Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முகப்பொலிவிற்கு மஞ்சள்.. இப்படி அப்ளை பண்ணுங்க.!| How to Use Manjal For Face

Gowthami Subramani Updated:
முகப்பொலிவிற்கு மஞ்சள்.. இப்படி அப்ளை பண்ணுங்க.!| How to Use Manjal For FaceRepresentative Image.

பொதுவாக, மஞ்சள் கிருமி நாசினி என்று எல்லோரும் நான் அறிந்ததே. ஆனால், இதில் உள்ள மருத்துவப் பயன்கள் ஏராளம் ஆகும். இது உடலுக்கு உட்புறம் மட்டுமல்ல. உடலுக்கு வெளியேயும் உள்ள கிருமிகளை கொன்று, உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. அந்த வகையில், முகப் பொலிவிற்கு மஞ்சள் பெரும் பங்காற்றுகிறது. மஞ்சளுடன், இந்த இரண்டு பொருள்களைச் சேர்த்து முகத்திற்கு பூசி வரும் போது, முகமானது தங்கம் போல ஜொலிக்கும். இதில், மஞ்சளை எவ்வாறு முகத்திற்குப் பயன்படுத்துவது? என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

முகப்பொலிவிற்கு மஞ்சள்.. இப்படி அப்ளை பண்ணுங்க.!| How to Use Manjal For FaceRepresentative Image

முகப் பொலிவிற்கு

நம் முகத்தில், உள்ள மெல்லிய சருமத்திற்குள், தூசிகள், கிருமிகள் போன்றவை படிந்து முகப் பொலிவைக் கெடுக்கிறது. இதற்கான தீர்வுகளில் ஒன்றாக இயற்கையாக விளையக் கூடிய மஞ்சள் உள்ளது. ஆரம்ப காலத்தில், சருமத்திற்கு பொலிவூட்ட, சுத்தமான மஞ்சள் தூளை பெண்கள் பூசி வருகின்றனர். ஆனால், இன்றைய கால கட்டத்தில் நிறைய கிரீம்கள் இருந்தாலும், அதில் கலந்துள்ள வேதிப்பொருள்கள் முகப் பொலிவைக் கெடுப்பதுடன், முகச் சருமம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்குகிறது. இதனால், இயற்கையான முறையில் முகப் பொலிவை அளிக்கும் மஞ்சள் குறித்து இதில் காண்போம்.

முகப்பொலிவிற்கு மஞ்சள்.. இப்படி அப்ளை பண்ணுங்க.!| How to Use Manjal For FaceRepresentative Image

முகத்தில் மஞ்சள் பயன்படுத்தும் முறை

✤ முதலில் ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்து அதில் சுத்தமான மஞ்சள் தூளை ½ டீஸ்பூன் அளவிற்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

✤ இதில் சுத்தமான மஞ்சள் தூள் என்பது இயற்கையாக நமக்குக் கிடைக்கும் மஞ்சள் கிழங்கை வெயிலில் நன்றாக காய வைத்து அதனை பொடியாக அரைத்து வைத்துக் கொள்வதாகும்.

✤ இவ்வாறு எடுத்துக் கொள்ளும் மஞ்சள் உடன், அரை மூடி அளவிலான எலுமிச்சையை விதைகள் இல்லாதவாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

முகப்பொலிவிற்கு மஞ்சள்.. இப்படி அப்ளை பண்ணுங்க.!| How to Use Manjal For FaceRepresentative Image

✤ அதன் பின்னர், இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேனை சேர்த்துக் கொள்ள வேண்டும். எத்தனை வருடம் ஆனாலும், கெட்டுப்போகாத தன்மை கொண்டது தேன் ஆகும். இது சருமத்திற்குள் ஊடுருவிச் சென்று, நாள்தோறும் நமது ஸ்கின்னை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

✤ இவை அனைத்தையும் பேஸ்ட் போல கலந்து, அதனை முகம் முழுவதும் ஒரே மாதிரியாகத் தடவி 10 நிமிடம் மட்டும் ஊறவிட வேண்டும். 10 நிமிடங்களுக்குப் பின்னர், குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளலாம்.

இவ்வாறு தொடர்ந்து வாரம் இரு முறை செய்து வருவதன் மூலம், நம் முகமானது பளபளப்புடன் ஜொலிக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்