Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குளியலறையில் உள்ள டைல்ஸ் சுத்தம் செய்வது எப்படி | how to clean bathroom tiles

Vaishnavi Subramani Updated:
குளியலறையில் உள்ள டைல்ஸ் சுத்தம் செய்வது எப்படி |  how to clean bathroom tiles Representative Image.

குளியலறை உள்ள டைல்ஸ் சுத்தம் செய்வது என்பது மாதத்திற்கு, ஒரு முறை சுத்தம் செய்வது என்பது வழக்கம். ஆனால் சுத்தம் செய்து இரண்டு வாரத்தில் அழுக்கு சேர்வதற்கு ஆரம்பிக்கும். அதை எளிதில் எப்படிச் சரிசெய்வது என்பது பலரும் யோசிக்க கூடிய ஒரு விஷியம். குளியலறை எளிதில் சுத்தம் செய்வதற்குப் பல வகையான பொருள்கள் உள்ளது. அதில் சில பொருள்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

குளியலறையில் உள்ள டைல்ஸ் சுத்தம் செய்வது எப்படி |  how to clean bathroom tiles Representative Image

வினிகர் கொண்டு குளியலறை சுத்தம் செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்

    ✤ வெள்ளை வினிகர்

    ✤ தண்ணீர்

    ✤ ஸ்பிரே பாட்டில்

    ✤ ஸ்கிரப்பிங் ஸ்பாஞ்

குளியலறையில் உள்ள டைல்ஸ் சுத்தம் செய்வது எப்படி |  how to clean bathroom tiles Representative Image

சுத்தம் செய்யும் முறை

✤ பயன்படுத்தாமல் இருக்கும் குளியலறை சுத்தம் செய்வதற்கு,முதலில்  அரை கப் அளவிற்கு வினிகர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

✤ அதை அதிகளவில் உள்ள அழுக்குகள் மற்றும் கறைகள் உள்ள இடங்களில் கலந்த வினிகர் கலவையை முழுவதுமாக ஊற்றி 20 முதல் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

✤ அதில் உள்ள பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியா, காளான் போன்ற அனைத்து கறைகளையும் எளிதில் சுத்தம் செய்வதற்கு, வினிகர் ஒரு நல்ல அமிலத்தன்மை உள்ளதால் அது உதவும்.

✤ 30 நிமிடங்களுக்குப் பிறகு, அதில் ஸ்கிரப்பிங் ஸ்பாஞ் பயன்படுத்து நன்றாகத் தேய்த்துக் கழுவினால் அனைத்து அழுக்குகளும் சுத்தம் ஆகும்.

குளியலறையில் உள்ள டைல்ஸ் சுத்தம் செய்வது எப்படி |  how to clean bathroom tiles Representative Image

சமையல் சோடா கொண்டு குளியலறை சுத்தம் செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்

    ✤ சமையல் சோடா

    ✤ ஸ்கிரப்பிங் ஸ்பாஞ்

    ✤ தண்ணீர்

குளியலறையில் உள்ள டைல்ஸ் சுத்தம் செய்வது எப்படி |  how to clean bathroom tiles Representative Image

சுத்தம் செய்யும் முறை

✤ மூன்று நாட்களுக்கு ஒரு முறை குளியலறை சுத்தசெய்பவர்களுக்கு இந்த முறையைப் பயன்படுத்தலாம்.

✤ முதலில் அரை கப் அளவிற்கு, பேக்கிங் சோடா அல்லது சமையல் சோடா எடுத்து கொண்டு அத்துடன் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.

✤ இந்த கலவையினால் கடினமான அழுக்குகள் மற்றும் கறைகள் போன்றவை உருவாகாமல் தடுப்பதற்கும், எளிதில் சுத்தம் செய்வதற்கு உதவும்.

✤ கலந்த கலவையை அழுக்குகள் அதிகமாக இருக்கும் இடங்களில் நன்றாக ஊற்றி ஊறவைத்துக் கொள்ளவும்.

✤ அதன் பின் தண்ணீர் ஊற்றி ஸ்கிரப்பிங் ஸ்பாஞ் எடுத்து நன்றாகக் கழுவவும்.

குளியலறையில் உள்ள டைல்ஸ் சுத்தம் செய்வது எப்படி |  how to clean bathroom tiles Representative Image

உப்பு கொண்டு குளியலறை சுத்தம் செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்

    ✤ கல் உப்பு

    ✤ ஸ்கிரப்பிங் ஸ்பாஞ்

    ✤ ஈரமான துணி

குளியலறையில் உள்ள டைல்ஸ் சுத்தம் செய்வது எப்படி |  how to clean bathroom tiles Representative Image

சுத்தம் செய்யும் முறை

✤ உப்பு பயன்படுத்துவதால் முதலில் குளியலறையில் அழுக்கு உள்ள இடங்களில் தண்ணீர் தெளித்து ஈரப்பதமாக மாற்றவும்.

✤ அதில் கல் உப்பு முழுவதுமாக போட்டு, 10 நிமிடங்கள் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். அதை ஸ்கிரப்பிங் ஸ்பாஞ்சை பயன்படுத்து முழுவதுமாக ஸ்கிரப்பிங்க் செய்ய வேண்டும்.

✤ ஸ்கிரப்பிங்க் முழுவதுமாக செய்த பிறகு, உடனடியாக கழுவாமல் 8 முதல் 10 மணி நேரங்கள் அப்படியே ஊற விடவும்.

அதற்குப் பிறகு, கழுவினால் மிகவும் சுத்தமாகவும் மற்றும் பளபளப்பாக இருக்கும். இதை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்வது நல்லது.

குளியலறையில் உள்ள டைல்ஸ் சுத்தம் செய்வது எப்படி |  how to clean bathroom tiles Representative Image

போராக்ஸ் (Borax) கொண்டு குளியலறை சுத்தம் செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்

    ✤ போராக்ஸ் தூள்

    ✤ ஸ்கிர்ப்பிங் ஸ்பாஞ்

குளியலறையில் உள்ள டைல்ஸ் சுத்தம் செய்வது எப்படி |  how to clean bathroom tiles Representative Image

சுத்தம் செய்யும் முறை

✤ போராக்ஸ் தூள் என்பது கிருமிகளை நீக்கவும் , கெட்டவாசனைகளை நீக்கவும், குளியலறை முழுவதுமாக சுத்தம் செய்வதற்கும் இது மிகவும் உதவும்.

✤ முதலில் போராக்ஸ் தூள் குளியலறை முழுவதுமாக அழுக்குகள் படிந்துள்ள இடங்களில் பரவலாகத் தூவி விட்டு 10 முதல் 20 நிமிடங்கள் ஊற விடவும்.

✤ அதன் பின், ஸ்கிரப்பிங் ஸ்பாஞ்சில் சிறிதளவு போராக்ஸ் தூள் சேர்த்து மற்றும் சிறிதளவு நீர் சேர்த்துக் கொண்டு அதை அழுக்கு இருக்கும் இடங்களில் நன்றாகத் தேய்த்துக் கொள்ளவும்.

✤ அதற்கு, பின், வெந்நீர் அல்லது குளிர்ந்த நீர் ஊற்றி நன்றாக தேய்த்துக் கழுவினால் சுத்தமாக இருக்கும்.

குளியலறையில் உள்ள டைல்ஸ் சுத்தம் செய்வது எப்படி |  how to clean bathroom tiles Representative Image

எலுமிச்சை சாறு கொண்டு குளியலறை சுத்தம் செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்

     ✤  எலுமிச்சை பழம்

     ✤  பேக்கிங் சோடா

     ✤  ஸ்கிரப்பிங் ஸ்பாஞ்

குளியலறையில் உள்ள டைல்ஸ் சுத்தம் செய்வது எப்படி |  how to clean bathroom tiles Representative Image

✤  ஒரு எலுமிச்சை பழம் எடுத்து இரண்டாக வெட்டி அதை அழுக்குகள் அதிகம் இருக்கும் இடத்தில் நன்றாகப் பிழிந்து சில நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும்.

✤  அதில் உள்ள அழுக்குகளை முழுவதுமாக சுத்தம் செய்வதற்கு, ஸ்கிரப்பிங் செய்யும் ஸ்பாஞ் எடுத்து அதில் பேக்கிங் சோடா மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும்.

✤ அதை அழுக்குகள் இருக்கும் பகுதிகளில் தேய்த்துக் கொள்ளவும். இந்த முறை வாரத்தில் ஒரு முறை செய்தால் குளியலறை சுத்தமாகப் பளபளக்கும்.

✤ எலுமிச்சை சாறு என்பது பாக்கிடீரியாஸ் மற்றும் அழுக்குகள், கறைகளை நீக்கி உதவும் ஒரு இயற்கை கிருமி நாசினி. அதனால் அதைப் பயன்படுத்துவதால் அதிகளவில் பாக்கிடீரியாஸ் இருந்தால் எளிதில் சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்திருக்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்