Mon ,Sep 26, 2022

Exclusive

நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வைட்டமின் பி12 குறைபாடு.. எந்த உணவு அதிகம் சாப்பிடணும்...

Nandhinipriya Ganeshan September 17, 2022 & 13:20 [IST]
Representative Image. Representative Image.

நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது இந்த வைட்டமின்கள். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட நன்மைகளை நம் உடலுக்கு கொடுக்கின்றன. அதேசமயம் இன்றைய முறையற்ற உணவு முறைகளால் அனைத்து வைட்டமின் சத்துக்களும் நமக்கு கிடைக்கிறாதா? என்று கேட்டால் சற்று யோகத்தான் வேண்டும். காரணம் நம்மில் பலரும் சரியான உணவுகளை சாப்பிடுவது கிடையாது. அந்தவகையில், உடலின் முக்கிய இயக்கங்களான டிஎன்ஏ தொகுப்பிற்கும், நம் நரம்பு மண்டலத்தை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்கும் உதவும் ஒரு ஊட்டச்சத்தான வைட்டமின் பி12 பற்றி தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.


தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு எப்போதிலிருந்து திட உணவு கொடுக்கணும்?


வைட்டமின்கள்

வைட்டமின்களில் நீரில் கரையக்கூடியவை, கொழுப்பில் கரையக்கூடியவை என இரண்டு வகைகள் இருக்கின்றன. இதில் ஏ, கே, டி, இ போன்ற வைட்டமின்கள் கொழுப்பில் கரையக்கூடியவை. சி மற்றும் பி வைட்டமின் இரண்டும், நீரில் கரையக்கூடியவை. மேலும், இந்த வைட்டமின் பி -ல் பி1, பி6, பி7, பி12 என்று நான்கு வகைகள் இருக்கின்றன. இவற்றில் 'சயனோகோபாலமின்' (Cyanocobalamin) என்று அழைக்கப்படும் வைட்டமின் 12 மிக முக்கியமான ஒன்று.

ஆரோக்கியமான சருமத்திற்கு 10 இயற்கை அழகு குறிப்புகள்...

இவை பெரும்பாலும் அசைவ உணவுகளில் தான் அதிகமாக இருக்கிறது. சுவைக்காக இல்லையென்றாலும், உடல் நலத்திற்காகவாவது அசைவு உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டியது. இது உடலின் இரத்த உற்பத்திக்கும், மூளை மற்றும் நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளுக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. வைட்டமின்களை பொறுத்தவரையில் நமது உடலில் குறைந்திருந்தாலும் பிரச்சனை, அதிகமாக இருந்தாலும் பிரச்சனை. அந்தவகையில், நம் உடலுக்கு அத்தியவசிமான வைட்டமின் பி12 குறைவாக இருந்தால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் அவற்றின் அறிகுறிகள் பார்க்கலாம்.

மழைக்காலத்தில் வீட்டை பராமரிப்பது எப்படி?

அறிகுறிகள்

வாய்ப்புண்

உடல் சோர்வு

மஞ்சள் நிற சருமம்

இரைப்பை குடல் பிரச்சினைகள்

அடிக்கடி தலைவலி

தோல் சம்பந்தமான பிரச்சனைகள்

நாக்கு வெந்து சிவப்பாதல்

மனச்சோர்வு

எரிச்சல், மன அழுத்தம்

காதுகளில் ஒரு விதமான சத்தம் வருதல்

கை, கால் மூட்டுகளில் வலி

அடிக்கடி ஓய்வெடுக்க தூண்டும் மனநிலை

முடிவளர்ச்சியை தடுக்கும் 6 வகையான உணவுகள்..

வைட்டமின் பி12 அதிகமுள்ள உணவுகள்

மேற்க்கண்ட அறிகுறிகளை நீங்கள் எதிர்கொண்டால் அலட்சியம் காட்டாமல், உடனே மருத்துவரை அணுகி இரத்த பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் குறைபாட்டை அறிந்துக்கொள்ள முடியும். மேலும், வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் சில உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வதன் மூலம் அந்த ஊட்டச்சத்தினை அதிகரிக்கலாம்.

உங்க சரும ஆரோக்கியத்தை கெடுக்கும் இந்த 7 இயற்கை பொருட்கள்...

மாட்டிறைச்சி, கோழி, ஆடு, மீன் (சூறை, காளான் கெளுத்தி, சாலமன், மத்தி மீன்), நண்டு, பால், தயிர், பாலாடைக்கட்டி, முட்டையின் மஞ்சள் கரு, பன்றி இறைச்சி, சோயாபீன்ஸ், காளான், பாதாம் பால் போன்ற உணவுகளில் வைட்டமின் பி12 சத்து அதிகளவு நிறைந்துள்ளது. எனவே, வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் இந்த உணவுகளை சாப்பிட்டால் நல்ல பலனை பெற முடியும். மேலும், இவை உடலுக்கு வேண்டிய ஆற்றலை கொடுப்பதோடு இரும்பு சத்தையும் அதிகரிக்கிறது.

Tag: Vitamin B12 Rich Foods In Tamil | Vitamin B12 Deficiency Symptoms In Tamil | Vitamin B12 Benefits In Tamil | What Causes B12 Deficiency | How Long To Recover From Vitamin B12 Deficiency | Vitamin B12 Foods In Tamil | Vitamin B12 Supplement | Vitmain B12 Uses In Tamil | How To Get Vitamin B12 Naturally In Tamil | How To Prevent B12 Deficiency In Tamil | B12 Deficiency Symptoms In Tamil.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Related Posts