா வைரஸ் அறிகுறிகள்

மலேரியா, டெங்கு உள்ளிட்ட கொசுக்களின் மூலம் பரவும் நோயாக இருப்பினும், ஜிகா வைரஸானது பல்வேறு அறிகுறிகளுடன் பாதிப்பை ஏற்படுத்தும். ஜிகா வைரஸ் அறிகுறிகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

✤ ஏடிஎஸ் வகை கொசுக்கள் மூலம், பரவக்கூடியதாக ஜிகா வைரஸ் உள்ளது.

✤ இந்த கொசுக்கள், அதிகாலை, பிற்பகல், மாலை போன்ற வேளைகளில் மனிதர்களைக் கடிக்கும் எனக் கூறப்படுகிறது.

✤ மேலும், இந்த வகை கொசுக்கள் டெங்கு, மஞ்சள் காய்ச்சல், சிக்கன்குனியா உள்ளிட்ட காய்ச்சலைப் பர்பபும் தன்மை கொண்டதாகும்.

✤ இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, காய்ச்சல், தோலில் நமைச்சல், தலைவலி, மூட்டு வலி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும்.

✤ கண் சிவத்தல், வீக்கம் போன்றவையும் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

மீண்டும் பரவும் ஜிகா வைரஸ்…! அறிகுறிகள், பரவும் முறை, எப்படி தடுப்பது? | How To Prevent Zika VirusRepresentative Image

கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ்

✤ பொதுவாக, ஜிகா வைரஸ் கர்ப்பிணிகளைத் தாக்கக் கூடாதவாறு செய்ய வேண்டும்.

✤ ஜிகா வைரஸால், கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டால் கருவில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். இதன் காரணமாக, கருச்சிதைவும், குறை பிரசவமும் ஏற்படலாம்.

✤ மேலும், இந்த வைரஸானது 3 முதல் 14 நாள்கள் வரை உடலில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

✤ இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் அறிகுறிகள் 2 முதல் 7 ஆவது நாளில் தென்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் பரவும் ஜிகா வைரஸ்…! அறிகுறிகள், பரவும் முறை, எப்படி தடுப்பது? | How To Prevent Zika VirusRepresentative Image

ஜிகா வைரஸ் தடுப்பு முறைகள்

மழைக்காலங்களில் பரவக் கூடிய ஜிகா வைரஸ் தொற்று நோயைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பது மிக முக்கியமானதாகும். வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் இடத்தில், ஜிகா வைரஸ் தாக்குதல் குறைவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், பின்வரும் வழிமுறைகளைக் கையாள்வது நல்லதாகும். இதற்கான சிகிச்சை எதுவும் இல்லை என்பதால், கொசுக்கடியை விரட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

✤ வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்க விடாமல் பாதுகாக்க வேண்டும்.

✤ காய்ச்சி வடிகட்டிய குடிநீரையே பருக வேண்டும்.

✤ கொசு கடிக்காமல் இருக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

✤ வாளி, பூந்தொட்டி உள்ளிட்டவற்றிலும் தண்ணீர் தேங்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

✤ குறிப்பாக, கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்யக் கூடாது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்