Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

இரண்டு துளி சீரம்.. பளிச்சென்ற முகம்… வீட்டிலேயே எளிதான முறையில் சீரம் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி.? | How to Make Face Serum at Home

Gowthami Subramani Updated:
இரண்டு துளி சீரம்.. பளிச்சென்ற முகம்… வீட்டிலேயே எளிதான முறையில் சீரம் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி.? | How to Make Face Serum at HomeRepresentative Image.

முகப் பொலிவிற்கும், பளபளப்பை உருவாக்கவும் நாம் எத்தனையோ க்ரீம்களை முகத்திற்குத் தடவி வருகிறோம். ஆனால், அதில் பல்வேறு வேதிப்பொருள்கள், ரசாயனங்கள் இருப்பதால் தற்கால முடிவாக இருந்தாலும், பிற்காலத்தில் அவை பாதிப்பை ஏற்படுத்துபவையாக அமைகின்றன. இவ்வாறு வேதிப்பொருள்கள், ரசாயனங்கள் கலந்த க்ரீம்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, வீட்டிலேயே எளிமையான முறையில் சீரம் தயாரித்து பயன்படுத்தலாம். இது இயற்கையான முறையாக மட்டுமல்லாமல், முகப் பொலிவிற்கும், பளபளப்பை உருவாக்கவும் பெரிதும் உதவுகிறது.

இரண்டு துளி சீரம்.. பளிச்சென்ற முகம்… வீட்டிலேயே எளிதான முறையில் சீரம் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி.? | How to Make Face Serum at HomeRepresentative Image

முகத்துக்கு ஏன் சீரம் பயன்படுத்த வேண்டும்?

சரும பராமரிப்பில் சீரம் முக்கிய பங்காற்றுகிறது. சருமத்தில் உள்ள பிரச்சனைகளை நீக்குவதற்கு ஒரு தீர்வாக அமைகிறது. அனைத்து வகையான சருமத்திற்கும் சீரம் உதவும். இந்த முகப்பொலிவிற்குப் பயன்படுத்தக் கூடிய சீரமை வீட்டிலேயே தயாரிக்கலாம். இந்தப் பதிவில், வீட்டிலேயே எப்படி முக சீரம் தயாரிப்பது என்பது பற்றி பார்க்கலாம்.

இரண்டு துளி சீரம்.. பளிச்சென்ற முகம்… வீட்டிலேயே எளிதான முறையில் சீரம் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி.? | How to Make Face Serum at HomeRepresentative Image

வீட்டிலேயே முக சீரம் தயாரிக்க தேவையானவை

✤ கற்றாழை ஜெல் – 2 தேக்கரண்டி

✤ ரோஸ் வாட்டர் – 2 டீஸ்பூன்

✤ வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள் – 2

இரண்டு துளி சீரம்.. பளிச்சென்ற முகம்… வீட்டிலேயே எளிதான முறையில் சீரம் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி.? | How to Make Face Serum at HomeRepresentative Image

வீட்டிலேயே முக சீரம் தயாரிப்பது எப்படி?

இயற்கையான முறையில் நம் வீட்டிலேயே சீரத்தை எப்படி தயாரிக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

✤ முதலில் ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டரை எடுத்துக் கொள்ளவும்.

✤ இதில், கற்றாழை ஜெல் தனியாக கடையில் வாங்கியும் பயன்படுத்தலாம். அல்லது வீட்டிலேயே கற்றாழைச் செடி இருந்தால், அதன் ஜெல்லைக் கூட எடுத்துக் கொள்ளலாம்.

✤ இத்துடன், வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களைச் சேர்த்து மூன்று பொருள்களையும் நன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.

✤ இப்போது உங்களுக்கான சீரம் தயாராகி விடும். இதனை பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளலாம்.

இரண்டு துளி சீரம்.. பளிச்சென்ற முகம்… வீட்டிலேயே எளிதான முறையில் சீரம் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி.? | How to Make Face Serum at HomeRepresentative Image

எப்படி பயன்படுத்துவது?

✤ பொதுவாக, ஒரு நாளைக்கு கற்றாழை சீரத்தை முகத்திற்கு இரு முறை பயன்படுத்தலாம்.

✤ முகத்தை நன்றாகக் கழுவி அதன் பின்னரே, சீரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

✤ சீரத்தை முகம் முழுவதுமாக தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.

✤ பிறகு சிறிது நேரம் கழித்து சாதாரண நீரில் கழுவி விடலாம்.

✤ இப்போது உங்கள் முகம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருப்பதை உணரலாம்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்