Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கார்த்திகை தீபத்தன்று சிவபெருமானுக்கு படைக்க வேண்டிய நைவேத்யங்கள்...

Nandhinipriya Ganeshan Updated:
கார்த்திகை தீபத்தன்று சிவபெருமானுக்கு படைக்க வேண்டிய நைவேத்யங்கள்...Representative Image.

தீபாவளி, பொங்கல் பண்டிகை போன்று தமிழ் மக்களால் காலம் காலமாக கொண்டாடப்படும் ஒரு பழமையான பண்டிகை தான் இந்த திருக்கார்த்திகை தீபத்திருநாள். இந்த நாளில் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் எங்கும் அகல் விளக்குகளை ஏற்றி சிவனை வழிபடுவது வழக்கம். வீடுகள் மட்டுமல்லாமல், கோவில்களும் இந்நாளில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும். மேலும், இந்த தீபத்திருநாளில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது திருவண்ணாமலை தீபம் தான்.

பஞ்சப்பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான இந்த திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மகா தீபம் ஏற்றப்படும். அங்கு தீபம் ஏற்றிய பிறகு தான் வீடுகளில் பெண்கள் விளக்கு ஏற்றுவார்கள். மேலும், இந்த நாளில் மாலை 6 மணிக்கு மேல் விநாயகர், முருகன், சிவ பெருமான் படங்களை வைத்து வெற்றிலை பாக்கு, பழம், பொரி உருண்டை, நெல் பொரி, பனை ஓலை பிடி கொழுக்கட்டை ஆகியவற்றை நைவேத்யம் செய்ய வேண்டும். மாவிளக்கு பிடித்து அதில் விளக்குப் போடுவதும் பலன்களை அள்ளிக் கொடுக்கும். மேலும், இந்த ஆண்டு கார்த்திகை தீபம் டிசம்பர் 6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்படவுள்ளது. 

கார்த்திகை தீபத்திருநாளில் இப்படி விளக்கேற்றினால் முழுபலனையும் பெறலாம்; தேதி, நல்ல நேரம், விளக்கேற்றும் முறை, திசை, எண்ணிக்கை...

கார்த்திகை தீபத்தன்று சிவபெருமானுக்கு படைக்க வேண்டிய நைவேத்யங்கள்...Representative Image

பொரி உருண்டை: பொரி - 3 கப், வெல்லம் - 1/2 கப், ஏலக்காய் பவுடர் - 1 ஸ்பூன், தண்ணீர் - 1/2 கப். வாணலியில் தண்ணீர் ஊற்றி சூடானது, வெல்லத்தை போட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து வெல்லப்பாகு தயார் செய்துக்கொள்ளவும். அடுப்பை அணைத்துவிட்டு பாகுவை வடிகட்டி அதில் பொரி, ஏலக்காய் பொடியை இரண்டையும் சேர்த்து கிளறி, வெதுவெதுப்பான நிலையில் இருக்கும்போதே கைகளை தண்ணீரில் நனைத்துக்கொண்டு, உருண்டை பிடித்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான பொரி உருண்டை ரெடி.

கார்த்திகை தீபத்தன்று விரதமிருந்து விளக்கேற்றுங்கள்.. வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்...

கார்த்திகை தீபத்தன்று சிவபெருமானுக்கு படைக்க வேண்டிய நைவேத்யங்கள்...Representative Image

நெய் அப்பம்: வெல்லம் - 1 கப், பச்சரிசி - 1 கப், கோதுமை மாவு - 2 டேபிஸ் ஸ்பூன், தேங்காய் துருவல் - 1/2 கப், ஏலக்காய் - 2, நெய் - தேவைக்கு ஏற்ப, வாழைப்பழம் - 2, எள்ளு - 1 டேபிள் ஸ்பூன் (வறுத்தது), தேங்காய் துண்டுகள் - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது), உப்பு - 1/4 டேபிள் ஸ்பூன். முதலில் பச்சரிசியை 3 மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு பாத்திரத்தில் 1/2டம்ளர் தண்ணீர், வெல்லத்தை சேர்த்து கரையும் வரை கொதிக்க வைத்துக்கொள்ளவும். 

ஊறிய அரிசி முதலில் தண்ணீர் இல்லாமல் அரைத்துக் கொண்டு, பின்பு அதில் துருவிய தேங்காய், வாழைப்பழம், ஏலக்காய், கோதுமை மாவும், கொஞ்சமாக உப்பு, வெல்லப்பாகு சேர்த்து ஒரு சுற்று சுற்றி பணியார மாவு பதத்திற்கு அரைத்து 2 மணிநேரம் ஊறவிட்டு, எள்ளு மற்றும் நெய்யில் வறுத்த தேங்காய் துண்டுகளை சேர்த்து, குழிப் பணியார கல் சூடானதும் நெய் விட்டு மாவை ஊற்றி சிவக்க வெந்ததும் எடுத்தால் நெய் அப்பம் ரெடி.

 

கார்த்திகை தீபத்தன்று சிவபெருமானுக்கு படைக்க வேண்டிய நைவேத்யங்கள்...Representative Image

மாவிளக்கு: பச்சரிசி - 1/4 கிலோ, வெல்லம் - 100 கிராம், ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன், சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன், நெய் - தேவைக்கேற்ப. பச்சரிசியை 1 மணி நேரம் ஊற வைத்து, நிழலில் உலர வைத்து, மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். மாவை சலித்து வெல்லம் பாகு காய்ச்சி ஊற்றி, ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி, நெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். இதை உருண்டையாக தட்டி நடுவில் விளக்கு போல வடிவமைத்தால், மாவிளக்கு ரெடி..

 

 

 

கார்த்திகை தீபத்தன்று சிவபெருமானுக்கு படைக்க வேண்டிய நைவேத்யங்கள்...Representative Image

கார்த்திகை கொழுக்கட்டை: அரிசி மாவு/ரெடிமேட் இடியாப்பம் மாவு - 1/2 கப், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு. ஒரு பாத்திரத்தில் மாவை கொட்டி, உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர், மற்றொரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அந்த அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளுங்கள். சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக்கொண்டு சின்ன சின்ன உருண்டைகளாக விரிசல் இல்லாமல் பிடித்து, அவற்றை விளக்குபோல வடிவமைத்துக் கொள்ளுங்கள். அல்லது வெறுமனே கொழுக்கட்டை பிடித்துக்கொள்ளலாம். இட்லி தட்டில் வாழை இலையை வைத்து அதில் கொழுக்கட்டையை வைத்து பாத்திரத்தை மூடி வேக வைத்து எடுத்தால், கார்த்திகை கொளுக்கட்டை ரெடி. இதில் மஞ்சள், குங்குமம தடவி விளக்கேற்றுங்கள். 

கார்த்திகை தீபத்தன்று சிவபெருமானுக்கு படைக்க வேண்டிய நைவேத்யங்கள்...Representative Image

நெல் பொரி / கார்த்திகை பொரி: வெல்லம் - 1/2 கப், தேங்காய் துண்டுகள் - 2 டீஸ்பூன், ஏலக்காய் - 2, சுக்கு - 1, பொட்டு கடலை - 1 டீஸ்பூன், நெல் பொரி/அவல் பொரி - 2 கப், நெய் - 1 டீஸ்பூன். ஒரு கடாயில் நெய் சேர்த்து நறுக்கிய தேங்காயை சேர்த்து வறுக்கவும். பின்னர் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் ஏலக்காய் மற்றும் சுக்கு சேர்த்து வடிகட்டி, பின்னர் வெல்ல பாகினை மீண்டும் நன்கு கொதிக்க வைத்து எடுக்கவும். வறுத்த தேங்காயுடன் நெல் பொரி மற்றும் பொட்டு கடலை சேர்த்து அதனுடன் வெல்ல பாகினை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். கார்த்திகை தீபம் ஸ்பெஷல் பொரி தயார்.

கார்த்திகை தீபத்தன்று சிவபெருமானுக்கு படைக்க வேண்டிய நைவேத்யங்கள்...Representative Image

பனை ஓலை கொழுக்கட்டை: அரிசி மாவு - 2 கப், சாதாரண வெல்லம்  - 1 கப் அல்லது கருப்பட்டி, தேங்காய் துருவியது  - 1/2 கப், ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்,  சுக்கு  பொடி - 1/2 டீஸ்பூன், டெண்டர் பனை இலைகள் - 10. 1/2 கப் தண்ணீரில் வெல்லத்தை சேர்த்து கொதித்து கரைந்ததும், அதனை வடிகட்டி கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில், அரிசி மாவு, தேங்காய் துருவல், சுக்கு தூள் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து வெல்லப்பாகுவை ஊற்றி மாவு பிசைந்து கொள்ளவும். பனை இலைகளை சுத்தம் செய்து அகலவாக்கில் மாவை வைத்து இலைகள் மூடி, நூல் கொண்டு கட்டி, பிறகு  ஒரு இட்லி தட்டில் அடுக்கி 15-20  நிமிடங்கள் நீராவில் வைத்து சமைத்து எடுத்தால், சுவையான பனை ஓலை கொழுக்கட்டை சாப்பிட தயார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்