Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. தித்திக்கும் சுவையில் 7 வகை பாயாசம் ரெசிபிஸ்.. | Tamil New Year 2023 Recipes

Nandhinipriya Ganeshan Updated:
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. தித்திக்கும் சுவையில் 7 வகை பாயாசம் ரெசிபிஸ்.. | Tamil New Year 2023 RecipesRepresentative Image.

இந்த தமிழ்ப்புத்தாண்டை ஸ்வீட்டுடன் வரவேற்கலாம். வருகின்ற ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. அந்த நாளில் வீட்டில் அனைவரும் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்துக் கொண்டு அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று வருவது வழக்கம். அதுமட்டுமல்லாமல் உற்றார், உறவினர்கள் எல்லாம் வீட்டிற்கு வருவார்கள். அன்றைய தினத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. அந்த சந்தோசத்தை இரட்டிப்பாக்கும் விதமாக வீட்டில் பெண்கள் பொங்கல், பலகாரங்கள் செய்து விருந்தளிப்பது வழக்கம்.

அதில் ஒரு பங்காக பாயசம் செய்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்வார்கள். அந்த வகையில், பாயாசம் என்றாலே நமக்கு பால் பாயாசம், பருப்பு பாயாசம், சேமியா பாயாசம் நினைவுக்கு வரும். ஆனால், இம்முறை வித்தியாசமான பாயாசங்களை முயற்சி செய்து பார்க்கலாம். இது உண்மையில் வித்தியாசமான சுவையை (Tamil New Year Sweet Recipes) கொடுக்கும். அதுமட்டுமல்லாமல், விருந்துகளில் சிறப்பு சேர்க்கும்.

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. தித்திக்கும் சுவையில் 7 வகை பாயாசம் ரெசிபிஸ்.. | Tamil New Year 2023 RecipesRepresentative Image

பழ பாயாசம்

அனைத்து வகையான பழங்களையும் சேர்த்து சத்துள்ள சுவையான ஸ்வீட்டான பாயாசம். எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்:

  • பால் - 1/2 லிட்டர்
  • சர்க்கரை - 1/4 கப்
  • ரவை - 3 டேபிள் ஸ்பூன்
  • மில்க்மெய்ட் - 1/4 கப்
  • முந்திரி - 10
  • நெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய் பவுடர் - 1/2 ஸ்பூன்
  • வாழைப்பழம், திராட்சை - 1/2 கப்
  • ஆப்பிள், கொய்யாப்பழம், மாதுளம் பழம் - 1/2 கப்

செய்முறை:

  • ஒரு கடாய் அல்லது அடி கனமான பாத்திரத்தை மிதமான தீயில் வைத்து நெய்யை சூடாக்கவும்.
  • அதில் முந்திரி, உலர்ந்த திராட்சையை சேர்த்து லேசாக பழுப்பு நிறமாகும் வரை வறுக்கவும். (குறிப்பு: முதலில் முந்திரி பருப்பு, பின்னர் திராட்சை சேர்க்கவும்)
  • பின்னர் அதில் நறுக்கிய பழங்களை சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • பால் மற்றும் மில்மெய்ட் சேர்த்து, பிறகு சர்க்கரை சேர்க்கவும். பால் சேர்க்கும் போது பரிமாறும் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாலின் அளவை சரியாக பயன்படுத்தவும்.
  • இப்போது, அந்த கலவையில் ஏலக்காய் பவுடர் மற்றும் குங்குமப்பூ சேர்க்கவும்.
  • ரொம்ப நேரம் கொதிக்க வைக்காமல் வெறும் 5 நிமிடம் மட்டும் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடுங்கள்.
  • இப்போது, உங்களுடைய சுவையான பழ பாயாசம் அல்லது ஃப்ரெஷ் ஃப்ரூட் பாயாசம் இப்போது சிறப்பு விழாவைக் கொண்டாட தயாராக உள்ளது.
  • இதை சூடாகவும் சாப்பிடலாம், அல்லது ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லுனு சாப்பிடலாம்.
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. தித்திக்கும் சுவையில் 7 வகை பாயாசம் ரெசிபிஸ்.. | Tamil New Year 2023 RecipesRepresentative Image

கேரட் பாயாசம்

மிகவும் சுவையான ஆரோக்கியமான இனிப்பான கேரட் பாயாசம். உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய இந்த கேரட் பாயாசத்தை செய்வதற்கு ரொம்ப நேரம் செலவிட தேவையில்லை. மிகவும் ஈஸியாக, விரைவாக செய்துவிடலாம்.

தேவையான பொருட்கள்:

  • காய்ச்சிய பால் - 200 மி
  • நெய் - 2 டீஸ்பூன்
  • துருவிய கேரட் - 1 கப்
  • ஏலக்காய் பவுடர் - 1/2 ஸ்பூன்
  • முந்திரி - 10
  • சுகர் - 1 கப்
  • தேங்காய் துருவல் - 1/4 கப்
  • தண்ணீர் - தேவையான அளவு
  • உலர் திராட்சை - 5

செய்முறை:

  • கடாயில் நெய்யை ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். பிறகு, அதில் கேரட் விழுதுகளை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் பால், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து இறக்கவும்.
  • இப்போது ருசியான தித்திக்கும் கேரட் பாயசம் ரெடி.
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. தித்திக்கும் சுவையில் 7 வகை பாயாசம் ரெசிபிஸ்.. | Tamil New Year 2023 RecipesRepresentative Image

பப்பாளி பாயாசம்

பப்பாளி பழத்தை சேர்த்து மிகவும் அருமையான சுவையான பாயாசம். இது உங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும். ட்ரைப் பண்ணி பாருங்க.

தேவையான பொருட்கள்:

  • பப்பாளி விழுது - 1 கப்
  • முந்திரி - 8
  • வெல்லம் - 1/2 கப்
  • தேங்காய் பால் - 1 கப்
  • உலர் திராட்சை - 7
  • ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்
  • நெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • குங்குமப்பூ - சில இழைகள்
  • துருவிய பாதாம் - 1 டீஸ்பூன்

செய்முறை:

  • பப்பாளி விழுதுகளை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்.
  • அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, கெட்டியான தேங்காய் பால், வெல்லம் அல்லது தேன் சேர்க்கவும்.
  • பிறகு, முந்திரி, திராட்சையை சூடான நெய்யில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • அதை பாயாசத்துடன் சேர்த்து, ஒரு டீஸ்பூன் ஏலக்காய், குங்குமப்பூவை தூவி நன்கு கலக்கவும்.
  • பின்னர், அதில் துருவிய பாதாமை தூவி பரிமாறவும்.
  • ஆரோக்கியமான, சுவையான பப்பாளி பாயாசம் சுவைத்து மகிழ தயார்.
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. தித்திக்கும் சுவையில் 7 வகை பாயாசம் ரெசிபிஸ்.. | Tamil New Year 2023 RecipesRepresentative Image

பலாப்பழம் பாயாசம்

பலாப்பழத்தால் செய்யப்படும் இந்த பாயாசாம் கேரளாவின் பாரம்பரிய பாயாசம் ஆகும். இதை சக்க பிரதமன் என்று சொல்லுவார்கள்.

தேவையான பொருட்கள்:

  • பலாப்பழ விழுது - 1 கப்
  • தேங்காய் பால் - 1 கப்
  • ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
  • தேங்காய் துண்டுகள்
  • முந்திரி - 5
  • வெல்லம் - 1/2 கப்
  • தண்ணீர் - 1/4 கப்
  • நெய் - 3 டீஸ்பூன்

செய்முறை:

  • ஒரு பிரஷர் குக்கரில் பலாப்பழத்தை மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து இரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
  • அதை மிக்ஸியில் நன்றாக விழுதாக அரைத்து, தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
  • பின்னர் ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் நெய்யை சூடாக்கி தேங்காய் துருவல் மற்றும் முந்திரி சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து கொள்ளவும்.
  • 1/4 கப் வெல்லத்தை தண்ணீர் விட்டு 5 நிமிடங்களுக்கு சூடுபடுத்தவும். (பாகுத் தன்மையை சரிபார்க்க தேவையில்லை).
  • அதில் பலாப்பழம் விழுதை சேர்த்து, வெல்லத்துடன் பலாப்பழம் நன்றாக ஒட்டும் வரை கலக்கவும்.
  • சிறிது கெட்டியானதும், மீதமுள்ள நெய்யைச் சேர்த்து, தேங்காய்ப் பால் சேர்த்து வேக விடவும். தேங்காய் பால் சேர்த்த பிறகு நீண்ட நேரம் கொதிக்க விடாதீர்கள், ஏனெனில் அது பிரிந்துவிடும்.
  • பின்னர் அடுப்பை அணைத்து வறுத்த முந்திரி, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.
  • சுவையான கண்ணை பறிக்கும் பலாப்பழ பாயாசம் (Chakka pradhaman recipe in tamil) ரெடி..
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. தித்திக்கும் சுவையில் 7 வகை பாயாசம் ரெசிபிஸ்.. | Tamil New Year 2023 RecipesRepresentative Image

தேங்காய் பால் பாயாசம்

தேங்காய்ப் பால் பாயாசம் செய்வது ரொம்பவே சுலபம். அதைவிட ருசியும் ரொம்ப அருமையாக இருக்கும். வாங்க எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • துருவிய தேங்காய் - 1 கப்
  • பால் - 1 கப்
  • பச்சரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
  • வெல்லம் - 100 கிராம்
  • நெய் - 2 டீஸ்பூன்
  • நிலக்கடலை - சிறிதளவு
  • முந்திரி - தேவையான அளவு
  • ஏலக்காய் பவுடர் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

  • முதலில் துருவிய தேங்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து தேங்காய் பால் எடுத்துக்கொள்ளவும்.
  • பின்னர், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும், வெல்லத்தை சேர்த்து கரைத்து அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • இப்போது, தேங்காய் பாலுடன் அரிசி மாவு சேர்த்து கட்டி வராமல் நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
  • அத்துடன், வடிகட்டிய  வெல்லத்தை சேர்த்து அந்த கலவையை அடுப்பில் வைத்து 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.
  • இறுதியாக, ஒரு கடாயில் நெய்விட்டு சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு வறித்து பாயாசத்துடன் சேர்த்து கலந்தால் சுவையான, தேங்காய் பால் பாயாசம் ரெடி..
  • இதை ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லுனு குடித்தால் சுவை இரட்டிப்பு தான்.
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. தித்திக்கும் சுவையில் 7 வகை பாயாசம் ரெசிபிஸ்.. | Tamil New Year 2023 RecipesRepresentative Image

நுங்கு பாயாசம்

எத்தனை விதமான பாயாசம் குடித்திருப்போம்.. ஆனால், நுங்கு பாயாசம் மிகவும் ருசியானது உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது. வாங்க இந்த வெயில் காலத்தில் ஜில்லு ஒரு நுங்கு பாயாசம் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

  • பால் - 1 லிட்டர்
  • நுங்கு - 10
  • சர்க்கரை - 6 டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய் பவுடர் - 1 ஸ்பூன்

செய்முறை:

  • முதலில் ஆறு நுங்கின் தோலை நீக்கி மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். மீதி இருக்கும் 4 நுங்கை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
  • சர்க்கரையுடன் ஏலக்காய் பவுடரை சேர்த்து நன்கு பொடியாக்கிக் கொள்ளவேண்டும்.
  • பிறகு, பாலை நன்றாக சுண்ட காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.
  • அந்த பாலில் ஏலக்காய் கலந்த சர்க்கரை, பொடியாக நறுக்கிய நுங்கு, அனைத்தையும் சேர்த்து ஒன்றாக பாயாசம் பதத்திற்கு கலக்கி கொள்ளவும்.
  • இந்த கோடை வெயில் குலுகுலு நுங்கு பாயாசம் ரெடி.
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. தித்திக்கும் சுவையில் 7 வகை பாயாசம் ரெசிபிஸ்.. | Tamil New Year 2023 RecipesRepresentative Image

மாம்பழ பாயாசம்

மாம்பழம் யாருக்கு தான் பிடிக்காது. அது தனியா குடுத்தாலே அமிர்தமாக சாப்பிடுவோம். இப்போ பாயாசத்தில் சேர்த்து குடுத்தால் எப்படி இருக்கும் யோசிச்சி பாருங்க. வாங்க இந்த மாம்பல சீசனில் சுவையான மாம்பழ பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • துருவிய மாம்பழ விழுது - 1/2 கப்
  • பால் - 2 கப்
  • சுக்கு - 1/2 ஸ்பூன்
  • வெல்லம் - 250 கிராம்
  • பாஸ்மதி அரிசி - 2 டீஸ்பூன்
  • ஏலக்காய் பவுடர் - 1/2 ஸ்பூன்
  • நெய் - தேவையான அளவு
  • முந்திரி - தேவையான அளவு
  • உலர் திராட்சை - 10

செய்முறை:

  • முதலில் வாணலில் பாஸ்மதி அரிசியை லேசாக வறுத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
  • பின்னர் மிக்ஸி ஜாரில் அரை லிட்டர் பால், துருவிய மாம்பழ விழுது, வெல்லம், சுக்கு, ஏலக்காய், ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  • ஒரு அடிகனமான பாத்திரத்தில் மீதமுள்ள பாலை ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு, அதில் வறுத்து உடைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து வேக வைக்கவும்.
  • அரிசி குழைய வெந்ததும், அரைத்து வைத்துள்ள மாம்பழக் கலவையை அதில் சேர்க்கவும். அதை குறைந்தது ஒரு 10 நிமிடம் வரை கொதிக்கவிடவும்.
  • மாம்பழக்கலவை சேர்த்தபின் நல்ல வாசனை வரும், அந்த சமயத்தில் நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை சேர்த்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் குங்குமப்பூவை பாலில் கலந்து சேர்த்துக் கொள்ளலாம்.
  • இந்த ஸ்வீட்டான மாம்பழ பாயாசத்தை சூடாகவோ அல்லது ஆற வைத்து ஃபிரிட்ஜில் குளிர வைத்து ஜில்லுனும் சாப்பிடலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்