Sat ,Apr 13, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

அடேங்கப்பா! வாயை பிளக்க வைக்கும் சமந்தா கட்டியிருக்கும் சேலையின் விலை...!!

Nandhinipriya Ganeshan July 05, 2022 & 17:30 [IST]
அடேங்கப்பா! வாயை பிளக்க வைக்கும் சமந்தா கட்டியிருக்கும் சேலையின் விலை...!!Representative Image.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நம்ம சமந்தா. விவாகரத்துக்கு அப்பறம் சமந்தா முதல் முறையாக ஆடிய "ஓ.. சொல்றீயா...." குத்து பாடல் உலகம் முழுவதும் செம ஹிட்டடித்தது. உண்மையை சொல்லப் போனால் இந்த பாட்டுக்கு பிறகு தான் சமந்தாவின் மார்க்கெட்டே அதிகரித்தது. பல பிரச்சனைகளையும் கடந்து மீண்டும் துணிச்சலுடன் தனது வேலையில் கவனம் செலுத்தி வருவது சமந்தாவை பலருக்கும் ரோல் மாடலாக மாற்றியுள்ளது.

இதையும் படிக்கலாமே: நயன்தாரா திருமணத்தில் அணிந்திருந்த புடவையில் இத்தனை அம்சங்களா?

சினிமாவை பொறுத்தவரை படங்கள், வெப் சீரிஸ் என பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக வலம் வருகிறார். இவர் அவ்வப்போது போட்டோ ஷூட்களை நடத்தி தனது போட்டோக்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வரும் சமந்தா, ஸ்டைலிஷ் ஹேர் ஸ்டைல்கள் மற்றும் பேஷன் உடைகளுக்கான ட்ரெண்ட் செட்டராக மாறியுள்ளார். 

தான் தினமும் அணியும் கேஷ்வல் ஆடைகள் முதல் ஷூட்டிங் மற்றும் அல்ட்ரா மார்டன் உடைகள் வரை விதவிதமான புகைப்படங்களை போஸ்ட் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், இவரை அவருடைய பேஷனுக்காகவே ஏராளமான இளம் பெண்கள் பின்பற்றி வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் இவர் ஒரு பிளாக் அண்ட் வைட் கலர் புடவை, மஞ்சள் கலர் ஸ்லிவ்லெஸ் பிளவுஸ் அணிந்து வெளியிட்டுள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரல்.

இதையும் படிக்கலாமே: நயன்தாரா திருமணத்தில் தாலி மட்டும் தான் தங்கம்.. வாய்பிளக்க வைக்கும் நகைகளின் மதிப்பு...

டிசைனர் ப்ரீதம் ஜுகல்கர், இந்த புடவையை சமந்தாவிற்காகவே பார்த்து பார்த்து உருவாக்கியுள்ளார். இந்த புடவையில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று தானே கேட்கிறீர்கள்... இந்த புடவையை பார்க்கும் போது டிசைனர் புடவை போல் தெரிந்தாலும், இதன் மேற்பரப்பு பட்டு துணியால் நெசவு செய்யப்பட்டதாம். 

எனவே, போஸ்ட் போட்ட சில மணி நேரத்திலேயே இந்த புடவை என்ன கிளாத், எங்கு கிடைக்கும், என்ன விலை என இணையத்தை அலச ஆரம்பித்துவிட்டனர் நம்ம பொண்ணுங்க. அப்படி ஆவலோடு தேட ஆரம்பித்த அவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக இருந்தது அந்த புடவையின் விலை. ஆமாங்க.. இந்த புடவையோட விலையை கேட்டீங்கனா நீங்களே வாயை பிளப்பீங்க.. சமந்தா உடுத்தியிருக்கும் இந்த கையால் நெய்யப்பட்ட புடவையின் விலை ரூ. 32,800/-. இதில் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் இது முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாம். 

இதையும் படிக்கலாமே: நடிகை நயன்தாராவுக்கு வந்த திருமண பரிசுகள் ஒவ்வொன்றும் எவ்வளவு விலை தெரியுமா..? கிஃப்ட்னா இப்படி இருக்கனும்...!! 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளையும் உடனுக்குடன் பெறுங்கள். 

Tags:

Samantha Fashion | Samantha Ruth Prabhu | Samantha Ruth Prabhu Fashion | Samantha Saree Collection


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்