Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நகங்களை சுத்தமாகவும் மற்றும் அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி |How to keep nails clean and beautiful

Vaishnavi Subramani Updated:
நகங்களை சுத்தமாகவும் மற்றும் அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி |How to keep nails clean and beautifulRepresentative Image.

நம் உடலை  எப்பொழுதும் ஆரோக்கியமாகவும் மற்றும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வது என்பது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் தினத்தோறும் சாப்பிடும் கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியம். நகங்களை அதிக அளவில் வளர்த்துவதால் அதில் அதிக அளவு அழுக்குகள் மற்றும் கிருமிகள் சேர்த்து உணவுடன்  வயிற்றுக்குள் சென்று பல வயிற்றுப் பிரச்சனைகளை ஏற்படுகிறது. அதனால் நகங்களை எப்படி வீட்டிலேயே சுத்தம் செய்து அழகாகவும் மற்றும் ஆரோக்கியாகமாகவும் வைத்துக் கொள்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.    

நகங்களை சுத்தமாகவும் மற்றும் அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி |How to keep nails clean and beautifulRepresentative Image

தேவையான பொருள்கள்

✤நகம் வெட்டி (Nail cutter)

✤நகம் ஃபைலர் (Nail filer)

✤நகம் பாலிஷ் (Nail polish)

நகங்களை சுத்தமாகவும் மற்றும் அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி |How to keep nails clean and beautifulRepresentative Image

✤ஒரு ஆழமற்ற மற்றும் அகலமான பாத்திரம்

✤நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூ அல்லது பாடி வாஷ்

✤எலுமிச்சை சாறு

✤தேன்

✤சர்க்கரை

✤ஆலிவ் எண்ணெய்

நகங்களை சுத்தமாகவும் மற்றும் அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி |How to keep nails clean and beautifulRepresentative Image

1.நகங்களைச் சுத்தப்படுத்துவதற்கு முன் எப்படி நகங்களைத் தயார் செய்வது

✤நகங்களைச் சுத்தம் செய்வதற்கு முன், கைகளை நன்றாகச் சோப்பு தேய்த்துக்  கழுவவும்.

✤நெயில் பாலிஷ் ரீமூவரைப் பயன்படுத்தி நகங்களில் இருக்கும் பழைய நெயில் பாலிஷை நன்றாகச் சுத்தம் செய்து, மென்மையான காட்டன் கொண்டு நன்றாகச் சுத்தம் செய்யவும்.

✤அதன் பின் நகத்தின் நீளத்தைத் தேவைக்கேற்ப குறைக்க நகங்களின் விளிம்பில் உங்களுக்குப் பிடித்த அளவிற்கு நகங்களை மூலைகளில்  வட்டம், சதுரம், ஓவல் என விருப்பத்திற்கேற்ப வெட்டிக்கிக் கொள்ளவும்.

✤அடுத்தது நகங்களை வெட்டியை பிறகு, நகங்களில்  சில இடங்கள் சொறு சொறுப்பாக இருக்கும். அதனை மென்மையாக மாற்ற  நெயில் ஃபைலரை  பயன்படுத்தி  நகங்களை மென்மையாக மாற்றிக் கொள்ளலாம்.

✤நெயில் ஃபைலரை பயன்படுத்து போது, அதனை எதிரெதிர் திசையில் முன்னும் பின்னும் தேய்த்தால் நகங்களில் பாதிப்பு ஏற்படக் கூடும். அதனால் அதனைக் கையாளும் போது ஒரு திசையில் பயன்படுத்துவது நல்லது.

நகங்களை சுத்தமாகவும் மற்றும் அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி |How to keep nails clean and beautifulRepresentative Image

2. நகங்களை ஊறவைத்து சுத்தம் செய்வது

✤ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து, அந்த பாத்திரத்தை முழுவதுமாக நிரப்பவும்.

✤அதில் இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

✤இந்த பாத்திரத்தில் நகங்களை நன்றாக முழுகும் வரை உள்ளே கைகளை வைத்துக் கொள்ளவும்.

✤கைகளை ஐந்து நிமிடங்கள் முதல் பதினைந்து நிமிடங்கள் வரை ஊறை வைத்துக் கொள்ளவும். இதில் எலுமிச்சை சாறு பயன்படுத்துவதால் அது நகங்களை நன்றாகப் பதப்படுத்தவும் மற்றும் அழுக்குகள் எளிதில் நீக்கவும் உதவுகிறது. அத்துடன் இதில் தேன் சேர்ப்பதால்  நல்ல மாய்ஸ்சரைஸராக செயல்படுகிறது.

✤கைகள் மென்மையான பிறகு தண்ணீரிலிருந்து எடுத்து,நன்றாகத் துடைத்துக் கொண்ட பின்,சிறிதளவு ஆலிவ் எண்ணெய்யை நகங்களில் தடவவும்.

நகங்களை சுத்தமாகவும் மற்றும் அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி |How to keep nails clean and beautifulRepresentative Image

3.நகங்களை ஸ்கிரப் செய்வது

✤ஸ்கிரப் செய்ய முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொண்டு நன்றாகக் கலந்து கொண்டால் ஸ்கிரப் ரெடியாகி விடும்.

✤கலவையைக் கொண்டு கைகளில் மற்றும் விரல்களில் மென்மையாக ஸ்கிரப் செய்யவும். இதனால் கைகளில் இறந்த செல்களை நீக்கவும் மற்றும் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் கைகள்,விரல்களுக்கும் ஈரப்பதம் கொடுக்கும்.

✤நகங்களில் இந்த ஸ்கிரபை இரண்டு நிமிடங்களுக்கு வட்டவடிவில் நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்யவும். இது ரத்த ஒட்டத்தை அதிகப்படுத்தும்.

✤ஸ்கிரப் முடிந்த பின், வெதுவெதுப்பான தண்ணீரில் கைகளை நன்றாகக் கழுவவும். அதன் பின், மென்மையான துணியில் பயன்படுத்தி உலர்த்தவும்.

நகங்களை சுத்தமாகவும் மற்றும் அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி |How to keep nails clean and beautifulRepresentative Image

4.நகங்களை அழகுபடுத்துவது (நெயில் பாலிஷ்)

✤மேலே கூறப்பட்ட படி அனைத்து முடிந்த பின் நகங்களை அழகுபடுத்த நெயில் பாலிஷைப் பிடித்த வண்ணங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் நெயில் ஆர்ட் பயன்படுத்தலாம்.

நகங்களை சுத்தமாகவும் மற்றும் அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி |How to keep nails clean and beautifulRepresentative Image

நகங்கள், கைகள், விரல்கள் ஆகியவை சுத்தப்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகள்

✤கைகளை சுத்தப்படுத்துவதால் கைகளில் உள்ள இறந்த செல்களை நீக்குவதுடன், சுருக்கங்களை நீங்கும்.

✤நகங்களில் உள்ள அழுக்குகள் நீங்குவதால் அதில் பாக்கிடீரியாஸ் மற்றும் அதில் தொற்று இருந்தாலும் குணமாகும். நகக்கண்கள் உள்ளே மசாஜ் செய்வதால் ரத்த ஒட்டம் அதிகரிக்கும்.

✤வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பயன்படுத்தினால் கைகள் மற்றும் விரல்கள், நகங்கள் அழகாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்