Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முகத்தை வெள்ளையாக மாற்ற தயிர் எப்படி பயன்படுத்துவது | How to use curd for face whitening

Vaishnavi Subramani Updated:
முகத்தை வெள்ளையாக மாற்ற தயிர் எப்படி பயன்படுத்துவது | How to use curd for face whiteningRepresentative Image.

தயிரில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. குடலில் உள்ள புண்கள் மற்றும் உடலில் உள்ள சூடுதனிவதற்கு, வாய்ப்புண் போன்ற பல பிரச்சனைகளை சரிசெய்வதற்கு இந்த தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் பிரச்சனைகள் சரிசெய்ய உதவும். தயிர் பல வீட்டு அழகுக் குறிப்புகள் முக்கியத்துவம் பெற்ற ஒரு பொருள் ஆகும். இந்த பதிவில் தயிரை எந்தெந்த பொருள்கள் உடன் சேர்த்து முகத்திற்குப் பயன்படுத்துவது மற்றும் அதனின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

முகத்தை வெள்ளையாக மாற்ற தயிர் எப்படி பயன்படுத்துவது | How to use curd for face whiteningRepresentative Image

தயிரில் உள்ள சத்துகள்

✤ சுமார் 100 தயிரில் உள்ள ஊட்டச்சத்துகள் பொட்டாசியம் – 104 கிராம் அளவு, சோடியம் – 364 கிராம் அளவு,  புரதம் – 11 கிராம் மற்றும்  கார்போஹைட்ரேட் – 3.4 கிராம் அளவு, 98  கலோரி ஆகியவை நிறைந்துள்ளது.

✤ இதில் வைட்டமின்கள் பி12, ஏ, டி மற்றும் கால்சியம், மெக்னீசியம் போன்றவை உள்ளதால் முகத்தில் உள்ள எண்ணெய்ப் பசைகள், பருக்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்தையும்,முகம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

முகத்தை வெள்ளையாக மாற்ற தயிர் எப்படி பயன்படுத்துவது | How to use curd for face whiteningRepresentative Image

தயிரின் நன்மைகள்

✤ தயிரிலிருக்கும் லாக்டிக் அமிலத்தால் தோல் பராமரிப்பு மற்றும் முகத்தில் உள்ள பருக்கள் சரிசெய்வதற்கும் பயன்படும்.

✤  இதில் உள்ள லாக்டிக் அமிலம் ஆனது பல தோல் சமந்தமான பிரச்சனைகளைச் சரி செய்வதற்கும் மற்றும் தோல் வீக்கம் குறைத்தல், மென்மையான புதிய தோலின்    வளர்ச்சிகளை மேம்படுத்தவும் உதவும்.

✤  சருமத்தில் ஏற்படும் பெரிய துளைகள் மற்றும் வடுக்கள்,கோடுகள் போன்றவை தயிர் பயன்படுத்துவதன் மூலம் தடுக்கலாம்.

✤  சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சுகளால் முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கலாம்.

✤  தயிர் பயன்படுத்தினால் முகத்தில் ஏற்படும்  ஹைப்பர் பிக்மெண்டேஷன் எளிதில்குறைக்கலாம்.

முகத்தை வெள்ளையாக மாற்ற தயிர் எப்படி பயன்படுத்துவது | How to use curd for face whiteningRepresentative Image

முகத்தில் தயிரை எப்படிப் பயன்படுத்துவது

எந்த வகையான வீட்டு ஃபோஷியலில் தயிர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும் பல வகையான இயற்கைப் பொருள்களுடன் சேர்த்துப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

தயிர் மற்றும் ஒட்ஸ்

✤  முதலில் ஒட்ஸ் தேவையான அளவிற்கு , எடுத்து அதைப் பொடியாக அரைத்து, தயிரில் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் தேய்த்து கொள்ளவும். இதை வாரத்திற்கு ஒரு முறை   பயன்படுத்தலாம். இந்த கலவையை எண்ணெய் சருமத்தில் மற்றும் சாதராண சருமத்திலும் பயன்படுத்தலாம்.

முகத்தை வெள்ளையாக மாற்ற தயிர் எப்படி பயன்படுத்துவது | How to use curd for face whiteningRepresentative Image

தயிர் மற்றும் பாசிப்பருப்பு மாவு

✤  கடலை மாவு அல்லது பாசிப்பருப்பு மாவு  ஒரு டீஸ்பூன் அளவிற்கு எடுத்து அதைத் தயிருடன் சேர்த்து நன்றாகக் கட்டி சேராமல் கலக்கிப் பயன்படுத்தலாம்.இதை வாரம் ஒரு முறை  பயன்படுத்தலாம். எண்ணெய் சருமத்திற்கு மிகவும் உதவியாகவும் மற்றும் மற்ற சருமத்திற்கு இந்த கலவையைப் பயன்படுத்தலாம்.

முகத்தை வெள்ளையாக மாற்ற தயிர் எப்படி பயன்படுத்துவது | How to use curd for face whiteningRepresentative Image

தயிர் மற்றும் தேன்

✤  தயிருடன் தேன் சேர்த்து நன்றாக கலந்து பயன்படுத்தலாம். வாரத்திற்கு ஒரு முறை வறண்ட சருமம் மற்றும் சாதாரண சருமத்திற்கும் பயன்படுத்தலாம்.

முகத்தை வெள்ளையாக மாற்ற தயிர் எப்படி பயன்படுத்துவது | How to use curd for face whiteningRepresentative Image

தயிர் மற்றும் உருளைக்கிழங்கு

✤  உருளைக்கிழங்கைக் கழுவி நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.அதில் உள்ள தோல் நீக்கி நன்றாக மசித்துக் கொண்டு அதில் தயிர் சேர்த்து நன்றாகக் கலந்து வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். இது எல்லா சருமத்திற்கும் பயன்படுத்தலாம்.

முகத்தை வெள்ளையாக மாற்ற தயிர் எப்படி பயன்படுத்துவது | How to use curd for face whiteningRepresentative Image

தயிர் மற்றும் மஞ்சள்

✤ கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் எடுத்து தயிருடன் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் பயன்படுத்தலாம். இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். மஞ்சள் பயன்படுத்துவதால் ஆண்கள் இந்த கலவையைப் பயன்படுத்த வேண்டாம்.

முகத்தை வெள்ளையாக மாற்ற தயிர் எப்படி பயன்படுத்துவது | How to use curd for face whiteningRepresentative Image

தயிர் மற்றும் தக்காளி

✤ ஒரு தக்காளி எடுத்து அதைக் கூழ் போன்று பிசைந்து அந்த சாற்றை எடுத்து தயிரில் சேர்த்து நன்றாகக் கலக்கிப் பயன்படுத்தவும். இதை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.

முகத்தை வெள்ளையாக மாற்ற தயிர் எப்படி பயன்படுத்துவது | How to use curd for face whiteningRepresentative Image

தயிர் மற்றும் வெள்ளரி

✤  வெள்ளரிக்காய் எடுத்து நன்றாகச் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கூழ் போன்று நன்றாக அரைத்து தயிருடன் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் பயன்படுத்தலாம். இது வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம். இது அனைத்து சருமத்திற்குப் பயன்படுத்தலாம்.

முகத்தை வெள்ளையாக மாற்ற தயிர் எப்படி பயன்படுத்துவது | How to use curd for face whiteningRepresentative Image

தயிருடன் சேர்த்துப் பயன்படுத்தும் பொருள்கள்

தயிருடன் ஆரஞ்சு தோல் பொடி மற்றும் கற்றாழை அரிசி மாவு, பன்னீர் போன்றவை சேர்த்தும் பயன்படுத்துவது நல்லது.

தயிர் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை

 ✤  தயிர் பயன்படுத்தும் போது அல்லது தயிருடன் சேர்த்து மற்ற பொருள்கள் சேர்த்துப் பயன்படுத்தும் போது முதலில் அதை கைகளில் தேய்த்து 24 மணிநேரம் கழித்துத் தோல் எரிச்சல்,தோல் அரிப்பு மற்றும் வீக்கம் போன்றவை இருந்தால் இந்த கலவையைப் பயன்படுத்த வேண்டாம். எந்த பாதிப்புகள் இல்லை என்றால் பயன்படுத்தலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்