Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரு வருடமாக வாக்கிங் செய்தும் உடல் எடை குறையவில்லை என்று யோசிக்கிறீர்களா ?

Vaishnavi Subramani Updated:
ஒரு வருடமாக வாக்கிங் செய்தும் உடல் எடை குறையவில்லை என்று யோசிக்கிறீர்களா ?Representative Image.

பலருக்கும் வாக்கிங் செய்வது என்பது மிகவும் பிடிக்கும் மற்றும் அது எந்த வித செலவுகளும் இல்லாமல் எளிதில் உடல் எடையைக் குறைக்கலாம். எனப் பலர் சொல்லுவதை கேட்டு வாக்கிங் செய்து உடல் எடை குறையவில்லை என வருந்துகிறீர்களா. ஒரு வருடத்திற்கு மேல் வாக்கிங் செய்தும் உடல் எடை குறையவில்லை என நினைக்கிறீர்களா. உங்களுக்கு இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கும். இந்த பதிவில்  ஒரு வருடங்களாக வாக்கிங் செய்தும் உடல் எடை குறையவில்லை என யோசிக்கிறீர்களா எப்படி உடல் எடை குறைப்பது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரு வருடமாக வாக்கிங் செய்தும் உடல் எடை குறையவில்லை என்று யோசிக்கிறீர்களா ?Representative Image

வாக்கிங் செய்யும் போது ஏற்படும் தவறுகள்

✤ நீங்கள் தினம்தோறும் வாக்கிங் செல்லும் போது மெதுவாக ஓடுவது தான் வாக்கிங் என நினைத்தால் அது தவறு. நீங்கள் நடப்பது போல் வாக்கிங் செய்யக் கூடாது.

✤ நீங்கள் முடிந்த வரை கொஞ்சம் வேகமாக ஓட வேண்டும். வேகமாக ஓடினால் தினமும் அரைமணி நேரம் ஓடினால் உடலிலிருந்து 150 கலோரிகள் குறையும். ஆனால் வாக்கிங் செய்த பிறகு, பசிக்கிறது எனக் கடைகளில் விற்கும் எண்ணெய் உணவுகளை வாங்கி சாப்பிடக் கூடாது. அதற்குப் பதிலாகச் சத்து நிறைந்த உணவுகள் மிக அதிகமாகவும் சாப்பிடாமல் அளவாகத் தான் சாப்பிட வேண்டும்.

✤ நீங்கள் தினமும் வாக்கிங் செய்பவர்களாக இருந்தால் உணவில் மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும். உணவுகளில் நீங்கள் எந்த அளவிற்குக் கவனம் செலுத்துகிறீர்களோ அது தான் எடைக் குறைப்பதற்கு மிகவும் முக்கியமாக உதவும்.

ஒரு வருடமாக வாக்கிங் செய்தும் உடல் எடை குறையவில்லை என்று யோசிக்கிறீர்களா ?Representative Image

✤ வருடக்கணக்காக வாக்கிங் செய்து உடல் எடையைக் குறையவில்லை என்றால் அதற்கு காரணம் உணவுப் பழக்கங்கள் மற்றும் அளவான தூக்கம் தான் உடல் எடையைக் குறைக்க உதவும். அதைச் சரியாகச் செய்யவில்லை என்றால் உடல் எடை குறையாது.

✤ நீங்கள் தினமும் நடைப்பயிற்சி செய்தால் அன்றை நாளில் நீங்கள் எந்த ஒரு துரித உணவுகளைக் கடைகளில் சாப்பிடுவது மற்றும் வீட்டில் எண்ணெய் உணவுகளை அதிகளவில் சாப்பிடுவது எனச் செய்தால் நீங்கள் காலையில் செய்த பயிற்சிக்குப் பயனில்லை.

✤ அதனால் நடைப்பயிற்சி செய்பவர்களாக இருந்தால் தினமும் 6லிருந்து 8 மணிநேரம் தூக்கம் மற்றும் உணவுப் பழக்கங்கள் தினமும் அளவான உணவுகளைப் பின்பற்றினால் விரைவில் உடல் எடை அதிகமாகக் குறையும்.

✤ உடல் எடை குறைக்கும் போது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் அவசியமான ஒன்று தான். நீங்கள் அதிகமாக எடை குறைக்க வேண்டும் என நினைத்து உங்கள் ஆரோக்கியத்தைக் குறைத்து விடாதீர்கள். நீங்கள் உங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை அளவாகச் சாப்பிடலாம்.

ஒரு வருடமாக வாக்கிங் செய்தும் உடல் எடை குறையவில்லை என்று யோசிக்கிறீர்களா ?Representative Image

✤ நீங்கள் முதல் முறையாக உடல் எடை குறைப்பவராக இருந்தால் அனைத்து பயிற்சிகளையும் செய்யாமல் முதல் நடைப்பயிற்சி ஆரம்பித்து அதை ஒரு மாதம் செய்த பிறகு, உடலின் வலிமை திறனை மேம்படுத்திய பிறகு, ஜிம் செல்வது மற்றும் மற்ற உடற்பயிற்சிகள் செய்யலாம்.

✤ இதில் முக்கியமாக நடைப்பயிற்சி ஆரம்பித்த பிறகு, உணவு பழக்கங்கள் பின்பற்ற வேண்டும். கடைகளில் உள்ள எண்ணெயில் செய்த உணவுப் பொருள்கள் தவிர்ப்பது மற்றும் வீட்டில் சாப்பிடும் உணவுகளில் கொழுப்பு நிறைந்த உணவுகளாக இருந்தால் அதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

✤ வாக்கிங் செய்தால் மட்டும் உடல் எடை குறையாது. உடலுக்கு நாம் அளிக்கும் உணவுகள் மற்றும் நிம்மதியான உறக்கம் போன்ற அனைத்திற்கும் முக்கியத்துவம் தந்தால் மட்டுமே உடல் எடை குறையும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்