Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உடல் எடையை குறைக்க ஒரு சுவையான ஓட்ஸ் ரெசிபி

Vaishnavi Subramani Updated:
உடல் எடையை குறைக்க ஒரு சுவையான ஓட்ஸ் ரெசிபிRepresentative Image.

உடல் எடையைக் குறைக்கப் பல உடற்பயிற்சிகள் செய்தாலும் உணவு சாப்பிடுவதில் கட்டுப்பாடாக இருந்தால் மட்டும் உடல் எடை குறையும். அதனால் காலையில் ஒரு உணவு மற்றும் மதியம், இரவு என அளவாக மட்டும் சாப்பிடுவது, காரம், உப்பு போன்றவை சேர்த்தாமல் சாப்பிடுவது என்பது கஷ்டம். ஓட்ஸ் அல்லது பிற உணவுகள் எது சாப்பிட்டாலும் ருசியாக இருக்காது. சிலர் உடல் எடை குறைக்க வேண்டும் ஆனால் ருசியாகவும் சாப்பிட வேண்டும் என நினைப்பார்கள். இது போன்ற பல கேள்விகள் உள்ளது.

இந்த பதிவில் உடல் எடையைக் குறைக்க முடியும் அத்துடன் ருசியான ஒரு உணவையும் சாப்பிட முடியும் அது எப்படி என யோசிக்கிறீர்களா. இந்த பதிவில் உடல் எடையை குறைக்க ஒரு சுவையான மற்றும் ருசியான ஓட்ஸ் ரெசிபி எப்படிச் செய்வது எனப் பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க ஒரு சுவையான ஓட்ஸ் ரெசிபிRepresentative Image

தேவையான பொருள்கள்

✤ கேரட் – 3

✤ உளுத்தம் பருப்பு – 1/2கப்

✤ வெங்காயம் – 3

✤ மிளகாய்த் தூள் – 1/2ஸ்பூன்

✤ மிளகு பொடி – 1/4 ஸ்பூன்

✤ உப்பு,எண்ணெய் – சிறிதளவு

✤ ஓட்ஸ் -1/2கப்

✤ தண்ணீர் – 4கப்

உடல் எடையை குறைக்க ஒரு சுவையான ஓட்ஸ் ரெசிபிRepresentative Image

செய்முறை

✤ முதலில் ஒரு பாத்திரத்தில் அரை கப் அளவிற்கு  உளுத்தம்பருப்பைச் சேர்த்து அத்துடன் தண்ணீர் தேவையான அளவு சேர்த்து அதை ஊற வைக்கவேண்டும். அதை அரைமணி நேரம் ஊற விடவும்.

✤ மற்றொரு பாத்திரத்தில் அரை கப் அளவிற்கு ஓட்ஸ் சேர்த்து அதில் தண்ணீர் சேர்த்து நன்றாக ஊற வைக்கவேண்டும். இதையும் அரை மணி நேரம் ஊற விடவும்.

✤ வெங்காயம் எடுத்து அதன் மேல் உள்ள தோல் அகற்றி, தண்ணீரில் வெங்காயத்தை கழுவ வேண்டும். அதன் பின், வெங்காயத்தை நன்றாக பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதே போல் கேரட் எடுத்து மேல் தோல் சீவிய பின், தண்ணீரில் கழுவ வேண்டும். அதன் பின், நன்றாக பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

உடல் எடையை குறைக்க ஒரு சுவையான ஓட்ஸ் ரெசிபிRepresentative Image

✤ ஊறவைத்த உளுத்தம்பருப்பை எடுத்து இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் மாற்றிக் கழுவ வேண்டும். கழுவிய உளுத்தம்பருப்பை மிக்ஸி, ஜாரில் சேர்த்து அத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

✤ ஊறவைத்த ஓட்ஸ் எடுத்து ஒன்று அல்லது இரண்டு முறை அழுக்குகள் போக நன்றாக கழுவ வேண்டும். அதன் பின், மிக்ஸி,ஜாரில் இதையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். நன்றாக இரண்டையும் சேர்த்து அரைத்து தோசைமாவு பதத்திற்கு வந்த உடன் அதை எடுத்து மற்றொரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.

உடல் எடையை குறைக்க ஒரு சுவையான ஓட்ஸ் ரெசிபிRepresentative Image

✤ அந்த மாவில் சிறிதளவு உப்பு மற்றும் அரை டிஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் கால் டிஸ்பூன் அளவிற்கு மிளகு பொடி சேர்த்து நன்றாகக் கலக்கவேண்டும்.

✤ அத்துடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் கேரட் சேர்த்து நன்றாகக் கலக்கினால் ஓட்ஸ் பணியாரத்திற்கு மாவு தயார்.

✤ அடுப்பில் பணியார கல் வைத்து அதில் எண்ணெய் சிறிதளவு தேய்த்து நன்றாகச் சூடான பின், கலக்கி வைத்த மாவை ஊற்றி அது ஒரு புறம் வெந்த உடன் மறுபுறம் திருப்பிவிட்டால் வெந்த உடன் எடுத்தால் சூடான சுவையான ஓட்ஸ் பணியாரம் தயார்.

✤ இதைக் குழப்பு அல்லது சட்னி உடன் சேர்த்துச் சாப்பிடலாம். இதைச் சாப்பிட்டால் சுவையாகவும், ருசியாகவும் உடல் எடை அதிகரிக்காமல் குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்