பூந்தி என்றாலே கலராக மற்றும் காரம் ஆகவும் தான் இருக்கும். ஆனால் இந்த வெள்ளை பூந்தி என்பது வெள்ளையாகவும் மற்றும் இனிப்பாகவும் இருக்கும். இந்த பூந்தி உருவான மற்றும் பிரபலமாக உள்ள ஒரு இடம் என்றால் மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டம் தான். இது ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு இந்த வெள்ளை பூந்தி மிகவும் பிடிக்கும். இந்த வெள்ளை பூந்தியை கமர்புகூரில் மிகவும் பாரம்பரியமானதாக உள்ளது. இந்த பதிவில் வெள்ளை பூந்தி எப்படிச் செய்வது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
✤ இந்த வெள்ளை பூந்தி கமர்புகூரில் என்ற ஊரில் இந்த பூந்தியைப் பாரம்பரியமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
✤ இந்த பூந்தி சாப்பிட வேண்டும் எனப் பலரும் பல ஊரிலிருந்து வந்து சாப்பிடுவார்களாம். அப்படிப்பட்ட வெள்ளை பூந்தியை இந்த பதிவில் எப்படிச் செய்வது எனப் பார்க்கலாம்.
✤ கடலை மாவு- 1 கிலோ
✤ அரிசி மாவு – 3 கிலோ
✤ சர்க்கரை – 1கிலோ
✤ தண்ணீர் – 1 டம்ளர்
✤ முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கிலோ சர்க்கரை சேர்த்து அத்துடன் ஒரு டம்ளர் அளவிற்குத் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்ச வேண்டும்.
✤ அதை அவ்வப்போது கரண்டியில் சிறிதளவு எடுத்து அதைத் தொட்டுப் பார்த்தால் கம்பி பதத்திற்கு வந்த உடன் இறக்கி வைக்க வேண்டும்.
✤ மற்றொரு பாத்திரத்தில் மூன்று கிலோ அரிசி மாவு மற்றும் ஒரு கிலோ கடலை மாவு சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.
✤ அதில் தேவையான அளவிற்குத் தண்ணீர் சேர்த்து கட்டிசேராமல் கலக்க வேண்டும். அடுத்து ஒரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் பூந்தி பொரிக்கும் அளவிற்கு எண்ணெய் சேர்த்து, அதைச் சூடுபடுத்த வேண்டும்.
✤ சூடான எண்ணெயில் கலக்கிய கடலை மாவை ஊற்றி பூந்தி தட்டில் அல்லது கரண்டியில் ஊற்றி, அதை அப்படியே அடுப்பில் உள்ள எண்ணெயில் மேல் வைத்து கரண்டியைத் தேய்த்தால் அதிலிருந்து சிறிது சிறிதாக பிரிந்து பூந்தி வடிவத்தில் விழும் அதைப் பொரித்து எடுக்க வேண்டும்.
✤ அதைச் சிறிய நிமிடங்கள் ஆறவிட்ட பிறகு, அதைத் தயார் செய்த சர்க்கரை பாவில் போட்டு ஒரு மணிநேரம் ஊறவைத்தால் எடுத்தால் வெள்ளை பூந்தி தயார். சூடான மற்றும் சுவையான,இனிப்பான வெள்ளை பூந்தி தயார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…