Tue ,Apr 30, 2024

சென்செக்ஸ் 74,668.04
937.88sensex(1.27%)
நிஃப்டி22,643.40
223.45sensex(1.00%)
USD
81.57
Exclusive

பிளம் கேக் இல்ல… ரம் கேக்…! ஈஸியா வீட்டிலேயே இப்படி செய்யலாம்… கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்..! | Christmas Special Rum Cake

Gowthami Subramani Updated:
பிளம் கேக் இல்ல… ரம் கேக்…! ஈஸியா வீட்டிலேயே இப்படி செய்யலாம்… கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்..! | Christmas Special Rum CakeRepresentative Image.

உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் கிறிஸ்துமஸ் என்றாலே, கேக் என்பது தான் மிகவும் ஸ்பெஷலான ஒன்று. அந்த வகையில், டிசம்பர் 25 ஆம் நாள் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விழாவிற்கு, அக்டோபர் மாதம் முதலே கேக் செய்வதற்கு ஆரம்பித்து விடுவர். சிலர் வீடுகளிலேயே எளிமையான முறையில் கேக் செய்ய விரும்புவர். அதன் படி, கிறிஸ்துமஸ் விருந்துகளில் முக்கியமானதாக இருக்கும் கேக் வகையில், ரம் கேக் ரெசிபியை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

பிளம் கேக் இல்ல… ரம் கேக்…! ஈஸியா வீட்டிலேயே இப்படி செய்யலாம்… கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்..! | Christmas Special Rum CakeRepresentative Image

ரம் கேக் செய்ய தேவையான பொருள்கள்

ரம் – ¾ கப்

முட்டை – 4

வெண்ணெய் – ½ கப்

முந்திரி – 5

பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன்

சர்க்கரை – ½ கப்

பால் – ¾ கப்

வெண்ணிலா சாறு – 2 டீஸ்பூன்

கோகோ பவுடர் – 1 டீஸ்பூன்

மைதா மாவு – 1 கப்

பிளம் கேக் இல்ல… ரம் கேக்…! ஈஸியா வீட்டிலேயே இப்படி செய்யலாம்… கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்..! | Christmas Special Rum CakeRepresentative Image

ஓவனில் ரம் கேக் செய்முறை

முதலில், பேக்கிங் ட்ரெயிலில் வெண்ணெய் தடவி அதனை 180 டிகிரி செல்சியஸ் அளவிற்கு நன்றாக சூடாக்க வேண்டும்.

பின்னர், பேக்கிங் ட்ரெயில் நறுக்கிய முந்திரியை சமமாக கலக்க வேண்டும்.

பிறகு, கேக் கலவை செய்வதற்கு பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் மைதா மாவு, பேக்கிங் சோடா, கொக்கோ பவுடர், உப்பு சேர்த்து சலித்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு கிண்ணம் ஒன்றை எடுத்து, அதில் பொடியாக்கப்பட்ட சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழைக்க வேண்டும். குழைத்த வெண்ணெய் கலவையுடன் அடித்த முட்டையைச் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

இதனுடன், செய்து வைத்துள்ள கேக் கலவையை நன்கு சேர்த்து கலந்து கொள்ளலாம்.

பிறகு, அதில் படிப்படியாக பால் மற்றும் ரம் சேர்த்து, அவை சரியான பதத்திற்கு வரும் வரை கலக்க வேண்டும். அதாவது மாவு கெட்டியாகும் வரை கலக்கலாம்.

பிறகு, மாவை பேக்கிங் ட்ரெயிலில் ஊற்றி 55 நிமிடங்கள் வரை (சுமாராக 45 நிமிடங்கள்) ஓவனில் வைத்து பேக் செய்ய வேண்டும்.

55 நிமிடங்கள் கழித்து கேக் வெந்த பின் வெளியில் எடுத்து, அதன் சூடு ஆறிய பிறகு, விரும்பிய படி அலங்காரம் செய்து கொள்ளலாம்.

பிளம் கேக் இல்ல… ரம் கேக்…! ஈஸியா வீட்டிலேயே இப்படி செய்யலாம்… கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்..! | Christmas Special Rum CakeRepresentative Image

குக்கரில் ரம் கேக் செய்முறை

கனமான குக்கர் ஒன்றில் பாத்திரம் வைப்பதற்காக ஸ்டாண்ட் போல ஒன்றை அதில் அழுத்தி வைக்கவும்.

பிறகு, அந்த ஸ்டாண்டின் மேல் கேக் கலவையை ஊற்றி பாத்திரைத்தை வைத்து விசில் போடாமல் மூட வேண்டும்.

இதில், முக்கியமாக அடுப்பை வேகமாக வைக்கக் கூடாது. சிம்மில் வைத்து தான் வேக விட வேண்டும்.

குக்கர் பதத்தைப் பொறுத்து கேக் முழுமையாக வேகும் வரை காத்திருக்க வேண்டும். சிலருக்கு 45 நிமிடத்தில் கேக் வெந்து விடும். இன்னும் சிலருக்கு குக்கரின் பதத்தைப் பொறுத்து ஒரு மணி நேரம் கூட ஆகலாம். இவ்வாறு கேக் முழுமையாக வெந்த பிறகு எடுத்தால், அவற்றின் சுவை மாறாமல் அவனில் கிடைப்பது போல தயார் செய்யலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்