கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக்கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளை தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.
கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்திற்கு வரவேற்கிறோம். பொதுவாக, கர்ப்பத்தின் ஐந்தாவது மாதம் கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு நல்ல மாதமாகவே இருக்கிறது. ஏனென்றால் இந்த மாதத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் காலை நோய் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அதேபோல், மனதில் ஒரு நிம்மதியும் குடிக்கொள்ளும். இந்த மாதத்தில் தான் தாய் தனது குழந்தையின் அசைவுகளை உணர்வுத் தொடங்குகிறாள். குழந்தையின் வளர்ச்சியும் இந்த மாதத்தில் இருந்து தான் தொடங்கும். சரி வாங்க, ஐந்து மாதத்தில் கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.
முதலில் செய்ய வேண்டியது மகளிர் மருத்துவ நிபுணரிடம் சென்று அல்ட்ராசவுண்ட் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை தெரிந்துக்கொள்ள முடியும்.
5 வது மாதத்தில், உங்கள் வயிறு வளர ஆரம்பிக்கும் போது தோல் மிகவும் உணர்திறன் வாய்ந்ததாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், சில பெண்களுக்கு உடலின் பல பகுதிகளில் தடிப்புகள் தோன்றவும் வாய்ப்புள்ளது. எனவே, வசதியான ஆடைகளை அணிவது மிகவும் முக்கியம். மேலும், உடலின் ஈர்ப்பு மையம் மாறத் தொடங்கும் போது, தடுமாறுவதைத் தவிர்க்க வசதியான காலணிகளை அணிந்துக் கொள்ளுங்கள்.
இந்த மாதத்தில் தோரணை மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே, உட்காருதல், நிற்தல், தூங்குதல் என அனைத்துவிதமான தோரணையைப் பற்றியும் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், எப்போது உட்காரும்போதும் படுக்கும்போதும் முதுகை நேராக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அதேபோல், கருப்பைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்பதால் எப்போதும் இடது பக்கத்தில் தூங்குவது நல்லது. கர்ப்பிணிகளுக்காகவே பிரத்யேக தலையணை விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கி பயன்படுத்தலாம்.
புத்தகம் படிப்பது, பாட்டு கேட்பது என உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள இந்த மாதத்தில் இருந்தே தொடங்க வேண்டும். ஏனென்றால், முந்தைய மாதங்களை விட இந்த மாதத்திலிருந்து உங்க வயிற்றில் வளரும் சிசு எல்லாவற்றையும் உணரத் தொடங்கும். அவ்வப்போது உங்க குழந்தையிடம் பேச்சு கொடுக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வர உங்கள் இருவருக்கும் இடையே உள்ள இந்த இணைப்பை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
தினமும் காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் உங்கள் உள்ளங்கையை உங்கள் வயிற்றின் மேல் வைத்து உங்கள் தூக்கம் எப்படி இருந்தது மற்றும் எழுந்ததும் நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்பதை சுருக்கமாக குழந்தையிடம் கூறுங்கள். உங்களுக்குள்ளும் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை குழந்தையிடம் சொல்லுங்கள்.
ஐந்தாவது மாதத்தில் மலச்சிக்கல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். சீரான இடைவெளியில் தண்ணீர் அல்லது பழச்சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல், இந்த காலகட்டத்தில் சரியான ஊட்டச்சத்துக்களைப் பெறுவதும் முக்கியம், அது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே தினமும் குறைந்தது 2 கிளாஸ் பால் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது தயிரையும் தேர்வு செய்யலாம்.
அதேபோல், தினமும் அதிகாலையில் சூரிய உதயத்தின் போது சூரிய ஒளி உடலில் படுமாறு சிறிது நேரம் நிற்கவும். ஏனென்றால், கால்சியம் சத்து தாய்க்கும் சேய்க்கும் தேவைப்படும் ஊட்டச்சத்துகளில் மிகவும் முக்கியமானது. மேலும், உயிரணு வளர்ச்சிக்கு புரதம் முக்கியமானது. எனவே, புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். நார்ச்சத்துள்ள உணவுகள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும் என்பதால் சாலட்ஸ் மற்றும் பழங்களை போதுமான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த காலகட்டத்தில் கடுமையான வேலைகள் செய்வது நல்லதல்ல என்றாலும், சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது முக்கியம். அதனால், காலை நேரத்தில் சிறிது நேரம் மெதுவாக நடைப்பயிற்சி செய்யலாம். இது உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுவதோடு, சூரியனில் இருந்து வைட்டமின் D-ஐ உறிஞ்சவும் உதவுகிறது. அதேசமயம் போதுமான அளவு ஓய்வு எடுக்க வேண்டியதும் அவசியம். மேலும், அடிவயிற்றில் உள்ள அழுத்தம் காரணமாக, ஒரு சில பெண்களுக்கு கைகள் மற்றும் கால்கள் வீங்கியிருக்கும். இந்த வீக்கத்தைத் தவிர்க்க கால்களை சற்று உயர்த்தயவாறு வைத்திருந்தாலே போதுமானது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…