Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி | easy way to lose belly fat

Vaishnavi Subramani Updated:
வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி | easy way to lose belly fatRepresentative Image.

சிறுவர்கள் முதலில் பெரியவர்கள் வரை பலருக்கும் உள்ளது இந்த வயிற்றுப் பகுதி கொழுப்பு. இது அதிகமாக அமர்ந்து வேலை செய்யும் பலருக்கும் மற்றும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் இந்த மாதிரியான கொழுப்புகள் வரும். இதைச் சரிசெய்வதற்குப் பலரும் ஜிம் அல்லது டயட் போன்றவை செய்தும் கொழுப்புகள் குறையாது. அதனால் இந்த வயிற்று பகுதிகளில் இருக்கும் கொழுப்புகளைக் குறைப்பது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி | easy way to lose belly fatRepresentative Image

வயிற்றுப்பகுதிகளில் இருக்கும் கொழுப்புகளைக் குறைப்பது எப்படி

நீங்கள் தினமும் காலையில் ஒரு 30 நிமிடங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உடற்பயிற்சி செய்யவேண்டும். இதனால் வயிற்றுப் பகுதிகளில் உள்ள கொழுப்புகளை ஒரு நாள் செய்தால் குறையாது.

தினமும் தொடர்ச்சியாகச் செய்தால் மட்டும் இந்த உடற்பயிற்சிக்கான பலன் தெரியும்.கீழே குறிப்பிட்டுள்ள படிகளைப் பின்பற்றி தினத்தோறும் உடற்பயிற்சி செய்வதால் விரைவில் வயிறு மற்றும் உடலில் உள்ள மற்ற பகுதியிலும் உள்ள கொழுப்புகள் குறையும்.

வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி | easy way to lose belly fatRepresentative Image

முதல் படி உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக, உடற்பயிற்சிக்குச் செய்வதற்கு உடலைத் தயார் செய்வதற்கு சில பயிற்சியாக கை கால் அசைத்து சாதாரணமான உடற்பயிற்சிகள் செய்யவேண்டும்.

இந்த முதல் நிலை உடற்பயிற்சி செய்வதால் அடிவயிற்றுப் பகுதிகளில் இருக்கும் கொழுப்புகளைக் குறைப்பதற்காகச் செய்வது ஆகும்.

அதற்குப் பின், முதல் பயிற்சி, முதலில் கால் இரண்டையையும் நேராக வைத்துக் கொள்ளவும். அதன் பின், இடது கால் மேலே தூக்கும் போது வலதுகையால் இடது கால் பாதத்தைத்  தொடவேண்டும்.

அதற்குப் பின் காலை கீழே இறக்கிய பின்,வலது காலை தூக்கிக் கொண்டு இட து கையால் காலை தொடவேண்டும். இந்த பயிற்சியில் கால் தூக்கும் போது மூச்சை வெளியே விட வேண்டும். இது போன்று 10 முறை செய்தால் அது ஒரு செட்டி. இது போல் ஒரு நாளைக்கு மூன்று செட்டி செய்ய வேண்டும்.

வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி | easy way to lose belly fatRepresentative Image

இரண்டாம் நிலை உடற்பயிற்சி

முதல் படி போல் இரண்டாம் படியும் இருக்கும் ஆனால் சிறிய மாறுபாடுகள் இருக்கும். அது என்வேண்று பார்க்கலாம். முதல் படியில் காலை மேலே கீழே ஏன தூக்கியும் இறக்கியும் செய்யவேண்டும். ஆனால் இரண்டாம் நிலையில் காலை முழங்கால் அளவிற்கு மடக்க வேண்டும். இந்த பயிற்சி செய்யும் போது மூச்சுவிடுவதைக் கவனிக்க வேண்டும்.

வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி | easy way to lose belly fatRepresentative Image

மூன்றாம் படி உடற்பயிற்சி

இந்த மூன்றாம் நிலை உடற்பயிற்சியில் முதல் இரண்டு நிலை உடற்பயிற்சியை விட இந்த உடற்பயிற்சி சிறிதளவு கடினமாக இருக்கும். ஆனால் இடுப்பு மற்றும் தொடையில் இருக்கும் அனைத்து கொழுப்புகளும் எளிதில் குறையும்.

முதலில் இரண்டு கைகளையும் மடக்கிக் கொண்டு நெஞ்சுக்கு நேராக வைத்துக் கொள்ளவும். அதன் பின், காலை மேலே கீழே என ஏற்றி இறக்கவேண்டும். இதனைச் செய்யும் போது கைகளின் அமைப்பை மாற்றக் கூடாது. இப்படி ஒரு 20 முறை செய்யவேண்டும்.

இந்த உடற்பயிற்சியைச் செய்வதாலும் வயிற்றுப் பகுதியில் சைடியில் இருக்கும் கொழுப்புகள் குறையும். கால்களை அசைப்பதானால் தொடைகளில் இருக்கும் கொழுப்புகள் குறையும்.

வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி | easy way to lose belly fatRepresentative Image

நான்காம் படி உடற்பயிற்சி

மூன்றாம் உடற்பயிற்சி போல் மாறாக அதில் கைகளை அசைக்காமல் கால்களை மற்றும் அசைக்க வேண்டும். ஆனால் இதில் கையையும் அசைத்து கை மற்றும் கால் இரண்டையும் பக்கவாட்டில் படும் படி இந்த உடற்பயிற்சியைச் செய்ய வேண்டும். இதனால் வயிற்றில் உள்ள கொழுப்புகள் குறையும்.

வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி | easy way to lose belly fatRepresentative Image

ஐந்தாம் படி உடற்பயிற்சி

முதலில் நான்கு படி உடற்பயிற்சியைக் காட்டிலும் இந்த படி நிலை புதுவிதமாக இருக்கும். இதில் “L SHAPE” வடிவில் இந்த உடற்பயிற்சி செய்ய வேண்டும். முதலில் சமமாக இருக்கும் இடத்தை தேர்வுசெய்து கொள்ளவேண்டும்.

அதில் சமமாகப் படுத்துக் கொள்ள வேண்டும். முதலில் கால்களையும் கைகளைத் தூக்கிக் கொண்டு கைகளால் காலை தொடவேண்டும். இடுப்பைத் தூக்கக் கூடாது. இதைச் செய்வதால் இடுப்பு பகுதியில் இருக்கும் கொழுப்புகள் முழுவதுமாக குறையும்.

இந்த அனைத்து படி நிலை உடற்பயிற்சிகளும் தினத்தோறும் செய்தால் மிகவிரைவில் வயிற்றில் உள்ள கொழுப்புகள் முழுவதுமாகவும் குறையும். இந்த மாதிரியான உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது உணவுப் பழக்கங்களில் மிகவும் கட்டுப்பாடுகளாக இருக்கவேண்டும்.வெளியில் வாங்கி சாப்பிடும் உணவு மற்றும் துரித உணவுகள் சாப்பிடக் கூடாது. அதற்குப் பதிலாக வைட்டமின் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

இந்த உடற்பயிற்சி செய்யும் போது வெகுநேரம் அமர்ந்து வேலை செய்பவர்களாக இருந்தால் ஒரு மணிநேரத்திற்கு ஒரு தடவை எழுந்து கைகால்களை அசைத்து சிறிது நேரம் வெளியில் நடந்து செல்வது நல்லது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்