Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நடிகை சமந்தாவை பாதித்திருக்கும் Myositis நோயின் காரணங்களும் அறிகுறிகளும்..

Nandhinipriya Ganeshan October 31, 2022 & 15:15 [IST]
நடிகை சமந்தாவை பாதித்திருக்கும் Myositis நோயின் காரணங்களும் அறிகுறிகளும்..Representative Image.

திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவரான சமந்தா சமீபத்தில் தான் மயோசைட்டிஸ் (Myositis) நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். சுமார் 3 மாதங்கள் ட்ரீட்மெண்ட் எடுத்தும் இன்னமும் பூரண குணமாகாத சமந்தாவிற்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். சரி, இந்த மயோசைட்டிஸ் நோய் என்றால் என்ன அதன் மூலம் உடலில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது பற்றி தெரிந்துக் கொள்வோம். 

ஜாப்பனீஸ் என்செஃபலிடிஸ் நோயின் அறிகுறிகளும் தடுப்பு நடவடிக்கைகளும்...

நடிகை சமந்தாவை பாதித்திருக்கும் Myositis நோயின் காரணங்களும் அறிகுறிகளும்..Representative Image

மயோசைட்டிஸ் என்றால் என்ன?

மயோசைட்டிஸ் என்பது பல்வேறு காரணங்களால் தசைகளில் ஏற்படும் இன்ஃப்ளமேஷன், அதாவது வீக்கம். இது ஒருவகை அரிதான நோய் என்கின்றனர். பொதுவாக, இந்த நோய் குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினரையும் பாதிக்கக் கூடியது. 

அல்சைமர் ஆபத்தானதா? இந்த நோயை எவ்வாறு சரிசெய்யலாம்?

நடிகை சமந்தாவை பாதித்திருக்கும் Myositis நோயின் காரணங்களும் அறிகுறிகளும்..Representative Image

மயோசைட்டிஸ் நோயின் அறிகுறிகள்:

மயோசைட்டிஸ் அதன் வகையை பொறுத்து அறிகுறிகள் மாறுபடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அந்தவகையில், dermatomyositis, inclusion-body myositis, juvenile myositis, polymyositis, toxic myositis ஆகியவை இதன் வகைகள் ஆகும். இருப்பினும் ஒருவருக்கு மயோசைட்டிஸ் ஏற்பட்டதற்கான பொதுவான அறிகுறிகளாவன,

தசை கடுமையான வலி 

உடல் எடை குறைவது

தசைகளில் பலவீனம்

உடல் சோர்வு

காய்ச்சல்

மூச்சு விடுவதில் சிரமம்

உடலின் பல்வேறு பகுதிகளில் வலி

இருப்பினும், சாப்பிடும் போது விழுங்கவே முடியாத பிரச்சனைகள் தான் இந்த நோய்க்கான முதல் அறிகுறி என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

தற்கொலை எண்ணங்களை தவிர்ப்பது எப்படி? 

நடிகை சமந்தாவை பாதித்திருக்கும் Myositis நோயின் காரணங்களும் அறிகுறிகளும்..Representative Image

காரணங்கள்:

இந்த நோய் பலவகையான காரணங்களால் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, சிலருக்கு சில வகையான இன்ஃபெக்‌ஷனால் வரலாம். ஃப்ளூ பாதிப்பு, ஹெச்.ஐ.வி தொற்று போன்றவற்றாலும் வரலாம். ஆட்டோ இம்யூன் சார்ந்த பிரச்சனைகள் காரணமாகவும் வரலாம். அல்லது இந்த நோய்களுக்கு அளிக்கப்படும் மருந்துகளால் உடலில் ஏற்படும் நச்சுத்தன்மையால் கூட மயோசைட்டிஸ் ஏற்படலாம். 

வயதாகிவிடுமோ என்று பயப்படுறீங்களா? இதுவும் ஒரு நோயே!

நடிகை சமந்தாவை பாதித்திருக்கும் Myositis நோயின் காரணங்களும் அறிகுறிகளும்..Representative Image

நோயை கண்டறிவது எப்படி?

இது அரிதான நோய் என்பதால் இதன் அறிகுறிகளை எளிதில் கண்டுபிடிக்க இயலாது. இருப்பினும், ஒருவருக்கு இந்த நோய் இருப்பதை உறுதி செய்ய, ஆட்டோஇம்யூன் பேனல் பிளட் டெஸ்ட் செய்ய வேண்டியிருக்கும். சிலருக்கு தசை அல்லது சருமத்தை பயாப்சி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும். 

மிகவும் இளம்வயதிலேயே மாரடைப்பு வருவதற்கான காரணம் என்ன..?

சிலருக்கு எலக்ட்டோமையோகிராபி (Electromyography அல்லது EMG) மற்றும் எம்ஆர்ஐ சோதனைகள் தேவைப்படும். அதுமட்டுமல்லாமல், ஆட்டோ இம்யூன் பேனல் ரத்த பரிசோதனை, CPK அளவுகளை உறுதி செய்யும் ரத்த பரிசோதனை, மேக்னெட்டிக் ரெசோனன்ஸ் இமேஜிங், மற்றும் ஆன்டிநியூக்ளியர் ஆன்டிபாடி ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல சோதனைகள் மூலமும் உங்களின் நோய் பாதிப்பை கண்டுபிடித்துவிடலாம். 

தக்காளி காய்ச்சலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

நடிகை சமந்தாவை பாதித்திருக்கும் Myositis நோயின் காரணங்களும் அறிகுறிகளும்..Representative Image

சிகிச்சை என்ன?

எந்த வகையான மயோசைட்டிஸ் என்பதை பொறுத்தும், பாதிப்பின் தீவிரத்தையும் பொறுத்தும் மருந்துகள் பரிந்துரைக்கப்படும். இதைதவிர, அதற்கேற்ற வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, மற்றும் டயட் பிளான் போன்றவற்றை மருந்துவர்கள் பரிந்துரைப்பார். அதன்படி, பால் பொருள்கள், அசைவ உணவுகள், ரீஃபைண்டு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை குறைத்துவிட்டு, பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பன்றி காய்ச்சல் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்...

நடிகை சமந்தாவை பாதித்திருக்கும் Myositis நோயின் காரணங்களும் அறிகுறிகளும்..Representative Image

மருத்துவ ஆலோசனை

மயோசைட்டிஸ் அரியவகை நோயாக இருந்தாலும் இதை குணப்படுத்த முடியும். சரியான மருத்துவ சிகிச்சையை செய்து வந்தால், சில மாதங்களில் பூரண குணம் பெறலாம் என்கின்றனர். ஆனால், முறையான சிகிச்சை எடுக்கவில்லை என்றால் காலத்துக்கும் சக்கர நாற்காலியில் கிடக்க வேண்டிய அபாயமும் உண்டாகும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரை அணுகி சோதனைகள் செய்து கொள்ளவும். 

'மெட்ராஸ் ஐ' குணமாக என்ன பண்ணனும்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்