Sat ,Apr 01, 2023

சென்செக்ஸ் 57,794.75
181.03sensex(0.31%)
நிஃப்டி17,012.25
60.55sensex(0.36%)
USD
81.57
Exclusive

உலக மகளிர் தினம் 2023: கருக்கலைப்பு மாத்திரைகள் பயன்படுத்துவதனால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் கருவுறுதலில் ஏற்படும் பாதிப்புகள்

Vaishnavi Subramani Updated:
உலக மகளிர் தினம் 2023: கருக்கலைப்பு மாத்திரைகள் பயன்படுத்துவதனால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் கருவுறுதலில் ஏற்படும் பாதிப்புகள்  Representative Image.

அனைத்து பெண்மணிகளுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். ஒவ்வொரு பெண் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு தான் இந்த கருவுறுதல். ஆனால் சில காரணங்களுக்காகவும், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கருத்தரிப்பு போன்ற பல பிரச்சனைகளாலுக்காக, கருகலைப்பு செய்ய வேண்டியதாக உள்ளது. கருக்கலைப்பிற்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பிரச்சனைகள் அதனால் மீண்டும் கருவுறுதலில் பிரச்சனைகள் ஏற்படுமா என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

உலக மகளிர் தினம் 2023: கருக்கலைப்பு மாத்திரைகள் பயன்படுத்துவதனால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் கருவுறுதலில் ஏற்படும் பாதிப்புகள்  Representative Image

கருக்கலைப்பு எதற்காகச் செய்ய வேண்டும்

✤ மருத்துவ ரீதியாகக் கருக்கலைப்பு என்பது கருவினால் தாய் உயிரிக்கு ஏற்படும் ஆபத்துகள் மற்றும் சிறுவயது கருத்தறிப்பினால் கருவைத் தாங்கும் சக்தி இல்லை எனில் இந்த முடிவு எடுப்பது நன்மை.

✤ கருவுற்றபிறகு சிலமாதங்களில் கருச் சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது எனத் தெரிந்தால் மட்டும் கருக்கலைப்பு சரியான ஒன்று.  இது போன்ற காரணங்கள் இல்லாமல் வேறுஎந்த காரணத்திற்காகவும் கருக்கலைப்பு செய்வது என்பது தவறான ஒன்று.

 

உலக மகளிர் தினம் 2023: கருக்கலைப்பு மாத்திரைகள் பயன்படுத்துவதனால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் கருவுறுதலில் ஏற்படும் பாதிப்புகள்  Representative Image

கருக்கலைப்பு செய்யும் வழிமுறைகள்

✤ கர்பத்தின் முதல் மூன்று மாதத்தில் இந்த கருக்கலைப்பு செய்வது     பாதுகாப்பாகவும், பயனுள்ளதாக இருக்கும். மருத்துவ கருக்கலைப்பு செய்வதற்கு எந்த விதமான அறுவை சிகிச்சை அல்லது மயக்க மருந்து தேவையில்லை.

✤ மருத்துவ கருக்கலைப்பு செய்வதாலும் கூட உணர்ச்சி மற்றும் உளவியல்  விளைவுகளும் ஏற்படும். தவிர்க்க முடியாத நேரங்களில் இந்த கருக்கலைப்பு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.

✤ கருக்கலைப்பினால் பிரச்சனைகள் மற்றும் சிக்கல்  ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால் கருக்கலைப்பு செய்வதற்கான பாதுகாப்பான வழிமுறைகள் தெரிந்து கொண்டு அதன் மூலம் கருக்கலைப்பு செய்வது நல்லது.

உலக மகளிர் தினம் 2023: கருக்கலைப்பு மாத்திரைகள் பயன்படுத்துவதனால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் கருவுறுதலில் ஏற்படும் பாதிப்புகள்  Representative Image

கருக்கலைப்பிற்காகப் பயன்படுத்தும் மாத்திரைகளினால் ஏற்படும் பக்கவிளைவுகள் மற்றும் மறு கருவுறுதலில் ஏற்படும் பிரச்சனைகள்

✤ கர்ப்பத்தின் முதல் ஏழு வாரங்களில் மருத்துவரீதியான கருக்கலைப்பு செய்வது என்பது பாதுகாப்பான ஒன்று.

✤ கருக்கலைப்பு செய்வது எனத் தீர்மான எடுத்தால் அது கர்ப்பத்தின் ஆரம்ப நிலை என்றால் மருத்துவர் தரும் ஆலோசனைகள் எடுத்துக் கொள்ளவும்.

✤ அவர்கள் இரண்டு மாத்திரைகள் தருவார்கள் அதை இரண்டையும் சாப்பிட்டால் அதனால் கருக்கலைப்பு நடக்கும்.

✤ இதனைச் சாப்பிடுவதால் உடலில் உபாதைகள் அதாவது ரத்தப்போக்கு மற்றும் வாந்தி போன்றவை அதிகளவில் இருக்கும்.  இதனால் அதிகளவில் ரத்தப்போக்கு மற்றும் வேறு சில விளைவுகளும் ஏற்படும். அதிகளவில் பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்

உலக மகளிர் தினம் 2023: கருக்கலைப்பு மாத்திரைகள் பயன்படுத்துவதனால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் கருவுறுதலில் ஏற்படும் பாதிப்புகள்  Representative Image

கருக்கலைப்பினால் மீண்டும் கருவுறுதலில் பிரச்சனைகள் ஏற்படுமா ?

✤ கருக்கலைப்பினால் பல விதமான பாதிப்புகள் உடலில் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிலும், கருக்கலைப்பு மாத்திரைகளால் இனப் பெருக்கத்தில் தாக்கம் ஏற்படுத்தும். இதனால் பெண்களின் உடல் நிலை மிகவும் வலிமை குறைவாக இருக்கும்.

✤ கருக்கலைப்பு மாத்திரைகள் சாப்பிடுவதால் பெண்களின் முதல் கர்ப்பத்தைக் காட்டிலும் இரண்டாம் கர்ப்பம் வலிமை குறைவாகவும் மற்றும் கர்ப்பம் அடையாமல் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

✤ கருக்கலைப்பினால் மிகவும் ஆபத்துகள் அதிகமாக உள்ளதால் உடலில் ஏற்படும் பல விதமான பிரச்சனைகளுக்கு இது காரணமாக அமைவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

✤ இரண்டாவது கர்ப்பதற்குத் திட்டம் செய்வதற்கு முன்பு மருத்துவருடன் ஆலோசனை பெற்று அதிலும் முதலில் ஏற்பட்ட கருக்கலைப்பற்றி முழுவதுமாக தெரிவிக்கவும். அதிலிருந்து எவ்வளவு நாட்களுக்குப் பிறகு, கருத்தரிப்பதற்கான திட்டத்தைப் பற்றி ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளவும்.

✤ கர்ப காலங்களில் மிகவும் பாதுகாப்பாகவும், கவனமாகவும் மருத்துவர்        ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று தான்.

✤ கர்ப்ப காலங்களில் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா எனப் பரிசோதனைகள் செய்து பார்த்து கொள்ளவது நன்மை தரும்.

✤ கருக்கலைப்பு செய்த பிறகு கர்ப்பம் அடைதல் என்பது மிகவும் கடினமான ஒன்று ஆக இருக்கும்.

✤ கர்ப்பப்பை வலுப்பெறுவதற்குச் சத்து நிறைந்த மற்றும் கர்ப்பகால உணவுகளைச் சாப்பிடுவது நல்லது மற்றும் மாதத்திற்கு ஒரு முறை உடல் நிலையைப் பரிசோதனை செய்து  கொள்ளவது என்பது அவசியமான ஒன்று.

உலக மகளிர் தினம் 2023: கருக்கலைப்பு மாத்திரைகள் பயன்படுத்துவதனால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் கருவுறுதலில் ஏற்படும் பாதிப்புகள்  Representative Image

கருக்கலைப்பைத் தவிர்ப்பது எப்படி ?

✤ கருக்கலைப்பைத் தவிர்ப்பது என்பது கர்ப்பம் ஆகாமல் இருப்பதான் மூலம் இதைத் தவிர்க்கலாம்.

✤ கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்குப் பல வழிகள் உள்ளது. பாதுகாப்பான உடலுறவின் மூலம் இதைத் தவிர்க்க முடியும்.

✤  பலவிதமான கருத்தடை சாதனங்கள் பயன்படுத்தியும் மற்றும் ஆணுறைகள் பயன்படுத்துவதன் மூலம் கருத்தரிப்பதைத் தவிர்க்க முடியும்.

✤ தனிப்பட்ட தேவையிற்காக ஆணுறைகள் மற்றும் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக மருத்துவர்கள் ஆலோசனை பெற்றுப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

✤ பல்வேறு கருத்தடை சாதனங்கள் பயன்படுத்தும் முன்சுயமாக எப்படிப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

✤ பாதுகாப்பற்ற உடலுறவின் விளைவுகளாக பாலியல் ரீதியான தொற்றுநோய்கள் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால் பாதுகாப்பான உடலுறவில் நோய்த்தொற்றுகள் மற்றும் கருத்தறிதல் போன்றவையால் இருந்து தவிர்க்கலாம்

உலக மகளிர் தினம் 2023: கருக்கலைப்பு மாத்திரைகள் பயன்படுத்துவதனால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் கருவுறுதலில் ஏற்படும் பாதிப்புகள்  Representative Image

கருகலைப்பை தவிர்பதற்கான வழிகள்

✤ முதலில் கருகலைப்பை தவிர்ப்பதற்கு, பாதுகாப்பான முறையில் உடலுறவு மற்றும் பல்வேறு கருத்தடை சாதனங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது இவை மூலம் கருக்கலைப்பு மற்றும் கருத்தரிப்பைத் தவிர்க்கலாம்.

✤ ஒரு குழந்தைகள் பெற விரும்பினால் மட்டும் கருத்தரிப்பது சரியாக இருக்கும். இல்லை என்றால் பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதாலும் மற்றும் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதாலும் கருத்தரிப்பு மற்றும் கருக்கலைப்பைத் தவிர்க்கலாம்.

✤ இது போன்று சிந்தித்துச் செயல்படுவதால் கருகலைப்பை தவிர்ப்பதுடன் கருக்கலைப்பு மாத்திரைகளையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்