Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாரடைப்பை ஏற்படுத்தும் இரத்தக்குழாய் அடைப்புக்கு காரணம் என்ன?

Nandhinipriya Ganeshan October 08, 2022 & 14:30 [IST]
மாரடைப்பை ஏற்படுத்தும் இரத்தக்குழாய் அடைப்புக்கு காரணம் என்ன?Representative Image.

சமீப காலமாக வயது வித்தியாசம் இல்லாமல் மாரடைப்பு நோயால் ஏராளமான மரணங்கள் நிகழ்கின்றன. அதுவும் பெண்களை காட்டிலும் ஆண்களே அதிகளவில் இதனால் பாதிக்கப்படுகிறார். இதற்கு முக்கிய காரணம் இதயத்தின் இரத்தக்குழாய்களில் ஏற்படும் திடீர் அடைப்பே. இதயத்தில் மொத்தம் மூன்று இரத்தக்குழாய்கள் இருக்கும். வயதாக ஆக இந்த அடைப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கும். சில சமயங்களில் சிலருக்கு 50% இல் இருக்கும் அடைப்பு திடீரென வெடித்து 100 சதவிகிதமாக மாறலாம். அந்த நிலையில் தான் கடுமையான நெஞ்சுவலி, மூச்சு வாங்குவது போன்றவை ஏற்படும். இதைத்தான் 'மாரடைப்பு' அல்லது 'ஹார்க் அட்டாக்' என்கிறோம். இப்போது இரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அறிகுறிகளை பார்க்கலாம். 

காரணங்கள்:

இரத்தக்குழாய் அடைப்பு என்பது பல காரணங்களால் ஏற்படுடலாம். இருப்பினும் பொதுவான காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

  • பரம்பரை
  • மரபணு
  • வயது முதிர்ச்சி
  • சர்க்கரை நோய்
  • உயர் இரத்த அழுத்தம்
  • கொலஸ்ட்ரால்
  • புகைப்பழக்கம்
  • ஆல்கஹால்

அறிகுறிகள்:

பொதுவாக, இந்த அடைப்பானது 40 - 50 % ஆக இருக்கும்வரை பலருக்கும் அதன் அறிகுறியே தெரியாது. அதுவே 70 சதவிகிதத்துக்கும் மேல் அதிகரிக்கும்போது அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். அதாவது, ஒருவர் சாதாரணமாக நடக்கும்போதும் மூச்சு வாங்குதல், நெஞ்சு பிடிப்பது போன்ற உணர்வு, களைப்பு மற்றும் வலி ஏற்படும். நடக்கும்போது ஏற்படும் இந்த அறிகுறிகள் நிற்கும்போது சரியாகிவிடும். 

இதை மருத்துவ முறையில் 'க்ரானிக் கொரோனரி சிண்ட்ரோம்' அல்லது 'ஸ்டேபிள் ஆன்ஜினா' என்று சொல்வார்கள். நம்மில் பலரும் இம்மாதிரியான அறிகுறிகளை வயதாவதன் அறிகுறி என்று நினைத்துக் கொண்டு கண்டுக்கொள்ளாமல் இருப்பார்கள். ஆனால், அதற்கு பின்னால் இரத்தக்குழாய் அடைப்பு முக்கிய காரணமாக இருக்கலாம். எனவே, இம்மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவதன் மூலம் ஆயுளை சற்று தள்ளிப்போடலாம். 

Also Read:

ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய சில விஷயங்கள்.. 

மிகவும் இளம்வயதிலேயே மாரடைப்பு வருவதற்கான காரணம் என்ன..?

தக்காளி காய்ச்சலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்