Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வீட்டில் வளர்க்கும் மீன்களை பராமரிப்பது எப்படி | How to care for fish at home

Vaishnavi Subramani Updated:
வீட்டில் வளர்க்கும் மீன்களை பராமரிப்பது எப்படி | How to care for fish at homeRepresentative Image.

வீட்டில் மீன் வளர்ப்பது என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்த ஒன்று. முதல் முறையாக மீன் வாங்கி வளர்பவராக இருந்தால் விலை குறைவாக இருக்கும் மீன்களை வாங்கி வளர்ப்பது நல்லது. மீன்களில் பல வகை உள்ளது. ஆனால் வீட்டில் சிறிய மீன்கள் மட்டும் வளர்க்க முடியும். சிறிய மீன்களில் பல வண்ணங்களில் மீன்கள் உள்ளது. மீன்வளர்ப்பதில் பல வகையான வேலைப்பாடுகள் உள்ளது. மீன்கள் அனைவருக்கும் பிடிக்கும் அதனால் இந்த பதிவில் வீட்டில் வளர்க்கும் மீன்களை எப்படிப் பராமரிப்பது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டில் வளர்க்கும் மீன்களை பராமரிப்பது எப்படி | How to care for fish at homeRepresentative Image

வீட்டில் வளர்க்கும் மீன்களின் பராமரிக்கும் வழிமுறைகள்

✤ வீட்டில் முதல் முறையாக மீன் வளர்பவராக இருந்தால் மீன்களின் அதிகமான விலை அல்லது அதிகமாக மீன்களை வாங்கக் கூடாது.

✤ மீன் விலை குறைவாகவும் மற்றும் குறைந்த அளவில் மீன்கள் மட்டும் வாங்கி அதை வளர்க்கவும். சிறிய மீன்களை வளர்த்து அதில் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவும்.

✤ அதில் எந்த விதமான பிரச்சனைகள் இல்லை என்றால் மட்டும் அதிக விலையில் விற்கும் மீன்களை வாங்கி வளர்ப்பது நல்லது.

✤ மீன்கள் வளர்ப்பதற்கு, முதலில் தொட்டியைத் தேர்வுசெய்து கொள்ளவும். அதில் பயன்படுத்தும் நீரைக் கவனமாகத் தேர்வு செய்யவும். இல்லை எனில் எளிதில் மீன்கள் இறந்துவிடும்.

வீட்டில் வளர்க்கும் மீன்களை பராமரிப்பது எப்படி | How to care for fish at homeRepresentative Image

மீன் வளர்ப்பிற்குத் தேவையான தொட்டி

✤ முதல் முறை மீன் வளர்பவராக இருந்தாலும் அல்லது மீன்கள் வளர்த்த அனுபவம் இருப்பவராக இருந்தாலும் இது பயன்படும்.

✤ முதலில் சிறிய அளவில் மீன்கள் வாங்கினால் அதை வளர்ப்பதற்குத் தொட்டி என்பது அவசியம் . சின்ன மீன்கள் என்றாலும் கூட சிறிய தொட்டி வாங்காமல் கொஞ்சம் பெரிய தொட்டியாக இருப்பது அவசியம்.

✤ மீன்கள் விளையாடுவதற்கும், அது நீந்துவதற்கும் வசதியாக இருக்கும் அளவிற்கு ஒரு கண்ணாடி தொட்டி வாங்க வேண்டும்.

✤ கண்ணாடி தொட்டி பாதுகாப்பாக வைப்பதற்கு ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ளவும். அது சூரிய ஒளியில் படாமல் இருக்க வேண்டும்.

வீட்டில் வளர்க்கும் மீன்களை பராமரிப்பது எப்படி | How to care for fish at homeRepresentative Image

மீன் வளர்ப்பிற்குத் தேவையான தண்ணீர்

✤ மீன் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்கு முதலில் நீங்க எந்த வகையான மீன்கள் வாங்க உள்ளீர்கள் எனத் தேர்வு செய்வது மிகவும் அவசியம்.

✤ கடல் மீன் என்றால் கடலில் உள்ள நீரின் உப்புத் தன்மையின் PH அளவிற்கு ஏற்ற நீரின் உப்புத் தன்மை மற்றும் PH அளவு சரியாக  உள்ள நீரை நிரப்ப வேண்டும்.

✤ மீன் வகைகளுக்கு ஏற்ப அதன் PH அளவை பற்றி தெரிந்து கொண்டு தண்ணீரை நிரப்ப வேண்டும்.

வீட்டில் வளர்க்கும் மீன்களை பராமரிப்பது எப்படி | How to care for fish at homeRepresentative Image

மீன்களுக்குத் தேவையான உணவு வகைகள்

✤ மீன்களின் வகைகளுக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்ட உணவுகள் இருக்கும். உங்கள் மீன் வகைக்கு ஏற்ப உணவுகள் வாங்கி போடவேண்டும்.

✤ மீன்களுக்கு உணவு கொடுப்பது என்பது எளிதான காரியம் அல்ல சிறிய மீன்கள் என்றால் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உணவு போடாமல் அளவாகப் போடுவது நல்லது.

✤ அதிகளவில் உணவு போட்டால் மீன் தொட்டிகளில் அழுக்குகள் படியவும் மற்றும் மீன்கள் அதிகமாக உணவு சாப்பிட்டால் அது விரைவாக இறப்பதற்குக் வாய்ப்புகள் உள்ளது.

வீட்டில் வளர்க்கும் மீன்களை பராமரிப்பது எப்படி | How to care for fish at homeRepresentative Image

மீன் தொட்டியில் பயன்படுத்தும் மோட்டார்கள்

✤ மீன் தொட்டியில் பயன்படுத்தும் மோட்டார்கள் என்பது மீன்களின் வகைகளைப் பொருத்து மாறுபடும். பெரும்பாலான மீன் வகைகளில் மோட்டார் என்பது பயன்படுத்த வேண்டும். ஆனால் ஒரு சில மீன்களுக்கு மோட்டார்கள் இல்லாமல் பயன்படுத்தலாம்.

✤ மீன் தொட்டியில் ஃபில்டருடன் கூடிய மோட்டார் எல்லாத் தொட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அது போன்ற மோட்டார்களை வாங்கி பொருத்திக் கொள்ளவும். அத்துடன் ஏர் பம்ப பொருத்த வேண்டும்.

✤ இது எல்லாம் மீன் தொட்டிகளில் பொருத்த வேண்டும். அதற்குப் பின், அது அழுக்காக ஆரம்பித்தால்   உடனடியாக மாற்ற வேண்டும்.

✤ மீன் தொட்டியில் மோட்டார் இல்லாமல் வளரும் மீன் கப்பி மற்றும் ஃபைட்டர் போன்ற வகைகளைச் சேர்ந்தது.

வீட்டில் வளர்க்கும் மீன்களை பராமரிப்பது எப்படி | How to care for fish at homeRepresentative Image

மீன் தொட்டிகளில் இருக்கும் லைட் மற்றும் கற்கள்

லைட்

✤ மீன் தொட்டிகளில் வெளிச்சத்திற்காக லைட் பயன்படுத்த வேண்டும். அதை எல்லா நேரங்களிலும் எரியவிடக் கூடாது. ஒரு 8 முதல் 9 மணிநேரம் வரை எரியவிட வேண்டும்.

✤ இது அதிக நேரம் எரியவிட்டால் அது விரைவில் தொட்டியை அசுத்தமாக மாற்றுவதற்கு வாய்ப்புகள் அதிகம். மீன் தொட்டியைச் சூரிய ஒளியில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பாசி அதிகளவில் வந்து தொட்டியை அசுத்தமாக்கும்.

வீட்டில் வளர்க்கும் மீன்களை பராமரிப்பது எப்படி | How to care for fish at homeRepresentative Image

கற்கள்

✤ மீன் தொட்டிகளில் அனைத்திலும் கற்கள் மற்றும் பொம்மைகள் பயன்படுத்துவது தேவையில்லை.

✤ மீன்களின் வகைகளை பொறுத்து கற்கள் பயன்படுத்தலாமா என மீன்கள் வாங்கும் கடைகளில் அல்லது மீன் வளர்க்கும் மையத்தில் அணுகவும் அதைப் பற்றித் தெரிந்து கொள்ளவும்.

வீட்டில் வளர்க்கும் மீன்களை பராமரிப்பது எப்படி | How to care for fish at homeRepresentative Image

மீன் தொட்டியில் வளர்க்கும் மீன்கள்

✤ வாங்கும் மீன்களை அனைத்தையும் ஒரே தொட்டியில் விடாமல் மீன்கள் வகைகள் வாங்கும் போது எந்த வகை மீன்களுடன்  மற்றவகை மீன்கள் சேர்க்க வேண்டும். எனத் தெரிந்து கொள்ளவேண்டும்.

✤ அதைப் பின்பற்றி, மீன்களை மீன் தொட்டியில் விட வேண்டும். மீன்களை அதிகளவில் விடுவதை தவிர்க்கவும். மீன் தொட்டியில் எந்த அளவிற்கு இடம் உள்ளது எனத் தெரிந்து கொண்டு மீன்களை விடுவது நல்லது.

வீட்டில் வளர்க்கும் மீன்களை பராமரிப்பது எப்படி | How to care for fish at homeRepresentative Image

மீன் தொட்டியைச் சுத்தம் செய்வது எப்படி ?

✤ மீன் தொட்டியை மாதத்திற்கு, ஒரு முறை கண்டிப்பாகச் சுத்தம் செய்வது என்பது அவசியம். மீன்களின் செயல்பாட்டில் மாற்றம் இருந்தால் மீன் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்.

✤ மீன் தொட்டியைச் சுத்தம் செய்வதற்கு முதலில் தொட்டியில் உள்ள மீன்கள் மற்றும் தண்ணீர்,கற்கள் பொம்மைகள் என அனைத்தையும் மற்றொரு தொட்டியில் மாற்ற வேண்டும்.

✤ மீன் தொட்டியை நன்றாகத் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய வேண்டும். கற்கள் மற்றும் பொம்மைகளை எடுத்து அதில் அழுக்குகள் அதிகமாக இருந்தால் அதயையும் நன்றாக கழுவவும்.

✤ கழுவிய தொட்டியைச் சூரிய வெளிச்சத்தில் நன்றாகக் காயவிட வேண்டும்.அதில் புதிய தண்ணீரை 70 சதவீதம் மற்றும் பழைய தண்ணீரை 30 சதவீதம் எனச் சேர்த்துக் கொள்ளவும்.

அதில் பழைய படியே கற்கள் மற்றும் பொம்மைகளைச் சேர்த்துக் கொள்ளவும். அதில் கடைசியாக மீன் கள் விட்டு உணவுகளைச் சிறிது நேரத்திற்குப் பிறகு, போடுவது நல்லது.

✤ இந்த முறையைப் பின்பற்றி வீட்டில் மீன்கள் வளர்க்கலாம்.எந்த விதமான பிரச்சனைகளும் வராது. மாதத்திற்கு ஒரு முறை கட்டாயமாக மீன் தொட்டியைச் சுத்தம் செய்ய வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்