Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மழைக்கால ஸ்நாக்ஸ்: அடிக்கிற மழைக்கு சூடா மொறு மொறுனு கடலை மாவு போண்டா.. வித்தியாசமான முறையில்.. இப்டி செஞ்சி பாருங்க.. 

Nandhinipriya Ganeshan November 11, 2022 & 15:00 [IST]
மழைக்கால ஸ்நாக்ஸ்: அடிக்கிற மழைக்கு சூடா மொறு மொறுனு கடலை மாவு போண்டா.. வித்தியாசமான முறையில்.. இப்டி செஞ்சி பாருங்க.. Representative Image.

அடிக்கிற மழைக்கும் சூடாக மொறு மொறுனு போண்டா சாப்பிட்டால் எப்படி இருக்கும். உங்களுக்காகவே ரொம்பவே ஈசியாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே டக்குனு தயார் செய்யக்கூடிய கடலை மாவு போண்டாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

மொறு மொறு வடை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்

அரிசி மாவு - 1/2 கப்

பச்சைமிளகாய் - 2

வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)

உப்பு, பெருங்காயம், ஓமம் - தேவையான அளவு

கருவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

பொதினா - சிறிதளவு

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்

தயிர் - 1 ஸ்பூன் 

பீன்ஸ், கேரட் - 1 கப் (பொடியாக நறுக்கியது)

எண்ணெய் பொரிப்பதற்கு - தேவையான அளவு

மழைக்கால ஸ்பெஷல் ரெசிபி: அவல் இருக்கா? சுவையான மொறு மொறு ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க...

செய்முறை:

மேலே சொன்ன அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு சேர்த்து மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள்.

பின்னர், ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றி காய்ந்தவுடன் பிசைந்து வைத்திருக்கும் மாவை சின்ன சின்ன உருண்டையாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ளுங்கள். 

பொரிக்கும்போது அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் போண்டாவின் உள்பகுதியும் நன்றாக வேகும். அவ்வளவு தாங்க! சுவையான சூடான கடலை மாவு போண்டா ரெடி.. 

Also News: பஜ்ஜி மாவு இல்லாமல் ஐந்தே நிமிடத்தில் மொறு மொறு பஜ்ஜி செய்வது எப்படி?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்