Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,603.00
-249.94sensex(-0.34%)
நிஃப்டி22,325.80
-76.60sensex(-0.34%)
USD
81.57
Exclusive

குதிகால் வெடிப்பிற்கு சிம்பிளான வீட்டுவைத்தியம்.. இத மட்டும் செய்தால் போதும்.. 

Nandhinipriya Ganeshan October 25, 2022 & 15:42 [IST]
குதிகால் வெடிப்பிற்கு சிம்பிளான வீட்டுவைத்தியம்.. இத மட்டும் செய்தால் போதும்.. Representative Image.

டிப்ஸ் - 1

பெட்ரோலியம் ஜெல்லி உடலில் ஏற்படும் வறட்சியை போக்குவதோடு ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு கிரீம். பாதங்களில் வெடிப்பு அதிகமாக இருப்பவர்கள், தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு கால்களை சோப்பு நன்றாக கழுவிவிட்டு ஒரு துணியை கொண்டு உலர்த்திவிடுங்கள். 

கேரளத்து பெண்களின் நீளமான கூந்தலின் ரகசியம் இதுதானா?

பின்னர், இந்த ஜெல்லியை வெடிப்பு உள்ள இடங்களில் தடவி, வெறும் காலோடு இருக்கலாம் அல்லது உங்களிடம் காலுறை இருந்தாலும் போட்டுக்கொள்ளலாம். இதை மறுநாள் கழுவி குளிர்ந்த தண்ணீரில் கழுவிடுங்கள். இதை தொடர்ந்து செய்துவருவதன் மூலம் ஸ்மூத்தான பாதங்களை பெறலாம். 

அழகான மற்றும் மென்மையான பாதங்களை பெற சில பயனுள்ள குறிப்புகள்..

டிப்ஸ் - 2

தேன், சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பாக்டீரியாக்களை அழிப்பதற்கு தேவையான தன்மைகள் நிறைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல், சிறந்த மாய்சுரைசராகவும் செயல்படுகிறது. எனவே, குதிகால் வெடிப்பால் அவதிப்படுபவர்கள் ஒரு பக்கெட்டில் மிதமாக சூடுபடுத்தப்பட்ட வெந்நீரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 1 கப் தேனை கலந்து பாதங்களை அந்த தண்ணீரில் 20 நிமிடம் ஊறவிடுங்கள். 

உங்க சரும ரொம்ப வறண்ட சருமமா? இத மட்டும் பண்ணுங்க.. அப்பறம் பாருங்க மாயாஜலத்த..

பின்னர், காலை வெளியே எடுத்து நன்றாக தேய்த்து கழுவிவிட்டு, உலர்த்தவும். அதன்பின், மாய்சுரைசரை போட்டுக்கொள்ளுங்கள். இவ்வாறு வாரத்தில் 3 - 5 முறை செய்துவந்தால் பாதங்களை மென்மையாகவும் மினுமினுப்பாகவும் வைத்துக்கொள்ளலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்