Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டைட்டானிக் பட பிரபலத்திற்கு வந்த சோதனை… கடுமையான நோயால் ஆளே மாறிப் போன பரிதாபம்..!

Gowthami Subramani Updated:
டைட்டானிக் பட பிரபலத்திற்கு வந்த சோதனை… கடுமையான நோயால் ஆளே மாறிப் போன பரிதாபம்..!Representative Image.

சமீபத்தில், தமிழ்ப் பிரபலமான சமந்தா மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், டைட்டானிக் படப் பாடகியான செலின் டியான் மற்றொரு கடினமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

டைட்டானிக் பட பிரபலத்திற்கு வந்த சோதனை… கடுமையான நோயால் ஆளே மாறிப் போன பரிதாபம்..!Representative Image

டைட்டானிக் படப் பாடகி

செலின் டியான் கனடாவைச் சேர்ந்தவர் ஆவார். இவர், தான் ஸ்ட்ஃப் பர்சன் சிண்ட்ரோம் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார். இவருக்கு தற்போது 54 வயது ஆகிறது. இவர் ஐரோப்பாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

டைட்டானிக் பட பிரபலத்திற்கு வந்த சோதனை… கடுமையான நோயால் ஆளே மாறிப் போன பரிதாபம்..!Representative Image

ஸ்டிஃப் பெர்சன் சிண்ட்ரோம் (Stiff Person Syndrome)

இந்த நோயானது, நரம்பியல் கோளாறு காரணமாக ஏற்படுவதாகும். இந்த வகை நோய், மில்லியனில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும் என கூறப்படுகிறது. இது ஒரு அபூர்வமாக ஏற்படக் கூடிய ஒரு வகை நோயாகும். அமெரிக்க நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் நியூராலஜிக்கல் டிசார்டரின் அறிக்கையின் படி, இந்த நோயானது நோய் எதிர்ப்புச் சக்தியில் ஏற்படும் கோளாறு காரணமாக ஏற்படுவதாகும் எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த நோய் ஏற்பட்டால், சிறு சத்தம், தொடுதல், மன அழுத்தம் ஏற்படும் போது தசைகள் விறப்பு அடைதல் ஏற்படுதலுடன், தசைகளை அசைக்க முடியாத நிலை ஏற்படும்.

டைட்டானிக் பட பிரபலத்திற்கு வந்த சோதனை… கடுமையான நோயால் ஆளே மாறிப் போன பரிதாபம்..!Representative Image

நோய்க்கான அறிகுறிகள் (Stiff Person Syndrome Symptoms)

இந்த நரம்பியல் கோளாறால் உருவாகக் கூடிய இந்த நோயானது உடல் தோரணை சீரற்றதாக்குவதுடன், கூன் விழுந்தது போல உடல் அமைப்பை உண்டாக்கக் கூடும். இவ்வாறு வளைந்து கொடுக்கக் கூடிய தன்மையற்ற உடல் அமைப்பைக் கொண்டிருப்பது, இந்த நோய் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதைக் காட்டுகிறது.

இந்த நோய் தாக்குதல் உள்ளவர்களால், சில சமயம் நடப்பது, அசைவது போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிறிய சத்தம் கேட்டால் கூட அவர்களின் தசை தானாகவே, இறுகி, வலியை ஏற்படுத்தும். இத்துடன், அந்த நபரை செயலிழக்க வைத்து விடும் எனக் கூறப்படுகிறது.

டைட்டானிக் பட பிரபலத்திற்கு வந்த சோதனை… கடுமையான நோயால் ஆளே மாறிப் போன பரிதாபம்..!Representative Image

ஸ்டிஃப் பெர்சன் சிண்ட்ரோம் நோய்க்கான காரணம்

நரம்பியல் கோளாறு தொடர்பான நோயான ஸ்டிஃப் பெர்சன் சிண்ட்ரோம் நோயானது நிபுணர்களால் கூட தற்போது வரை முழுமையான தகவலைக் கண்டறிய முடியவில்லை. இருப்பினும், இந்த நோயானது நோய் எதிர்ப்புத் திறனை இயக்கி மூளை மற்றும் முதுகு தண்டுவடத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களினால் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த நோய் குறித்து தெளிவான காரணம் இல்லாமையால், இந்த நோயானது பார்கின்சன் எனப்படக்கூடிய நோய் வகையுடன் சேர்த்து கூறப்படுகிறது. ஏனென்றால், இந்த இரண்டு நோய்களுக்குமே ஒரே மாதிரியான அறிகுறிகள் தான் காணப்படுகின்றன.

நோயைக் குணப்படுத்த

இந்த நோயை முழுவதுமாக குணப்படுத்த, தற்போது வரை எந்தவொரு சரியான சிகிச்சை முறையும் கண்டறியப்படவில்லை எனக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்