Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உடல் உஷ்ணம் குறைய என்ன செய்ய வேண்டும்?|How To Reduce Body Heat in Tamil

Vaishnavi Subramani Updated:
உடல் உஷ்ணம் குறைய என்ன செய்ய வேண்டும்?|How To Reduce Body Heat in TamilRepresentative Image.

மக்கள் வெவ்வேறு இடங்களில் வேலை மற்றும் தொழில் செய்வதால் உடலில் அதிக அளவில் சூடு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. வெயிலில் செல்வதாலும் மற்றும் விளையாடுவதாலும் சூடு அதிக அளவில் உண்டாகும். இந்த பதிவில் சூட்டை எப்படிக் குறைப்பது என்பதைப் பார்க்கலாம்.

சூடான உணவுப் பொருட்கள் உண்பதைப் பலர் விரும்புகின்றனர். அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும், அசெளகரியங்களும் பற்றி கவலை கொள்ளமால் வாழ்கின்றனர். இதனைச் சரிச் செய்யும் வழிமுறைகளைப் பற்றிப் பார்க்கலாம்

உடல் உஷ்ணம் குறைய என்ன செய்ய வேண்டும்?|How To Reduce Body Heat in TamilRepresentative Image

உடல் உஷ்ணத்தை குறைக்க மற்றும் தவிர்ப்பதற்கான வழிகள்

  • உடலில் சூட்டைக் குறைக்க ஒரு நாளுக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதால் சூட்டைக் குறைப்பதுடன் பல பிரச்சனைகள் சரியாகும்.

  • இயற்கையான காற்றை பத்து முதல் இருபது நிமிடங்கள் சுவாசிப்பதனால் உடல் சூடு குறைவதுடன், மூளைக்கு ஓய்வும் கிடைக்கும். அதனுடன் பல சுவாசப் பிரச்சனைகள் எளிதில் குணமாகும்.

  • உடலில் சூடு அதிகம் உள்ளவர் சூடான நீரில் குளிக்காமல் அதற்குப் பதிலாக அறைவெப்பநீரில் குளிக்கலாம். குளிர்ந்த நீரில் குளித்தல் உடலின் சூட்டைத் தவிர்ப்பதுடன், குறைக்கவும் செய்யும்.

உடல் உஷ்ணம் குறைய என்ன செய்ய வேண்டும்?|How To Reduce Body Heat in TamilRepresentative Image
  • உடலில் சூட்டினால் ஏற்படும் வழிகளைச் சரிச் செய்ய ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரையோ எடுத்துக் கொண்டு குறிப்பாக மணிக்கட்டு, கழுத்து மற்றும் வழி ஏற்படும் இடங்களில் ஒற்றி எடுக்கவும். இதனால் சூடு தனிக்கப்பட்டு உடல் குளிர்ந்த நிலையை  எளிதில் அடையும்.

  • வெப்பநிலை அதிகமாக இருக்கும் இடங்களில் உடற்பயிற்சி செய்வதையும் மற்றும் உடலுக்கு அதிக வேலைத் தருவதையும் தவிர்க்கவும். இதனால் உடலின் வெப்ப நிலை உயரமால் இருக்கும்.

  •  அணியும் ஆடைகளினால் எளிதில் வெப்ப உள்ளே செல்ல அனுமதிக்கிறது. அதிலும் அக்ரிலிக் மற்றும் நைலான் போன்ற துணிகளைத் தவிர்ப்பது சூட்டைக் குறைக்கும்.

உடல் உஷ்ணம் குறைய என்ன செய்ய வேண்டும்?|How To Reduce Body Heat in TamilRepresentative Image
  • கைத்தறி துணிகள், காட்டன் மற்றும் கதர் போன்ற உடைகளை அணிவதால் சூட்டைத் தவிர்க்கலாம்.

  •  உடலுக்குச்  சிறிதளவு நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு எளிதில் குறைவதுடன், மற்றும் கண்கள் வலி,வயிற்று வலிபோன்ற வலிகளும் குறையும். இருப்பினும், மருத்துவர் ஆலோசனையை மேற்கொண்டு குளிப்பது நல்லது.

  • உடல் சூட்டினால் கண் வலி, கண் எரிச்சல் மற்றும் தலைவலி, வயிற்றுவலி ஆகியவை அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்ளவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்