Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மீந்து போன சப்பாத்தில் சுவையான சப்பாத்தி சாண்ட்விச்! இப்படி செஞ்சி பாருங்க.!|Chapati Sandwich Recipe

Gowthami Subramani Updated:
மீந்து போன சப்பாத்தில் சுவையான சப்பாத்தி சாண்ட்விச்! இப்படி செஞ்சி பாருங்க.!|Chapati Sandwich RecipeRepresentative Image.

பொதுவாக எந்த ஒரு உணவுப் பொருளும் மீந்து விட்டது எனில், அவற்றைத் தூக்கி எறிந்து விடுவது வழக்கம். ஆனால், மீந்து போன பொருள்களை வைத்து புதிதாக செய்யப்படும் டிஸ் ஆனது, அனைவருக்கும் பிடிக்கும் விதமாக அமைகிறது. அந்த வகையில், இட்லி மீந்து விட்டது எனில் இட்லி உப்புமா செய்வது எல்லோருக்கும் தெரியும். இதுவே, சப்பாத்தி மீந்து போய் விட்டால் பெரும்பாலும் அதனை சாப்பிடாமல் தூக்கி எறிந்து விடுவார்கள். சரி, இந்தப் பதிவில் மீந்து போன சப்பாத்தியை வைத்து எப்படி சப்பாத்தி சாண்ட்விச் செய்யலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

மீந்து போன சப்பாத்தில் சுவையான சப்பாத்தி சாண்ட்விச்! இப்படி செஞ்சி பாருங்க.!|Chapati Sandwich RecipeRepresentative Image

சப்பாத்தி சான்ட்விச்

சாண்ட்விச்கள் பொதுவாக எல்லோரும் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவுப் பொருள்களில் ஒன்றாகி விட்டது. அந்த வகையில் பல்வேறு உணவுப் பொருள்களைக் கொண்டு சாண்ட்விச்களை தயார் செய்யலாம். அந்த வகையில் சப்பாத்தியைக் கொண்டு சப்பாத்தி சாண்ட்விச்சை தயார் செய்து சாப்பிடலாம். இதனை மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் ஆகவும் வழங்கலாம். குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஆரோக்கியமான உணவுப் பொருள்களில் இதுவும் ஒன்றாக அமைகிறது. அதே போல, எடை குறைப்பில் இருப்பவர்களும் சப்பாத்தி சாண்ட்விச்சை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும், இதனை காலை நேர உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

மீந்து போன சப்பாத்தில் சுவையான சப்பாத்தி சாண்ட்விச்! இப்படி செஞ்சி பாருங்க.!|Chapati Sandwich RecipeRepresentative Image

சப்பாத்தி சாண்ட்விச் செய்யத் தேவையான பொருள்கள்

சப்பாத்தி – 4

முட்டைக்கோஸ் – ½ கப்

வெங்காயம் – ½ கப்

கேப்சிகம் (க்ரீன் பெப்பர்) – ½ கப்

வெஜிடபிள் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்

மல்லி தூள் – ½ டீஸ்பூன்

ரெட் சில்லி பவுடர் – 1 டீஸ்பூன்

ட்ரை மேங்கோ பவுடர் – ½ டீஸ்பூன்

கார்ன் – ¼ கப்

பட்டர் – 2 டீஸ்பூன்

மயோனைஸ் – 2 டேபிள்ஸ்பூன்

சீஸ் க்யூப்ஸ் – 4 பீஸ்

டொமேட்டோ கெட்ச் அப் – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மீந்து போன சப்பாத்தில் சுவையான சப்பாத்தி சாண்ட்விச்! இப்படி செஞ்சி பாருங்க.!|Chapati Sandwich RecipeRepresentative Image

சப்பாத்தி சாண்ட்விச் செய்வது எப்படி?

✤ முதலில், கடாய் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின், அதில் வெங்காயம், கார்ன், கேப்சிகம் போன்றவற்றைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

✤ பிறகு, ட்ரை மேங்கோ பவுடர், சிவப்பு மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். அது ட்ரையாக இருப்பது போலத் தோன்றினால், 2 முதல் 3 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

✤ கடைசியாக எடுத்து வைத்துள்ள முட்டைக்கோஸை சேர்த்து, மேலும் 2 நிமிடம் அதனை வதக்கி அடுப்பை அணைத்து விடலாம்.

✤ அதன் பிறகு, இந்த காய்கறி கலவையில் தக்காளி கெட்ச் அப் & மயோனைஸ் சேர்த்து மெதுவாக கலக்க வேண்டும்.

✤ இப்போது, சப்பாத்தியை எடுத்து அதன் மீது மேலே ரெடியாகி இருக்கும் கலவையை பரப்பி சப்பாத்தி சாண்ட்விச்சை தயார் செய்யலாம்.

✤ அரை சப்பாத்தி முழுமைக்கும் இந்த காய்கறி கலவையை அப்ளை செய்து, அதன் பிறகு சிறிது துருவிய சீஸ் சேர்த்து சப்பாத்தியை இரண்டாக மடித்துக் கொள்ள வேண்டும்.

✤ பிறகு, ஒரு Pan-ஐ எடுத்து, அதில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து சூடு செய்து, தயாரித்து வைத்துள்ள சப்பாத்தி சாண்ட்விச்சை வைத்து அதன் இருபுறமும், பொன்னிறமாக மாறும் வரை சமைக்க வேண்டும்.

✤ அதன் பின், சப்பாத்தி சாண்ட்விச்சை இரண்டாக நறுக்கி பரிமாறலாம்.

இவ்வாறு எளிமையாக வீட்டிலேயே சுவையான சப்பாத்தி சாண்ட்விச்சை தயார் செய்யலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்